என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மதிப்பு மிக்க பிரபலம் பட்டியலில் தொடர்ந்து 2-ம் ஆண்டாக ரன்வீர் சிங், ஷாருக்கானை முந்திய கோலி
- 2024-ம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 231.1 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
- 2023-ல் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியனாக இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர் விளம்பரம், கிரிக்கெட் வருமானம் மூலம் அதிக அகளவில் சம்பாதிக்கிறார். இதனால் அவரின் பிராண்ட் மதிப்பு எப்போதுதும் உயர்ந்ததாகவே இருந்து வருகிறது.
தொடர்ந்து 2 ஆவது ஆண்டாக மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் ரன்வீர்சிங், ஷாருக்கான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்தாண்டை விட விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு இந்தாண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் விராட் கோலியின் மதிப்பு உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.
க்ரோல் (Kroll) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, 2024-ம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 231.1 மில்லியன் அமெரிக்க டாலராகும். 2023-ல் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியனாக இருந்தது.
2 ஆம் இடத்தில உள்ள பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் பிராண்ட் மதிப்பு 170.7 மில்லியன் டாலராகும். 3 ஆம் இடத்தில உள்ள ஷாருக்கானின் பிராண்ட் மதிப்பு 145.7 மில்லியன் டாலராகும். கடந்தாண்டை விட ஷாருக்கானின் பிராண்ட் மதிப்பு இந்தாண்டு 21% உயர்ந்துள்ளது.
116.4 மில்லியன் டாலர் மதிப்புடன் ஆலியா பட் 4 ஆம் இடத்திலும் 112.2 மில்லியன் டாலர் மதிப்புடன் சச்சின் தெண்டுல்கர் 5 ஆம் இடத்திலும் உள்ளனர்.
102.9 மில்லியன் டாலர் மதிப்புடன் எம்.எஸ்.தோனி 7 ஆம் இடத்திலும் 48.4 மில்லியன் டாலர் மதிப்புடன் ரோகித் சர்மா 17 ஆம் இடத்திலும் 43.1 மில்லியன் டாலர் மதிப்புடன் ஹர்திக் பாண்ட்யா 20 ஆம் இடத்திலும் 38.1 மில்லியன் டாலர் மதிப்புடன் பும்ரா 22 ஆம் இடத்திலும் உள்ளனர்.






