என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அமெரிக்காவுக்கு விழுந்த பெரிய அடி - சம்பவம் செய்த ஜெய் ஷா
- இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
- H1B விசா கட்டணத்தை டிரம்ப் பல மடங்கு உயர்த்தியது இந்தியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
இதனால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே H1B விசா கட்டணத்தை டிரம்ப் பல மடங்கு உயர்த்தியது இந்தியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.
இந்தியாவுக்கு அமெரிக்கா பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு பெரிய பின்னடைவை ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா கொடுத்துள்ளார்.
அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது. அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசி விதிமுறைகளைத் தொடர்ச்சியாக மீறியதும், முறையான நிர்வாக அமைப்பைச் செயல்படுத்தத் தவறியதுமே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலவேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஜெய் ஷா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






