என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 3-வது முறையாக மோத வாய்ப்பு
- சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
- ஆசிய கோப்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 3-வது முறையாக மோத உள்ளன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
2-வது அணியாக முன்னேறுவது யார்? என்பது இன்று தெரியும். இன்று நடைபெறம் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இலங்கை அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.
பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மீண்டும் மோதும். இந்தப் போட்டித் தொடரில் இரு அணிகளும் ஏற்கனவே 2 முறை மோதி இருந்தன. 2 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றது. கடந்த 14-ந்தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் 21-ந்தேதி நடைபெற்ற 'சூப்பர் 4' சுற்று போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இரு அணிகள் இடையேயான ஆட்டத்தில் விளையாட்டுக்கு அப்பால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. கைகுலுக்காத நிகழ்வு, வீரர்கள் இடையேயான வாக்குவாதம், ஆத்திரமூட்டும் சைகைகள் போன்ற சம்பவங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.






