
சென்னைக்கு எதிரான 13-வது போட்டியில் அவர் களம் இறங்கவில்லை. பின்னர், முதுகு வலி காரணமாக அவர் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இந்நிலையில் ரபாடா இழப்பை டிரென்ட் போல்ட் மூலம் நிரப்புவோம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையல் ‘‘நாங்கள் டிரென்ட் போல்ட் போன்ற உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துள்ளோம். கடந்த சீசனில் போல்ட் டெல்லி அணிக்காக மிகவும் சிறப்பாக பந்து வீசினார். ரபாடா இழப்பை அவரை கொண்டு நிரப்ப முடிவும் என்று நாங்கள் நினைக்கிறோம்’’ என்றார்.