search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரென்ட் போல்ட்"

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்ற இந்தியா, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #ICCODIRankings
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 2-1 எனவும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 4-1 எனவும் கைப்பற்றியது. இதனால் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 122 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில உள்ளது. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தலா 111 புள்ளிகள் பெற்று முறையே 3 மற்றும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளன. பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன 6-வது இடத்தில் உள்ளது.



    பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 887 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 854 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா 808 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். டிரென்ட் போல்ட் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். குல்தீப் யாதவ் 4-வது இடத்திற்கு பின்தங்கினார்.
    பந்து ஸ்விங் ஆனால் நான் வித்தியாசமான பந்து வீச்சாளர் என்று நான்காவது போட்டியில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார். #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஆடுகளம் ஸ்விங் பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. இதனால் இடது கை வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட் இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். ரோகித் சர்மா (7), ஷிகர் தவான் (13), ஷுப்மான் கில் (9), கேதர் ஜாதவ் (1), ஹர்திக் பாண்டியா (16) ஆகியோரை வீழ்த்தினார்.

    தொடர்ந்து 10 ஓவர்களை வீசிய டிரென்ட் போல்ட் 4 மெய்டன் ஓவர்களுடன் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இவரது பந்து வீச்சால் இந்தியா 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 92 ரன்னில் சுருண்டது.

    இந்தியா மோசமான தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த டிரெண்ட் போல்ட், பந்து ஸ்விங் ஆனால் நான் வித்தியாசமான பந்து வீச்சாளர் என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து டிரென்ட் போல்ட் கூறுகையில் ‘‘இந்த மாயாஜாலம் எல்லாம் சீதோஷ்ண நிலையை (conditions) பொறுத்தது. பந்து காற்றிலே மூவ் ஆனதை பார்க்க சிறப்பாக இருந்தது. எப்போதுமே பந்து ஸ்விங் ஆனால் நான் வித்தியாசமான பந்துவீச்சாளர் என்று கருதுவேன். அந்த நிலையை இன்று உருவாக்கினேன்.



    இந்தியாவிற்கு எதிராக முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய விதம் ஏமாற்றம் அளிக்கிறது. எங்களுடைய திறமை குறித்து எங்களுக்குத் தெரியும். திட்டத்தை வெளிப்படுத்த ஒருநாள் போதுமானது. அந்த நாள் இன்று கிடைத்தது. இதன் மூலம் திருப்தியடைகிறோம்.

    என்னுடைய வேலை தொடக்க பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச வேண்டும் என்பதுதான். ஆகவே, என்னுடைய வேலையை நான் செய்தேன். பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட்டுகள் அடித்தனர். தொடக்கத்திலேயே சிறப்பாக விளையாட முயற்சி செய்தோம். மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு ஒரு போட்டியில் வெற்றி பெற்று உடனடியாக வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளோம்’’ என்றார்.
    பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். #PAKvNZ #NZvPAK #TrentBoult
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் சேர்த்தது. ராஸ் டெய்லர் (80 ரன்), டாம் லாதம் (68 ரன்) அரைசதம் அடித்தனர்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறினர். 34 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 6 விக்கெட்டுக்கு 131 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது. பஹார் ஜமான் (1 ரன்), பாபர் அசாம் (0), முகமது ஹபீஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் வரிசையாக கபளகரம் செய்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.



    ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய 3-வது நியூசிலாந்து வீரர் போல்ட் ஆவார். டேனி மோரிசன் (இந்தியாவுக்கு எதிராக, 1994-ம் ஆண்டு), ஷேன் பான்ட் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2007) ஆகியோர் ஏற்கனவே நியூசிலாந்து அணியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தவர்கள் ஆவர். #PAKvNZ #NZvPAK #TrentBoult


    அபுதாபியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. #PAKvNZ
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 80 ரன்கள் விளாசினார். லாதம் 68 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடீ, சதாப் கான் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    இதையடுத்து 267 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். குறிப்பாக மூன்றாவது ஓவரில் பஹார் ஜமான் (1 ரன்), பாபர் அசாம் (0), முகமது ஹபீஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் வரிசையாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

    அதன்பின்னரும் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான், ரன் குவிக்க திணறியது. கடுமையாக போராடிய சர்பிராஸ் அகமது 64 ரன்களும், இமாத் வாசிம் 50 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 47.2 ஓவர்களில் 219 ரன்களில் பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது. இதனால், நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய டிரென்ட் போல்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. #PAKvNZ    
    ×