search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்து ஸ்விங் ஆனால் நான் வித்தியாசமான பவுலர்: டிரென்ட் போல்ட் சொல்கிறார்
    X

    பந்து ஸ்விங் ஆனால் நான் வித்தியாசமான பவுலர்: டிரென்ட் போல்ட் சொல்கிறார்

    பந்து ஸ்விங் ஆனால் நான் வித்தியாசமான பந்து வீச்சாளர் என்று நான்காவது போட்டியில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார். #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஆடுகளம் ஸ்விங் பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. இதனால் இடது கை வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட் இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். ரோகித் சர்மா (7), ஷிகர் தவான் (13), ஷுப்மான் கில் (9), கேதர் ஜாதவ் (1), ஹர்திக் பாண்டியா (16) ஆகியோரை வீழ்த்தினார்.

    தொடர்ந்து 10 ஓவர்களை வீசிய டிரென்ட் போல்ட் 4 மெய்டன் ஓவர்களுடன் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இவரது பந்து வீச்சால் இந்தியா 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 92 ரன்னில் சுருண்டது.

    இந்தியா மோசமான தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த டிரெண்ட் போல்ட், பந்து ஸ்விங் ஆனால் நான் வித்தியாசமான பந்து வீச்சாளர் என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து டிரென்ட் போல்ட் கூறுகையில் ‘‘இந்த மாயாஜாலம் எல்லாம் சீதோஷ்ண நிலையை (conditions) பொறுத்தது. பந்து காற்றிலே மூவ் ஆனதை பார்க்க சிறப்பாக இருந்தது. எப்போதுமே பந்து ஸ்விங் ஆனால் நான் வித்தியாசமான பந்துவீச்சாளர் என்று கருதுவேன். அந்த நிலையை இன்று உருவாக்கினேன்.



    இந்தியாவிற்கு எதிராக முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய விதம் ஏமாற்றம் அளிக்கிறது. எங்களுடைய திறமை குறித்து எங்களுக்குத் தெரியும். திட்டத்தை வெளிப்படுத்த ஒருநாள் போதுமானது. அந்த நாள் இன்று கிடைத்தது. இதன் மூலம் திருப்தியடைகிறோம்.

    என்னுடைய வேலை தொடக்க பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச வேண்டும் என்பதுதான். ஆகவே, என்னுடைய வேலையை நான் செய்தேன். பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட்டுகள் அடித்தனர். தொடக்கத்திலேயே சிறப்பாக விளையாட முயற்சி செய்தோம். மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு ஒரு போட்டியில் வெற்றி பெற்று உடனடியாக வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளோம்’’ என்றார்.
    Next Story
    ×