என் மலர்

  செய்திகள்

  விமர்சனங்கள் பாய்ந்தபோது டோனியை விராட்கோலி ஆதரித்தது அற்புதமானது: சவுரவ் கங்குலி
  X

  விமர்சனங்கள் பாய்ந்தபோது டோனியை விராட்கோலி ஆதரித்தது அற்புதமானது: சவுரவ் கங்குலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்பியன் வீரரான டோனி மீது விமர்சனங்கள் பாய்ந்தபோது அவருக்கு விராட்கோலி ஆதரித்தது அற்புதமானது என்று இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
  கொல்கத்தா:

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் மந்தமாக விளையாடியதாக விமர்சனங்கள் எழுந்தன.

  லட்சுமணன், அகர்கர், ஆகாஷ் சோப்ரா ஆகியோர் டோனியை கடுமையாக காடினர். 20 ஓவர் அணியில் இருந்து டோனியை நீக்க வேண்டும். அவர் இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

  ஆனால் டோனிக்கு கேப்டன் விராட்கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

  கோலி கூறுகையில், இந்திய அணியில் டோனி முக்கியமான வீரர். அவர் அணிக்கு தேவை. அவரை பற்றிய விமர்சனங்கள் தேவையற்றது என்று கூறினார்.

  இந்த நிலையில் விராட் கோலியை முன்னாள் கேப்டன் கங்குலி பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

  விராட் கோலி அற்புதமான கேப்டன். ஓய்வு அறையில் அவர் வீரர்களுடன் என்ன பேசுவார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் வீரர்களுடன் அவர் பழகும் விதம் சிறப்பானது. சாம்பியன் வீரரான டோனிக்கு ஆதரவு அளிக்கும் கோலியின் செயல்பாடு அற்புதமானது.  டோனி என்னுடைய கேப்டன். அவர் அணியில் விளையாட வேண்டும் என்று கோலி கூறியுள்ளார்.

  விராட் கோலி அனைத்து சூழ்நிலைகளிலும் வெற்றி பெற விரும்புகிறார். அதில் அவர் அதிக ஆர்வமுடன் இருக்கிறார்.
  Next Story
  ×