என் மலர்
விளையாட்டு
- சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 2,500 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
- போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 4,000 பேர் பங்கேற்றனர்.
இந்திய மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம் சார்பில் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. வருகிற 9-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
35 வயதுக்கும் மேற்பட்டவருக்கான இந்த போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 4,000 பேர் பங்கேற்றனர்.
உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் இந்தப்போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா போட்டிக்கான தூதர் நடிகர் ஆர்யா, இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் பொதுச் செயலாளர் டேவிட் பிரேம்நாத், துணைத்தலைவர் எம்.செண்பகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப்போட்டி முதலில் இந்தோனேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் இந்தியாவுக்கு மாற்றப்பட்டது. 3-வது தடவையாக ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு 2000, 2006ம் ஆண்டுகளில் பெங்களூருவில் நடைபெற்றது.
கடைசியாக 2023-ம் ஆண்டு பிலிப்பைன்சில் நடந்த ஆசிய மாஸ்டர்ஸ் தடகளபோட்டியில் இந்தியா 264 பதக்கங்களை பெற்றது. சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 2,500 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நடிகர் ஆர்யா, இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்க துணைத்தலைவர் செண்பகமூர்த்தி அருகில் உள்ளனர்.
- உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள் பிரதமர் மோடியை, அவரது வீட்டில் சந்தித்தனர்.
- பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இந்தியாவில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஆண்கள் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை (கபில்தேவ் தலைமையில் 1983, டோனி தலைமையில் 2011) 50 ஓவர் உலக கோப்பையை வென்றது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள், அணி நிர்வாகிகள் நேற்று மாலை பிரதமர் மோடியை, அவரது லோக் கல்யாண் மார்க் வீட்டில் சந்தித்தனர்.
அப்போது வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். பின்னர், பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இதற்கிடையே, உரையாடலின்போது வீராங்கனைகள் ஒவ்வொருவம் பிரதமர் மோடியிடம் சுவாரஸ்ய கேள்விகளை எழுப்பினர். அதற்கு, பிரதமர் மோடியும் பதில் அளித்து வந்தார்.
அப்போது, டாப் பேட்ஸ்மேனான ஹர்லீன் தியோல் பிரதமர் மோடியிடம்," எனக்கு உங்களிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. எப்படி உங்கள் இவ்வளவு பிரகாசமாகவும், பொலிவாகவும் இருக்கிறீர்கள்..? உங்களது தினசரி சரும பராமரிப்பு என்ன?" என்று கேட்டார்.
ஹர்லீன் தியோலின் இந்த கேள்வியால் அங்கு சிரிப்பலை எழுந்தது. பிரதமர் மோடியும் சிரித்துக் கொண்டே இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை" என்றார்.
அப்போது,"நாட்டு மக்களின் அன்புதான் பிரதமரை பிரகாசிக்க வைக்கிறது" என்று ஆல்ரவுண்டர் ஸ்னே ராணா கூறினார்.
பின்னர் மீண்டும் பேசிய பிரதமர்,"நிச்சயமாக அதுதான் உண்மை. இது ஒரு பெரிய பலம். நான் அரசாங்கத்தில் பல ஆண்டுகளாக உழைக்கிறேன்.
இவை அனைத்தையும் மீறி, ஆசீர்வாதங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. அது இறுதியில் உங்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.
- அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- தீப்தயான் கோசும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம்பெற்றனர்.
2-வது சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி வெற்றியுடன் கணக்கை தொடங்கினார். அவர் பல்கேரிய வீரர் மார்டின் பெட்ரோவை 37-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வீழ்த்தினார்.
நேற்றைய 2-வது ஆட்டத்திலும் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய அவர் 48-வது நகர்த்தலுக்கு பிறகு இந்த வெற்றியை பெற்றார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
டி.குகேஷ்
உலக சாம்பியன் டி.குகேஷ் கஜகஸ்தான் வீரர் நோதர்பெக்குடன் மோதிய முதல் ஆட்டம் 'டிரா' ஆனது. நேற்றைய 2-வது ஆட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். இதன் மூலம் குகேஷ் 1.5-0.5 புள்ளிகளுடன் 3-வது சுற்றுக்கு நுழைந்தார். இதேபோல தீப்தயான் கோசும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா ஆஸ்திரேலிய வீரர் தெமுருடன் மோதிய 2-வது ஆட்டமும் 'டிரா' ஆனது. இதனால் இன்றைய டை பிரேக்கர் ஆட்டத்தில் ஆடுவார்.
- எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.
- சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஐ.பி.எல். தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கேற்று வருகிறார் எம்.எஸ்.தோனி. அவர் இல்லாமல் ஐ.பி.எல் தொடரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இல்லை என்றே ரசிகர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே, 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று எம்.எஸ்.தோனியும் தெரிவித்து இருந்தார்.
இருப்பினும் எம்.எஸ்.தோனி ஓய்வு குறித்த வதந்தி பரவி வருகிறது. அதில் ஒன்று, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாட மாட்டார் என்று...
இந்த நிலையில், 2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எம்.எஸ். தோனி இன்னும் ஓய்வு பெறவில்லை. புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் தொடர்ந்து விளையாடுவார். 2026 ஐ.பி.எல். சீசனில் அவர் பங்கேற்பார் என்றும் காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனம் வாங்கியது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.
நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ஆர்.பி.சி. அணியை நிர்வகித்து வருகிறது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.
இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில் ஆர்.சி.பி. அணியை விற்க நிர்வாகம் எடுத்துள்ள முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- முதல் டி20 ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
- மெல்போர்னில் நடந்த 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது.
கோல்ட்கோஸ்ட்:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.
இதையடுத்து, 5 போட்டி கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஹோபர்ட்டில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4-வது டி20 போட்டி கோல்டு கோஸ்டில் உள்ள கராராவில் இன்று நடைபெறுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று முன்னிலை பெறுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கடந்த ஆட்டத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதேபோல மற்றோரு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி யும் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளார். வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும் தனக்கு கிடைத்த வாய்ப்பில் திறமையை வெளிப்படுத்தினார்.
தொடக்க வீரர்களில் துணை கேப்டன் சுப்மன் கில்லின் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. இதனால் சஞ்சு சாம்சனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம். அவருக்கு பதிலாக இடம்பெற்ற ஜிதேஷ் சர்மா 3-வது போட்டியில் வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். எனவே அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே கருதப்படுகிறது.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் கேப்டன் மிட்செல் மார்ஷ், டிம் டேவிட், ஸ்டோய்னிஸ் ஆகியோரும், பந்துவீச்சில் நாதன் எல்லீஸ், ஹேசில்வுட் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் மோதிய 35 டி20 போட்டியில் இந்தியா 21-ல், ஆஸ்திரேலியா 12-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி முடிவு இல்லை.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- தென் ஆப்பிரிக்கா ஏ அணி இந்தியா ஏ அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி:
தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்கிறது. இந்தியா ஏ அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
திலக் வர்மா தலைமை தாங்க, ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா ஏ அணி விவரம்:-
திலக் வர்மா (கேப்டன்), ருதுராக் கெய்க்வாட் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங், ரியான் பராக், இஷான் கிஷன், ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகம், மானவ் சுதார், ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது
இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்குகிறது.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
- 3வது சுற்றில் அமெரிக்காவின் அனிசிமோவா வெற்றி பெற்றார்.
ரியாத்:
ஒவ்வொரு ஆண்டும் 8 முன்னணி வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.
54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி வரும் 8-ம் தேதி வரை நடக்கிறது.
செரீனா பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா மற்றும் மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், 3வது சுற்றில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை இகா ஸ்வியாடெக் போராடி 7-6 (7-3) என வென்றார்.
இதில் சுதாரித்துக் கொண்ட அனிசிமோவா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் அரையிறுதிக்கும் தகுதிபெற்றார்.
ஏற்கனவே கஜகஸ்தானின் எலினா ரிபாகினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடந்தது.
- டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசுவதாக அறிவித்தது.
ஆக்லாந்து:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 53 ரன் எடுத்தார். ரோவ்மன் பவல் 33 ரன்னிலும், ரோஸ்டன் சேஸ் 28 ரன்னிலும் அவுட் ஆகினர்.
நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி, போல்க்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ஆனாலும் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்து போராடி 55 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரோஸ்டன் சேசுக்கு வழங்கப்பட்டது.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
- 3வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா வெற்றி பெற்றார்.
ரியாத்:
ஒவ்வொரு ஆண்டும் 8 முன்னணி வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.
54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி வரும் 8-ம் தேதி வரை நடக்கிறது.
செரீனா பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா மற்றும் மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், 3வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதுவதாக இருந்தது. காயம் காரணமாக மேடிசன் கீஸ் போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரஷியாவின் எகட்ரினா அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய எலினா ரிபாகினா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.
- சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 3 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்து, பின்னர் கம்பேக் கொடுத்ததை பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஆண்கள் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை (கபில்தேவ் தலைமையில் 1983, டோனி தலைமையில் 2011) 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள், அணி நிர்வாகிகள் இன்று பிரதமர் மோடியை, அவரது லோக் கல்யாண் மார்க் வீட்டில் சந்தித்தனர். அப்போது வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர்.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 3 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்து, பின்னர் கம்பேக் கொடுத்ததை பாராட்டியுள்ளார்.
இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 2017-ல் பிரதமரை சாம்பியன் கோப்பை இல்லாமல் சந்தித்தோம். தற்போது சாம்பியன் கோப்பையுடன் சந்தித்தோம். பிரதமர் மோடியை அடிக்கடி சந்திக்க விரும்புகிறோம் என்றார்.
- இங்கிலாந்து தொடரின்போது ரிஷப் பண்ட்-க்கு காயம் ஏற்பட்டது.
- விக்கெட் கீப்பருடன், துணைக் கேப்டன் பதவியையும் சேர்ந்து கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுப்மன் கில் தலைமை தாங்க, ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவருக்கு இங்கிலாந்து தொடரின்போது காயம் ஏற்பட்டது. காயத்தில் இருந்து மீண்டதால், அணியிடம் இடம் கிடைத்துள்ளது. அத்துடன் துணைக்கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆகாஷ் தீப்பும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்த அணி விவரம்:-
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ஜுரெல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, அக்சர் படேல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் வருகிற 15ஆம் தேதி தொடங்குகிறது.






