என் மலர்
விளையாட்டு
- ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம்.
- விளையாட்டைத் தாண்டி இருவரும் கால்பந்து உலகின் ஐகானாக விளங்குகின்றனர்.
கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி. இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். விளையாட்டைத் தாண்டி இவ்விருவர் உலக ஐகானாக விளங்குகின்றனர்.
மெஸ்ஸி என்னை விட சிறந்த வீரர் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் பேசிய ரொனால்டோ, "உலக கோப்பை வெல்வது என் கனவு கிடையாது. வரலாற்றில் சிறந்த வீரரை வரையறுக்க உலக கோப்பை வேண்டுமா? ஒரு தொடரின் 6 அல்லது 7 போட்டிகளில் மட்டும் வென்றால் அவர் சிறந்த வீரர் என்பது நியாயம் என்று நினைக்கிறீர்களா? மெஸ்ஸி என்னை விட சிறந்த வீரரா? அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை" என்று தெரிவித்தார்.
- ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது
- இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்தது.
இந்நிலையில், முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் அணியில் இடம் பெறாததால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனமாக நியமிக்கப்ட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:-
ஸ்மித் (C), ஸ்டார்க், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், அபோட், போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், கவாஜா, லாபுசாக்னே, நாதன் லியோன், ஜேக் வெதரால்ட், வெப்ஸ்டர்
- முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.
- பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
இந்நிலையில், இந்திய மகளிர் அணி வீராங்கனைகள். இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற உள்ளனர்.
இதற்காக டெல்லி விமான நிலையம் வந்த இந்திய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
- தலைமை பயிற்சியாளர் அமோல் மஜும்தாருக்கும் ரூ.22.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
இந்நிலையில், மகளிர் ஒருநாள் உலக கோப்பை வென்றதற்காக மகாராஷ்டிர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு அம்மாநில அரசு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகையை அறிவித்தது.
மேலும், மும்பையைச் சேர்ந்த தலைமை பயிற்சியாளர் அமோல் மஜும்தாருக்கும் ரூ.22.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஃபட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் ரொனால்டோ பழக தொடங்கினார்
- ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் - ரொனால்டோ ஜோடிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) கால்பந்து மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
இவர் 2015-ம் ஆண்டு வரை இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இரினாவுடனான ஐந்து வருட தொடர்பை முறித்துக் கொண்ட பின் அதன்பின், 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழக தொடங்கினார். தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார்.
திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் மோதிரம் மாற்றும் நிச்சயம் செய்துகொண்டனர்.
2026 கால்பந்து உலக கோப்பை தொடர் முடிந்ததும் கோப்பையுடன் தனது காதலி ஜார்ஜினாவை திருமணம் செய்யவுள்ளதாக ரொனால்டோ அறிவித்துள்ளார்.
- முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.
- இந்திய தேசிய கீதத்தை பாகிஸ்தான் ரசிகர் பாடியது இந்தியர்களை நெகிழ வைத்தது.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், ஒருநாள் மகளிர் உலகக் கோப்பையை இந்திய வீராங்கனைகள் வென்றதை, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தனது குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், அர்ஷத் என்ற நபர் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்சியை அணிந்தபடி இந்திய மகளிர் அணிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.
அதில், இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் எழுந்து நின்று இந்திய தேசிய கீதத்தைப் பாடியது இந்திய ரசிகர்களை உண்மையிலேயே நெகிழ வைத்தது.
அர்ஷத்தின் இந்த செயல், இருநாட்டு எல்லைகளை கடந்து இதயங்களை இணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உண்டு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
- முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.
- 50 ஓவர் உலக கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார்.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
இந்திய ஆண்கள் அணி இதற்கு முன் 50 ஓவர் உலக கோப்பையை 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் வென்றுள்ளது. அதன்பின் 2011ஆம் ஆண்டு எம்.எஸ். டோனி தலைமையில் வென்றுள்ளது.
தற்போது மகளிர் அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. ஆண்கள் மற்றும் மகளிர் என இந்தியாவுக்கு 50 ஓவர் உலக கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார்.
இந்நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு சிறந்த பேட்டர் மற்றும் ஃபீல்டர். அவர் இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினால் கேப்டன் பதவியின் சுமை இல்லாமல் இருந்தால் அவரால் இன்னும் சிறப்பாக அணிக்கு பங்களிக்க முடியும்" என்று தெரிவித்தார்.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் எளிதில் வெற்றி பெற்றார்.
ரியாத்:
54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
ஸ்டெபிகிராப் பிரிவில் நம்பர் ஒன் நட்சத்திரமான பெலாரசின் அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காப், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.
- சமீபத்தில் பிரான்சில் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
- இறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
பாரிஸ்:
பிரான்சின் நான்டெரெ நகரில் சமீபத்தில் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், கனடா வீரர் ஃபெலிக்ஸ் அகர் அலியஸிமேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில், ஏடிபி டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் ஜானிக் சின்னர் 11,500 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
11,250 புள்ளிகளுடன் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 5,560 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் 4,735 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் 4,580 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளனர்.
- ஆசிய கோப்பை தொடரின்போது இருநாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர்.
- இந்திய விமானங்களை சுட்டது போன்று ஹாரிஸ் ராஃப் சைகை காட்டியிருப்பார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியில் வீரர்கள் மிகவும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்கள். இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்தனர்.
பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் விமானம் விழுந்து நொறுங்குவது போன்று சைகை காட்டினார். ஆபரேஷசன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை தெரிவிக்கும் வகையில் அவ்வாறு சைகை காட்டினார் என இந்தியா குற்றம்சாட்டியது.
போட்டி முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்தியா- பாகிஸ்தான் மோதலின்போது, உயிரிழந்தவர்களுக்கு வெற்றியை அர்ப்பணிப்பதாகவும், அவர்களுடன் நிற்பதாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
இருநாட்டின் கிரிக்கெட் சங்கங்களும் ஐசிசி-யில் புகார் அளித்தது. இதனடிப்படையில் ஐசிசி ஹாரிஸ் ராஃப்-க்கு 2 போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது. சூர்யகுமார் யாதவுக்கு போட்டியின் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.
ஏ.கே.47 துப்பாக்கியால் சுடுவது போன்று சைகை காட்டிய பாகிஸ்தான் தொடக்க வீரர் பர்ஹானுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை.
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
- ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரை பலரும் பாராட்டினர்.
இதனிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு பின்பு பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், "நான் இயேசுவுக்கு நன்றி கூறுகிறேன், இதை நான் தனியாகச் செய்திருக்க முடியாது. அவர் என்னைவழி நடத்தினார்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து இணையத்தில் ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.
இந்நிலையில், ஜெமிமா மீதான மத ரீதியான ட்ரோல்களுக்கு முன்னாள் இந்திய வீராங்கனை சிகா பாண்டே பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிகா பாண்டே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆமாம் ஜெமிமா கடவுளுக்குப் பிடித்த குழந்தைதான். நீங்கள் அதற்காக பொறாமைப்பட்டால்... மன்னிக்கவும், யாரும் உங்களுக்கு உதவ முடியாது" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
- இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
- உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:
இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
உலகக் கோப்பையை வென்றது தொடர்பாக இந்நாள் மற்றும் முன்னாள் வீராங்கனைகள் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகக் கோப்பை வென்றது தொடர்பாக தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி கூறியதாவது:
இந்த உலகக் கோப்பைக்கு முன் எனக்காக அதைச் செய்வதாக அவர்கள் எனக்கு உறுதியளித்தார்கள்.
2022-ம் ஆண்டு நாங்கள் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியவில்லை. அதன்பிறகு, ஹர்மனும் ஸ்மிருதியும் நள்ளிரவில் என் அறைக்கு வந்து, 'அடுத்த உலகக் கோப்பையில் நீங்கள் இருப்பீர்களா என எங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்காக அந்தக் கோப்பையை நாங்கள் வெல்வோம் என சொன்னார்கள். இறுதியாக, அவர்கள் அதைச் செய்தார்கள், அதனால்தான் நாங்கள் அனைவரும் இப்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.






