என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: 2வது சுற்றில் கோகோ காப் வெற்றி
    X

    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: 2வது சுற்றில் கோகோ காப் வெற்றி

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
    • 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் எளிதில் வெற்றி பெற்றார்.

    ரியாத்:

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

    ஸ்டெபிகிராப் பிரிவில் நம்பர் ஒன் நட்சத்திரமான பெலாரசின் அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காப், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.

    Next Story
    ×