என் மலர்
இந்தியா
- நாட்கள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
- 1,000 மெட்ரிக் டன் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை இந்தியா வழங்குவது உள்ளிட்ட முடிவுகளும் எப்பட்டன.
இந்தியப் பெருங்கடலில் கிழக்கு ஆப்பிரிக்காவையொட்டி அமைந்துள சிறிய தீவு நாடு சீஷெல்ஸ்.
இந்தியாவுக்கு 6 நாட்கள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் பிரதமர் மோடி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இந்தியா - சீஷெல்ஸ் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன.
தொடர்ந்து சீஷெல்ஸ் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான சிறப்பு பொருளாதார தொகுப்பு நிதியாக 17.50 கோடி டாலர் தொகையை இந்தியா அறிவித்துள்ளது.
இந்த நிதி, சீஷெல்சில் வீட்டுவசதி, மின்சார வாகனங்கள், தொழில் பயிற்சி, சுகாதாரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படும்.
மருந்துவம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கடல்சார் அறிவியல் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு, 1,000 மெட்ரிக் டன் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை இந்தியா வழங்குவது உள்ளிட்ட முடிவுகளும் இதில் எப்பட்டன.
- அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு.
- ஆனால், அமைச்சர் பியூஷ் கோயல் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியது நாடாளுமன்ற மரபுகளை மீறி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியிடன் முடிவடைகிறது.
இந்நிலையில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீது திமுக எம்.பி. திருச்சி சிவா இன்று (பிப்ரவரி 9) உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 3 அன்று, அமைச்சர் பியூஷ் கோயல் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஒப்பந்தத்தின் விரிவான விவரங்கள் அடங்கிய கூட்டு அறிக்கை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 7 அன்று அமைச்சர் பியூஷ் கோயல் பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் அம்சங்களை விளக்கினார்.
பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு.
ஆனால், அமைச்சர் பியூஷ் கோயல் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியது நாடாளுமன்ற மரபுகளை மீறிய செயல் என்றும், இது அவையின் உரிமை மீறல் ஆகும் என்றும் திருச்சி சிவா தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஏற்கனவே அவையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த உரிமை மீறல் நோட்டீஸை பின்னர் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.
சபாநாயகர் பதிலால் அதிருப்தியடைந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த விவகாரத்தை உடனடியாக விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர்.
- கோயிலில் வழிபட வந்திருந்த பக்தர்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்தது.
- வைஷ்ணவி (11), சாயா (7) மற்றும் கரிஷ்மா (9) ஆகிய மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் ரூலி பகுதியில் உள்ள அஹ்ரௌலி கிராமத்தில் மாதா கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் பழைய கூரையை இடித்துவிட்டு, அங்கு கோபுரம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 9) மதியம் 2 மணியளவில் பணியின்போது எதிர்பாராதவிதமாக கூரை இடிந்து விழுந்தது.
கோயிலில் வழிபட வந்திருந்த பக்தர்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி வைஷ்ணவி (11), சாயா (7) மற்றும் கரிஷ்மா (9) ஆகிய மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தர்காவில் பக்ரீத், ரலமான் பண்டிகைகள் மட்டுமே தொழுகை நடத்த உயர்நீதிமன்ற அனுமதி உள்ளது.
- அங்கு விலங்குகளை பலியிட கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகே நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள தர்காவில் பக்ரீத், ரலமான் பண்டிகைகள் மட்டுமே தொழுகை நடத்த உயர்நீதிமன்ற அனுமதி உள்ளது.
அனைத்து நாள்களிலும் தொழுகை நடத்த அனுமதி கோரி இமாம் உசேன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண், ''நெல்லித்தோப்பு பகுதி இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அங்கு தொழுகை நடத்த அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல. தொழுகை நடத்துவதால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதில்லை'' என வாதிட்டார்.
ஆனால்,உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சமநிலையாக உள்ளதாகவும், இதில் தலையிட விரும்பவில்லை எனக் குறிப்பிட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், அங்கு விலங்குகளை பலியிட கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.
- மகாராஷ்டிராவில், 125 AIMIM கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
- வன்முறையை ஊக்குவிப்பதற்காக அல்ல, மாறாக முஸ்லிம்களை "அடிமைத்தனத்திலிருந்து" விடுவிப்பதற்கான ஒரு முயற்சி
அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ்-ஏ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியைச் சேர்ந்தவர் தௌகீர் நிஜாமி. மத்தியப் பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த இவர், AIMIM கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இந்நிலையில் முஸ்லீம்கள் குறித்து இவர் சமீபத்தில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லீம்களில் "காலணி நக்குபவர்கள்", "காலணியால் அடி வாங்குபவர்கள்" மற்றும் "காலணியால் அடிப்பவர்கள்" என மூன்று வகைகள் இருப்பதாக தெரிவித்த அவர், காலணியை நக்கும் முஸ்லீம்கள் காங்கிரஸில் இருப்பதாகவும், காலணியால் அடி வாங்கும் முஸ்லீம்கள் பாஜகவில் இருப்பதாகவும், ஆனால் காலணியால் திருப்பி அடிப்பவர்கள் தங்களது கட்சியான மஜ்லிஸில் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சுதந்திரம் பெற்றதிலிருந்து காங்கிரஸ் முஸ்லிம்களை அடிமைத்தனத்தில் வைத்திருப்பதாகவும், முஸ்லீம்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க AIMIM மட்டுமே ஒரே வழி என்றும் பேசியுள்ளார். தனது அறிக்கை வன்முறையை ஊக்குவிப்பதற்காக அல்ல, மாறாக முஸ்லிம்களை "அடிமைத்தனத்திலிருந்து" விடுவிப்பதற்கான ஒரு முயற்சி என்றும் கூறியுள்ளார். இவரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுதியுள்ள நிலையில் இதற்கு மத்தியப்பிரதேச பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
- பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது ஆவணங்கனை சம்ர்ப்பிக்க ஒருவாரம் காலஅவகாசம் வழங்கப்படுகிறது.
- இந்த விவகாரத்தில் எந்தவொரு உத்தரவு அல்லது விளக்கம் தேவைப்படும் என்றால், அது பிறப்பிக்கப்படும்.
SIR விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க மாநிலம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான ஜாய்மல்யா பாக்சி, என்.வி. அஞ்சாரியா நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:-
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது ஆவணங்கனை சம்ர்ப்பிக்க ஒருவாரம் காலஅவகாசம் வழங்கப்படுகிறது. வருகிற 14-ந்தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் எந்தவொரு உத்தரவு அல்லது விளக்கம் தேவைப்படும் என்றால், அது பிறப்பிக்கப்படும்.
SIR செயல்முறையில் எந்தவொரு தடையும் ஏற்பட நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இது மாநிலங்களுக்கு தெளிவாக தெரியவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேற்கு வங்காளத்தில் SIR பயிற்சியை தடம் புரளச் செய்யவும், முடக்கவும், விரக்தியடையவும் வேண்டுமென்றே மற்றும் திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் தனது கூடுதல் பிரமாணப் பத்திரத்தில் சமர்ப்பித்திருந்தது. மேலும் சமூக விரோதிகள் அறிவிப்பு நோட்டீஸ்களை தீவைத்து எரித்ததாக தெரிவித்ததுடன், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை என மம்தா அரசு மீது குற்றம்சாட்டியிருந்தது.
இதற்கு, மேற்கு வங்க டிஜிபி இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
- HDFC வங்கி தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
- லேப்டாப்பை தூக்கி அடிக்கவும் முயற்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு HDFC வங்கியில், வங்கி ஊழியர், வாடிக்கையாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்தா என்ற ஊழியர் வீடியோவில் தனது சாதியை சொல்லி, "நான் ஒரு தாக்கூர்" என்று திரும்பத் திரும்பக் கூறி, என்னிடம் பிரச்சனை செய்யாதே என்று எச்சரிப்பதும், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
உடன் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் தலையிட்டு அவரை அமைதிப்படுத்தினாலும், அதனைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து லேப்டாப்பை தூக்கி அடிக்கவும் முயற்சித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இந்த செயலிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலர் ஊழியருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தனியார் வங்கியிடம் இருந்து பொறுப்புக்கூறவும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் எதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல் இல்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக HDFC வங்கி தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
- 2008 முதல் 2009 வரை மகாராஷ்டிர மாநில அமைச்சராக இருந்துள்ளார்.
- கடந்த ஆண்டுதான் பாஜக-வில் இணைந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பார்பானி மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளில் பாஜக தலைவர் சுரேஷ் வார்புட்கரின் குடும்பத்தினர் 5 பேர் போட்டியிட்டனர்.
வார்புட்கரின் மகள் சோனால் தேஷ்முக்த், மகன் சம்ஷேர் வார்புட்கர், மருமகள் ப்ரேர்னா வார்புட்கர், மருமகன் உத்கார்ஷ் வார்புட்கர், அஜித் வார்புட்கர் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் அஜித் வார்புட்கர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவர் பாஜக சார்பில் போட்டியிட்ட உத்கார்ஷ் வார்புட்கரை 111 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
சோனால் தேஷ்முக்த் சிவ சேனா (UBT) சார்பில் போட்டியிட்டார். இவர் பாஜக-வின் திலிப் தேஷ்முக்த்-யிடம் 2674 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
சம்ஷேர் வார்புட்கர் சிவ சேனா (UBT) வேட்பாளர் பாண்டுரங் கில்லாரேயிடம் 1,604 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மருமகள் பிரேர்னா 2,098 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
சுரேஷ் வார்புட்கர் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் ஆவார். இவர் பாஜக-வில் கடந்த ஆண்டு இணைந்தார். 2008 முதல் 2009 வரை விவசாயத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
- 2 ஓட்டு அவருக்கு போடுங்கள், 2 ஓட்டு எனக்கு போடுங்கள் என கால்களில் முத்தமிட்டு சத்தியப் பிரமாணம் வாங்கினார்.
- ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குகின்றனர்.
தெலங்கானா மாநிலத்தில் நகராட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனால் வேட்பாளர்கள் கடந்த வாரம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் நேற்று முன்தினம் இரவு ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மொய்னாபாத் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்காளர் வீட்டிற்கு சென்றார்.
அவரது வீட்டில் பழைய டி.வி. இருப்பதை கண்ட வேட்பாளர் உடனடியாக பெரிய அளவு எல்.இ.டி. டிவி. வரவழைத்து கொடுத்தார். மேலும் அந்த வீட்டில் உள்ள 4 வாக்காளர்களின் கால்களில் முத்தமிட்டு தனக்கு வாக்களிக்க வேண்டும் என சத்தியம் வாங்கினார் இதனை அறிந்த எதிர்தரப்பு வேட்பாளர் உடனடியாக புதியதாக ப்ரிட்ஜை வாங்கி வந்து கொடுத்து 2 ஓட்டு அவருக்கு போடுங்கள், 2 ஓட்டு எனக்கு போடுங்கள் என கால்களில் முத்தமிட்டு சத்தியப் பிரமாணம் வாங்கினார்.
தெலங்கானா வாக்காளர்கள் சிலர் டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்கள் வந்து வாக்களிப்பதற்காக வேட்பாளர்கள் விமான டிக்கெட், ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து அவர்களது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் உள்ளூருக்கு வந்து லாட்ஜில் தங்குவது, உணவு, வாக்களித்துவிட்டு பின்னர் திரும்பி செல்வது உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் வேட்பாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.
பகல் நேரங்களில் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களை விட இரவு நேரங்களில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் வேட்பாளருக்கு தான் அதிக அளவில் உள்ளனர். வாக்காளர் வீட்டிற்கு இரவு நேரங்களில் செல்லும் வேட்பாளர்கள், அவர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள், பணம் ஆகியவற்றை வழங்குகின்றனர். பெண் வாக்காளர்களை கவர்வதற்காக விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் வழங்குகின்றனர்.
இதேபோல் ரங்க ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவல்லா, மொயனாபாத், ஷங்கர் பள்ளி, ஷாட் நகர், அமணக்கல்லு, இப்ராஹிம் பட்டிணம், மேட்சல், அடிலாபாத், சிந்தப்பள்ளி, எல்லம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கு கின்றனர். தான் தேர்தலில் வெற்றி பெற்றால் மேலும் பணம் வழங்குவதாக உறுதி அளிக்கின்றனர். மேலும் பெண் குழந்தை பிறக்கும்போது ஐந்து ஆயிரம், வீட்டில் யாராவது இறந்தால் ஐந்து ஆயிரம் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர். அதுபோல தெருக்களில் அதிகரித்து வரும் நாய் மற்றும் குரங்கு தொல்லைக்கு தீர்வு காணப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.
பல தரப்பிலிருந்தும் பணம், பரிசு பொருட்கள் குவிவதால் வாக்காளர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
- சந்திரயான்-4 திட்டத்தை 2028-ல் செயல்படுத்த திட்டம்.
- லேண்டர் மண் போன்ற மாதிரிகளை சேகரித்த பூமிக்கு கொண்டு வரும்.
இந்தியா சந்திரயான் 3 திட்டம் மூலம் சந்திரனில் (நிலவு) வெற்றிகரகமாக லேண்டரை தரையிறக்கிறது. நிலவின் தென்பகுதியில் இருந்து லேண்டர் துல்லியமாக படம்பிடித்து பூமிக்கு அனுப்பியது.
இந்த நிலையில் மண் போன்ற மாதிரிகளை எடுத்துவருவதற்கான அடுத்தக் கட்ட பணிகளில் இஸ்ரோ இறங்கியுள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு சந்திரயான்-4 என பெயரிடப்பட்டுள்ளது. 2028-க்குள் சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ இலக்காக கொண்டு வந்துள்ளது.
சந்திரயான்-4 மூலம் லேண்டர் சந்திரனுக்கு அனுப்பப்படும். லேண்டர் சந்திரனில் உள்ள மாதிரிகளை சேகரித்து பூமிக்கு அனுப்பும். இது மிகவும் கடினமானது.
இந்த நிலையில் சந்திரனின் மேற்பகுதியில் லேண்டர் தரையிறங்குவதற்கான 4 இடங்களை தேர்வு செய்தோம். அதில் ஒரு இடத்தை அடையாளம் கண்டுள்ளோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் மேற்பகுதியை Mons Mouton என அழைப்பார்கள். இதில் எம்.எம்.-1, எம்.எம்.-3, எம்.எம்.-5 மற்றும் எம்.எம்.-5 ஆகிய நான்கு இடங்களை கண்டறிந்தோம். அதில் எம்.எம்.-4-ஐ தரையிறக்குவதற்கான இடமாக அடையாளம் கண்டுள்ளோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- கடந்த வெள்ளிக்கிழமை 90.65 ரூபாயாக இருந்தது.
- இன்றைய வர்த்தக முடிவில் 90.72 ரூபாயாக உள்ளது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி பரிமாற்றம் இன்றைய சந்தை வர்த்தக முடிவில் டாலருக்கு நிகரான இந்தியாவின் பண மதிப்பு 9 காசுகள் குறைந்து 90.74 ரூபாயாக உள்ளது.
டாலருக்கு நிகராக இந்தியாவின் பண மதிப்பு 90.66 ரூபாயுடன் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் 90.37 என முன்னேற்றம் கண்டது. இது நேற்றைய வர்த்தக முடிவின் மதிப்பை விட 28 பைசா முன்னேற்றமாகும். எனினும். 90.77 ரூபாய் என வீழ்ச்சியடைய தொடங்கியது. இறுதியாக 90.74 ரூபாயில் வர்த்தகம் நிறைவடைந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 90.65 ரூபாயாக இருந்தது. தற்போது 9 பைசா வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வாரம் இறுதியில் இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தது. இதனால் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 31 பைசா ஏற்றம் கண்டு 90.65 ரூபாயாக இருந்து.
கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மூலம் டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது.
- நாடுதான் முதல். அதன்பிறகுதான் கட்சி என்று பாஜக நம்புகிறது. சுயநலம் என்று வரும்போது அது கடைசிதான்.
- ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு சுய நலம்தான் முதல் மற்றும் கடைசி விசயமாகும்
பாஜக தேசியத் தலைவராக பீகாரை சேர்ந்த நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்டபின் முதன் முறையாக தனது சொந்த மாநிலம் சென்றார். அங்கு நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது நிதின் நபின் பேசியதாவது:-
பீகாரில் இருந்து காட்டு ராஜ்ஜியத்தை வேரோடு சாய்ப்பதற்காக, கட்சி தொண்டர்கள் போராடினார்கள். பிரசுரங்கள் வழங்குவதற்கு கூட ஆபத்தான நிலையில் தங்களுக்கு என்ன நிகழும் என்பதை தெரிந்து கொண்டும் பணியாற்றினார்.
அந்த தியாக உணர்வு தொடர்கிறது. கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு தங்களுக்கு எதிர்வினையாக என்ன கிடைக்கும் என்பதை தெரிந்தும் கூட கட்சி தொண்டர்கள் தியாகங்களை செய்து வருகின்றனர்.
நாடுதான் முதல். அதன்பிறகுதான் கட்சி என்று பாஜக நம்புகிறது. சுயநலம் என்று வரும்போது அது கடைசிதான். ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு சுய நலம்தான் முதல் மற்றும் கடைசி விசயமாகும்.
இவ்வாறு நிதின் நபின் தெரிவித்துள்ளார்.






