என் மலர்tooltip icon

    இந்தியா

    எந்தவொரு தடையும் ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம்: SIR விவகாரத்தில் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் கறார்
    X

    எந்தவொரு தடையும் ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம்: SIR விவகாரத்தில் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் கறார்

    • பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது ஆவணங்கனை சம்ர்ப்பிக்க ஒருவாரம் காலஅவகாசம் வழங்கப்படுகிறது.
    • இந்த விவகாரத்தில் எந்தவொரு உத்தரவு அல்லது விளக்கம் தேவைப்படும் என்றால், அது பிறப்பிக்கப்படும்.

    SIR விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க மாநிலம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான ஜாய்மல்யா பாக்சி, என்.வி. அஞ்சாரியா நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:-

    பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது ஆவணங்கனை சம்ர்ப்பிக்க ஒருவாரம் காலஅவகாசம் வழங்கப்படுகிறது. வருகிற 14-ந்தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் எந்தவொரு உத்தரவு அல்லது விளக்கம் தேவைப்படும் என்றால், அது பிறப்பிக்கப்படும்.

    SIR செயல்முறையில் எந்தவொரு தடையும் ஏற்பட நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இது மாநிலங்களுக்கு தெளிவாக தெரியவேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேற்கு வங்காளத்தில் SIR பயிற்சியை தடம் புரளச் செய்யவும், முடக்கவும், விரக்தியடையவும் வேண்டுமென்றே மற்றும் திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் தனது கூடுதல் பிரமாணப் பத்திரத்தில் சமர்ப்பித்திருந்தது. மேலும் சமூக விரோதிகள் அறிவிப்பு நோட்டீஸ்களை தீவைத்து எரித்ததாக தெரிவித்ததுடன், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை என மம்தா அரசு மீது குற்றம்சாட்டியிருந்தது.

    இதற்கு, மேற்கு வங்க டிஜிபி இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

    Next Story
    ×