சந்திரயான்-4 லேண்டர் தரை இறங்குவதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளது- இஸ்ரோ தகவல்

சந்திரயான்-4 திட்டத்தை 2028-ல் செயல்படுத்த திட்டம்.லேண்டர் மண் போன்ற மாதிரிகளை சேகரித்த பூமிக்கு கொண்டு வரும்.
சந்திரயான்-4 லேண்டர் தரை இறங்குவதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளது- இஸ்ரோ தகவல்
Published on

இந்தியா சந்திரயான் 3 திட்டம் மூலம் சந்திரனில் (நிலவு) வெற்றிகரகமாக லேண்டரை தரையிறக்கிறது. நிலவின் தென்பகுதியில் இருந்து லேண்டர் துல்லியமாக படம்பிடித்து பூமிக்கு அனுப்பியது.

இந்த நிலையில் மண் போன்ற மாதிரிகளை எடுத்துவருவதற்கான அடுத்தக் கட்ட பணிகளில் இஸ்ரோ இறங்கியுள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு சந்திரயான்-4 என பெயரிடப்பட்டுள்ளது. 2028-க்குள் சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ இலக்காக கொண்டு வந்துள்ளது.

சந்திரயான்-4 மூலம் லேண்டர் சந்திரனுக்கு அனுப்பப்படும். லேண்டர் சந்திரனில் உள்ள மாதிரிகளை சேகரித்து பூமிக்கு அனுப்பும். இது மிகவும் கடினமானது.

இந்த நிலையில் சந்திரனின் மேற்பகுதியில் லேண்டர் தரையிறங்குவதற்கான 4 இடங்களை தேர்வு செய்தோம். அதில் ஒரு இடத்தை அடையாளம் கண்டுள்ளோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் மேற்பகுதியை Mons Mouton என அழைப்பார்கள். இதில் எம்.எம்.-1, எம்.எம்.-3, எம்.எம்.-5 மற்றும் எம்.எம்.-5 ஆகிய நான்கு இடங்களை கண்டறிந்தோம். அதில் எம்.எம்.-4-ஐ தரையிறக்குவதற்கான இடமாக அடையாளம் கண்டுள்ளோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com