என் மலர்tooltip icon

    இந்தியா

    • தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.
    • பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ராஜஸ்தானில் தனியார் பேருந்து திடீரெனத் தீப்பிடித்த கோர விபத்தில்10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    நேற்று மாலை, ஜெய்சால்மரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.

    சில நிமிடங்களில், பேருந்து முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பலர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதவில், "ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் நான் மிகவும் துயரமடைந்துள்ளேன். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதம மந்திரி பேரிடர் நிவாரண நிதி (PMNRF) இலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • பூரன் குமார் தனது ஊழலைக் மறைக்க சாதி அரசியலைக் கையிலெடுத்ததாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    அரியானா மாநிலத்தில் போலீஸ் ஐ.ஜியாக பணியாற்றி வந்தவர் ஒய். பூரன் குமார் ஐபிஎஸ். ரோதக் சரக ஐ.ஜியாக பணியாற்றிய அவர் சமீபத்தில் போலீஸ் மையத்தின் ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இதற்கிடையே கடந்த வாரம் செவாய்க்கிழமை, புரன் குமார் சண்டிகரில் உள்ள வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் எழுதிய கடிதத்தில் சில உயர் அதிகாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டிருந்தார். தலித் சமூகத்தை சேர்ந்த பூரன் குமார் காவல்துறையில் நிலவிய சாதிய பாகுபாட்டால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில் பூரன் குமார் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், மேலும் ஒரு திடீர் திருப்பமாக, அந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வந்த உதவி துணை ஆய்வாளர் (ஏ.எஸ்.ஐ.) சந்தீப் குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

    ரோஹ்தக் சைபர் செல்லில் ஏ.எஸ்.ஐ-ஆக பணிபுரிந்த சந்தீப் குமார், தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன், அவர் மூன்று பக்க கடிதம் மற்றும் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.

    அந்தக் கடிதத்தில், "உண்மைக்காக என் வாழ்க்கையைத் தியாகம் செய்கிறேன். நேர்மையின் பக்கம் நின்றதில் நான் பெருமை கொள்கிறேன். தேசத்தை விழிப்படையச் செய்ய இது தேவை" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஐ.பி.எஸ். அதிகாரி பூரன் குமார் ஒரு ஊழல்வாதி என்றும், தனது ஊழல் அம்பலமாகிவிடும் என்ற பயத்தில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சந்தீப் குமார் தனது கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஒரு மதுபான ஒப்பந்ததாரரிடம் இருந்து பூரன் குமாரின் காவலர் ரூ. 2.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது தான் பிடித்ததாகவும், இந்த விவகாரம் வெளியானபோது, பூரன் குமார் தனது ஊழலைக் மறைக்க சாதி அரசியலைக் கையிலெடுத்ததாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    மேலும் சந்தீப் குமார் தனது வீடியோ செய்தியில், பூரன் குமார் ரோஹ்தக் ரேஞ்சில் பொறுப்பேற்ற பிறகு நேர்மையான அதிகாரிகளைப் புறக்கணித்து, ஊழல்வாதிகளை நியமித்ததாகக் குற்றம் சாட்டினார். அவர்கள் வழக்குப் பதிவேடுகளை முடக்குவது, பாதிக்கப்பட்டவர்களை அழைத்துப் பணத்திற்காக மனதளவில் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.

    இடமாற்றங்களுக்காக சில பெண் காவலர்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் இந்த விவகாரம் சாதி தொடர்பானதல்ல, முழுக்க முழுக்க ஊழல் தொடர்பானது என்றும் சந்தீப் குமார் பேசியுள்ளார். 

    • நான்கு குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஒருவரை ஏற்கனவே கைது செய்தனர்.
    • என் சகோதரன் மிகப் பெரிய தவறு செய்துள்ளான்.

    மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒடிசாவை சேர்ந்த 23 வயது பெண் எம்பிபிஎஸ் பயின்று வந்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே செல்ல முற்படும்போது வழிமறித்த கும்பல் ஒன்று மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள காட்டுகப்பகுதியில் மாணவியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.

    மாணவியின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நான்கு குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஒருவரை ஏற்கனவே கைது செய்தனர்.

    தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சஃபீக் என்பவரைத் தேடி வந்தனர்.

    இந்நிலையில் சஃபீக்கின் மூத்த சகோதரி ரோசீனா, தனது சகோதரன் துர்காபூரில் உள்ள அன்டால் வாண்டேன் பகுதியில் பதுங்கியுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அந்தத் தகவலின் பேரில் போலீஸார் சஃபீக்கை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    ஊடகங்களிடம் பேசிய ரோசீனா, "என் சகோதரன் மிகப் பெரிய தவறு செய்துள்ளான். அதனால் அவனுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போலீஸுக்குத் தகவல் கொடுத்தேன்" என்று தெரிவித்தார்.

    கைது செய்யப்பட்ட ஐந்து குற்றவாளிகளையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    • தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.
    • 14 க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ராஜஸ்தானில் தனியார் பேருந்து திடீரெனத் தீப்பிடித்த கோர விபத்தில்10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இன்று மாலை, ஜெய்சால்மரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.

    சில நிமிடங்களில், பேருந்து முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் 14 க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    விபத்து குறித்துக் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, விபத்து நடந்த இடத்திற்கு நேரில் விரைந்தார்.

    பேருந்து தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • வருங்கால வைப்புநிதியில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
    • இனி கல்வி தேவைக்காக 10 முறையும், திருமண தேவைக்காக 5 முறையும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

    புதுடெல்லி:

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரிய கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மத்திய தொழிலாளர்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்.

    இதில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், வைப்புநிதியில் பகுதி அளவுக்கு பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    அத்தியாவசிய தேவைகள் (உடல்நலக்குறைவு, கல்வி, திருமணம்), வீட்டு தேவைகள், சிறப்பு சூழ்நிலை என 3 பிரிவாக விதிமுறைகள் வகைப்படுத்தப்பட்டன.

    தொழிலாளர் பங்களிப்பு, நிறுவனத்தின் பங்களிப்பு உள்பட வைப்புநிதியில் தகுதியான இருப்பில் 100 சதவீதம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்.

    கல்வி தேவைக்காக 3 முறைக்கு பதிலாக 10 முறையும், திருமண தேவைக்காக 3 முறைக்கு பதிலாக 5 முறையும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

    பேரிடர், வேலையின்மை போன்ற சிறப்பு சூழ்நிலை பிரிவில் தேவைக்கான காரணத்தை குறிப்பிடத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேசமயம் உறுப்பினர்களின் எதிர்கால தேவைக்காக உறுப்பினர் கணக்கில் 25 சதவீத பங்களிப்பை குறைந்தபட்ச இருப்பாக எப்போதும் பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

    • சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் மேல்முறையீடு செய்தது.
    • அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது.

    தமிழக அரசின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடித்து இருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசு சார்பிலும், 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்தும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் மேல்முறையீடு செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

    இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது.

    * அமலாக்கத்துறை விசாரணை கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா?

    * சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா?

    * சந்தேகம் இருந்தாலே அரசு அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுத்து செல்வீர்களா?

    * மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது.

    * மாநில அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்று சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா? என்று கேள்வி எழுப்பியது.

    டாஸ்மாக் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் குற்றம் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் நடந்த ஊழல் குறித்து மாநில போலீஸ் விசாரிக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரிப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    டாஸ்மாக் நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன்களை வலுக்கட்டாயமாக அமலாக்கத்துறையினர் பறித்துள்ளனர்.

    ஊழியர்களின் செல்போன் தரவுகளை அனுமதியின்றி பதிவிறக்கம் செய்தது தனிநபர் உரிமையை பறிக்கும் செயல்.

    அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட் பலமுறை அறிவுறுத்தியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுப்படுவதில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

    இந்நிலையில், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

    • மத்திய பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்தனர்.
    • ராஜஸ்தானிலும் இருமமல் மருந்து குடித்த குழந்தைகள் இறந்தனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்தனர். அதேபோல் ராஜஸ்தானிலும் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் இறந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனம் தயாரித்து வந்த கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் கோல்ட்ரிப் இருமல் மருந்தில் டை எதிலீன் கிளைக்கால் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களின் மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

    இதில் மத்திய பிரதேசத்தில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.

    இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறப்பு தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களின் தயாரிப்பான கோல்ட்ரிப், ரெஸ்பிப்ரெஷ் டி.ஆர், ரீலைப் ஆகிய 3 இருமல் மருந்துகள் பாதிக்கப்பட்ட மருந்துகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்துகள் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துவதாகவும், கடுமையான, உயிருக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தக்கூடியவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

    மேலும் இந்த மருந்துகள் ஏதாவது நாட்டில் பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே புகாரளிக்குமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டு உள்ளது.

    முன்னதாக கலப்பட மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் இந்தியா தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பில் கூகுள் ஏஐ மையம் அமைக்க உள்ளது.
    • கூகுள் நிறுவனம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது.

    விசாகப்பட்டினம்:

    உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்று கூகுள். இந்த நிறுவனம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பில் கூகுள் ஏஐ மையம் அமைக்க உள்ளது என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    இந்திய இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புக்கு கூகுளின் ஏஐ மையம் உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் நிறுவனம் செய்யக்கூடிய மிகப்பெரிய முதலீடு இதுதான் என்று சொல்லப்படுகிறது.

    • அயோத்தியில் சாலையோர வியாபாரிகளுக்கு அதிகாரிகள் தண்டனை கொடுத்தனர்.
    • தோப்புக்கரணம் போட வைத்ததோடு, சுவரில் தலைகீழாக நிற்க வைத்தது சர்ச்சையை கிளப்பியது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு அருகே சாலையோர வியாபாரிகள் சிலர் பூஜை பொருட்கள் விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வந்தனர்.

    அவர்கள் அங்கிருந்த வியாபாரிகளை கோவில் பாதையை ஆக்கிரமித்ததாகக் கூறி தோப்புக்கரணம் போட வைத்தனர். மேலும் சுவரில் தலைகீழாக நிற்க வைத்தனர்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.
    • ஐக்கிய ஜனதா தளம் 101 இடங்களிலும், சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களிலும் பேட்டியிடுகிறது.

    பீகார் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளனர்.

    சில தினங்களுக்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்தது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிராக் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் 101 இடங்களில் 71 இடங்ளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. துணை முதல்வர் சம்ராத் சவுத்ரி தாராபூரில் போட்டியிடுகிறார். அமைசசர் மங்கல் பாண்டே சிவான் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    • நக்சலைட்கள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • இதனால் மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.

    மும்பை:

    இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் நக்சல்கள், மாவோயிஸ்ட்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்திருந்தார்.

    நக்சலைட்கள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் மாவோயிஸ்டுகள் இயக்க தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.

    சத்தீஸ்கர் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஏராளமான மாவோயிஸ்டுகள் அடுத்தடுத்து சரணடைந்தும் வருகின்றனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள கட்ச்ரோலி மாவட்டத்தில் அந்த அமைப்பின் பொலிட்பீரோ உறுப்பினர் சோனு என்ற மல்லோஜூல வேணுகோபால ராவ் தலைமையில் 60 மாவோயிஸ்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர்.

    • தமிழ்நாட்டில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எப்படி குச்சிகளுடன் அணிவகுப்பு நடத்த முடியும்?

    தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து கொண்டு கர்நாடகாவில் உள்ள அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்.

    இதனையடுத்து தமிழ்நாட்டில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது போல், கர்நாடகாவிலும் தடை விதிப்பது குறித்து மதிப்பாய்வு செய்ய தலைமைச் செயலருக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அமைச்சர் பிரியங்க் கார்கே, "தமிழ்நாட்டில் என்ன விதி இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, நாங்கள் சொல்வதெல்லாம், ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளை தனியார் இடங்களுக்கு மட்டும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான். அவர்கள் அதை தங்கள் வீடுகளிலும், தனியார் நிலங்களிலும் ஒரு ஹோட்டலை வாடகைக்கு எடுத்து கொண்டு அவர்கள் விரும்பியதைச் செய்யட்டும். ஆனால், வகுப்புவாத விதைகளை விதைத்து மக்களை அச்சுறுத்தும் இந்த நிகழ்ச்சி நல்லதல்ல.

    ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்தியாவின் சிறப்பு குடிமக்களா? அவர்கள் எப்படி குச்சிகளுடன் அணிவகுப்பு நடத்த முடியும்? வேறு எந்த சமூகத்தினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், ஓ.பி.சி.க்கள், தங்கள் சமூக வண்ணச் சட்டைகளை அணிந்துகொண்டு குச்சிகளைப் பிடித்து அணிவகுப்பு நடத்தினால், யாராவது அதை அனுமதிப்பார்களா? அவர்கள் பல ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறார்கள், அதற்காக அவர்கள் இதை தொடர வேண்டும் என்று அர்த்தமல்ல, இல்லையா? சட்டப்படி அவர்கள் அனுமதி பெறட்டும். அவர்கள் இந்திய அரசியலமைப்பை விட பெரியவர்கள் இல்லை" என்று தெரிவித்தார்

    இந்நிலையில், தனக்கு நிறைய மிரட்டல்கள் வருவதாக அமைச்சர் பிரியங்க் கார்கே தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "கடந்த இரண்டு நாட்களாக, எனது தொலைபேசி நிறுத்தாமல் ஒலிக்கிறது. அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளை நான் கேள்வி கேட்கவும் தடுக்கவும் துணிந்ததால், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எதிராக மிரட்டல்கள் மற்றும் மோசமான துஷ்பிரயோகங்கள் நிறைந்த அழைப்புகள் வருகிறது.

    ஆனால் இதற்காக நான் அதிர்ச்சியடையவில்லை மற்றும் ஆச்சரியப்படவும் இல்லை. மகாத்மா காந்தி அல்லது பாபாசாகேப் அம்பேத்கரையே ஆர்.எஸ்.எஸ். விட்டுவைக்காதபோது, அவர்கள் ஏன் என்னை விட்டுவைக்க வேண்டும்?

    அச்சுறுத்தல்கள் மற்றும் தனிப்பட்ட அவதூறுகள் என்னை அமைதிப்படுத்தும் என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் தவறாக நினைக்கிறார்கள்.

    புத்தர், பசவண்ணா மற்றும் பாபாசாகேப் அம்பேத்கார் ஆகியோரின் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. சமத்துவம், பகுத்தறிவு மற்றும் இரக்கத்தில் வேரூன்றிய சமூகம் மற்றும் இந்த நாட்டை மிகவும் ஆபத்தான (RSS) வைரஸ்களிலிருந்து தூய்மைப்படுத்த வேண்டிய நேரம் இது" என்று பதிவிட்டுள்ளார்.

    ×