என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிரா: முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்
    X

    மகாராஷ்டிரா: முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்

    • நக்சலைட்கள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • இதனால் மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.

    மும்பை:

    இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் நக்சல்கள், மாவோயிஸ்ட்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்திருந்தார்.

    நக்சலைட்கள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் மாவோயிஸ்டுகள் இயக்க தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.

    சத்தீஸ்கர் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஏராளமான மாவோயிஸ்டுகள் அடுத்தடுத்து சரணடைந்தும் வருகின்றனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள கட்ச்ரோலி மாவட்டத்தில் அந்த அமைப்பின் பொலிட்பீரோ உறுப்பினர் சோனு என்ற மல்லோஜூல வேணுகோபால ராவ் தலைமையில் 60 மாவோயிஸ்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர்.

    Next Story
    ×