என் மலர்tooltip icon

    இந்தியா

    மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளி தம்பியை போலீசில் பிடித்துக் கொடுத்த சகோதரி
    X

    மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளி தம்பியை போலீசில் பிடித்துக் கொடுத்த சகோதரி

    • நான்கு குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஒருவரை ஏற்கனவே கைது செய்தனர்.
    • என் சகோதரன் மிகப் பெரிய தவறு செய்துள்ளான்.

    மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒடிசாவை சேர்ந்த 23 வயது பெண் எம்பிபிஎஸ் பயின்று வந்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே செல்ல முற்படும்போது வழிமறித்த கும்பல் ஒன்று மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள காட்டுகப்பகுதியில் மாணவியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.

    மாணவியின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நான்கு குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஒருவரை ஏற்கனவே கைது செய்தனர்.

    தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சஃபீக் என்பவரைத் தேடி வந்தனர்.

    இந்நிலையில் சஃபீக்கின் மூத்த சகோதரி ரோசீனா, தனது சகோதரன் துர்காபூரில் உள்ள அன்டால் வாண்டேன் பகுதியில் பதுங்கியுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அந்தத் தகவலின் பேரில் போலீஸார் சஃபீக்கை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    ஊடகங்களிடம் பேசிய ரோசீனா, "என் சகோதரன் மிகப் பெரிய தவறு செய்துள்ளான். அதனால் அவனுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போலீஸுக்குத் தகவல் கொடுத்தேன்" என்று தெரிவித்தார்.

    கைது செய்யப்பட்ட ஐந்து குற்றவாளிகளையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×