என் மலர்
இந்தியா
- இந்த பட்ஜெட்டில் நீங்கள் வங்கதேசத்திற்கு 60 கோடி ரூபாய் கொடுத்துள்ளீர்கள். ஏன்?.
- வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பட்ஜெட் மீதான விவாத்தின்போது பேசிய ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி. சுலதா தியோ, ஒடிசாவை மத்திய அரசு புறக்கணித்த நிலையில் வங்கதேசத்திற்கு 60 கோடி ரூபாய் ஒதுக்கியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சுலதா தியோ பேசியதாவது:-
ஒடிசாவுக்காக இந்த பட்ஜெட்டில் ஏதுமில்லை. அதற்குப் பதிலாக 18 மாதங்களில் கடன் 90 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. ஒடிசா அரசு 12 லட்சம் கோடி ரூபாய் கேட்டிருந்தது. அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்த பட்ஜெட்டில் நீங்கள் வங்கதேசத்திற்கு 60 கோடி ரூபாய் கொடுத்துள்ளீர்கள். ஏன்?. வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஏன் கொடுத்தீர்கள்?. ஏன் இந்த அனுதாபம்? உங்களோடு அவர்களுக்கு அனுதாபம் இல்லை. இது நம்முடைய வரிப்பணம். இதைவிட பெரிய அவமானம் ஏதும் இருக்க முடியாது.
இவ்வாறு சுலதா தியோ பேசினார்.
- பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் அசம்பாவித சம்பவத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
- இதனால் பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக ஓம் பிர்லா கூறியிருந்தார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்ததாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் பதிலளிக்க இருந்தபோது, சில காங்கிரஸ் பெண் எம்.பி-க்கள் பிரதமரின் இருக்கைக்கு அருகே சென்று ஒரு அசம்பாவித சம்பவத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், இத்தகைய சூழலில் நாட்டின் ஜனநாயக மரபுகள் சிதைக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று தாமே கேட்டுக்கொண்டதாக ஓம் பிர்லா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்த சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை மக்களவை செயலகத்தில் எதிர்க்கட்சிகள் வழங்கின.
இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை அரசியலில் இருந்து நீக்கும் நேரம் இது என பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் உணர்வுகளிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள்தான் இந்தியாவின் அனைத்து அரசியலமைப்பு பதவிகளையும் பதவி நீக்கம் செய்ய விரும்புகிறார்கள். ராகுல் காந்தியையும் காங்கிரசையும் அரசியலில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.
- காங்கிரஸ் 27 இடங்களிலும், பாஜக 23 இடங்களிலும் வெற்றி பெற்றன.
- தேர்தலில் பாஜக 32 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மேயர் தேர்தல் நடைபெற்று வருகிறது.
சந்த்ரபூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கட்சி கவுன்சிலர்கள் வாக்களித்ததால், பாஜக மேயர் வேட்பாளர் வெற்றி பெற்றார். உத்தவ் தாக்கரே கட்சி கவுன்சிலர்கள் மாற்றி வாக்களித்ததால் குதிரை பேரம் நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சந்த்ரபூர் மேயர் தேர்தலில் பாஜக 32 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. காங்கிரஸ் 31 இடங்களில் வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தது. சிவ சேனா (UBT) 6 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இது காங்கிரஸ் கூட்டணியில் இடம் பிடித்திருந்தது. ஆனால் தேர்தலில் சிவ சேனா (UBT) கவுன்சிலர்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்.
63 இடங்களை கொண்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சி 27 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பாஜக 23 இடங்களை பிடித்திருந்தது. சிவ சேனா (UBT) 6 இடங்களையும், பாரதிய ஷேட்கரி கம்கார் பாக்ஷ் (ஜனவிகாஸ் சேனா) 3 இடங்களையும், விபிஏ 2 இடங்களையும், ஏஐஎம்ஐஎம், பிஎஸ்பி, சிவ சேனா ஆகியவை தலா ஒரு இடங்களையும் பெற்றிருந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடத்தில் வெற்றி பெற்றிருந்தன.
விபிஏ கவுன்சிலர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். விபிஏ கவுன்சிலர் இருவர் காங்கிரஸ்க்கு வாக்களித்திருந்தால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார். காங்கிரஸ் கட்சியுடன் விபிஏ கூட்டணி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் குதிரை பேரம் நடைபெற்றது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
- மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதலிப்பதாக தெரிவித்தார்.
- கடந்த 20 நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் மாணவியை கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டம், மல்காஜ்கிரி அடுத்த போச்சாரம் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் மைதீன் (வயது 27) என்பவர் இயற்பியல் ஆசிரியராக வேலை செய்து வந்தார். பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய மைதீன் தன்னுடைய வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு காதல் பாடம் நடத்தினார்.
மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதலிப்பதாக தெரிவித்தார். மாணவியும் அவரது ஆசை வார்த்தையில் மயங்கி மைதீனை காதலித்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் மாணவியை கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் தனது மகளின் கழுத்தில் மஞ்சள் கயிறு இருப்பதை கண்ட அவரது தாயார் மகளிடம் விசாரித்தார். அப்போது மாணவி நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவியின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்தனர். பின்னர் மல்காஜ்கிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மைதீனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- நானே சென்று கட்டிடம் மோசமான நிலையில் இருப்பதைப் பார்த்தேன்.
- ஒரு சிறிய அறையில் தான் ஒரு சுகாதார அமைப்பு இயங்கி வருகிறது.
பிரபல நாட்டுப்புறப் பாடகியும், பீகார் மாநிலத்தின் அலிநகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ-வுமான மைதிலி தாகூர், இன்று (பிப்.10) சட்டப்பேரவையில் தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சரை விமர்சித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மங்கல் பாண்டேவை மைதிலி தாகூர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். அதாவது தனது தொகுதியான அலிநகரில் உள்ள அரசு மருத்துவமனையின் மோசமான நிலைக்குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர் கட்டிடம் மோசமான நிலையில் இல்லை என்றும், பழுதுபார்ப்பு மட்டுமே தேவை என்றும் பதிலளித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மைதிலி சட்டப்பேரவையில்,
"அமைச்சரின் பதிலில் நான் முழுமையாக திருப்தி அடையவில்லை. ஏனெனில்,'கட்டிடம் மோசமான நிலையில், சிறிய பழுதுவேலைலகள் மட்டுமே இருப்பதாக' தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நானே சென்று கட்டிடம் மோசமான நிலையில் இருப்பதைப் பார்த்தேன்.
அங்கே ஒரு சிறிய அறையில் தான் ஒரு சுகாதார அமைப்பு இயங்கி வருகிறது. அங்கு இப்போது மருத்துவர் யாரும் இல்லை, கடந்த காலத்தில் அங்கு இரண்டு மருத்துவர்கள் இருந்தார்கள், ஆனால் தற்போது இல்லை. நான் மிகவும் சிறிய வயதிலிருந்தே சுகாதார அமைச்சரைப் பார்த்து வருகிறேன். அவர் சுகாதாரத் துறையில் பணியாற்றுவதை நான் கவனித்து வருகிறேன். எனவே, இது மிகவும் முக்கியமானது என்பதால், அவர் பொதுமக்களின் நலனுக்காக இதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஐந்து முதல் ஏழு பஞ்சாயத்துகள் இந்த மருத்துவமனையைச் சார்ந்துள்ளன. இந்த மருத்துவமனையிலிருந்து 40,000 முதல் 50,000 பேர் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த மருத்துவமனை எனது முழு தொகுதியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, இதன் மூலம் கன்ஷ்யாம்பூர் மற்றும் அலினகர் ஆகிய இரண்டு கிளைகளும் பயனடைய முடியும்" என தெரிவித்தார்.
தனது சொந்தக் கட்சியின் அமைச்சரையே சட்டப்பேரவையில் விமர்சித்தது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சமூக வலைதளங்களில் பலரும் மைதிலி தாகூரின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.
- கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில் 15-ஆம் தேதி பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா.
- சுமார் 24 மொழிகளில் 14 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த விழாவைக் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் இருக்கும் ஈஷா தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில், வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி, சத்குருவின் முன்னிலையில் நடைபெறும் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழாவில் கேரள மாநில மக்களும் பங்கேற்கும் வகையில், கேரள மாநிலம் முழுவதும் உள்ள 29 கோயில்களில் இவ்விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதில் குறிப்பாக 12 கோயில்களில் பங்கேற்பாளர்களுக்கு 'ருத்ராட்ச தீட்சை' வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஆதியோகி முன்பு நடைபெறும் இந்த மஹாசிவராத்திரி விழா, உலகிலேயே அதிக மக்களால் நேரலையில் பார்க்கப்படும் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. சுமார் 24 மொழிகளில், 100-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் இணையதளங்கள் வழியாக 14 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த விழாவைக் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மஹாசிவராத்திரி நாள் இரவில் மஹாமந்திர உச்சாடனம் மற்றும் சக்திவாய்ந்த தியானங்களை சத்குரு வழிநடத்த உள்ளார். இதனுடன் மக்களை இரவு முழுவதும் விழிப்புணர்வுடன் வைத்துக் கொள்ள உதவும் வகையில் பாரத பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

கேரளாவில் உள்ள பக்தர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களுக்கு அருகிலுள்ள கோயில்களிலேயே திரளாகக் கூடி, அந்தப் புனிதமான இரவின் ஆற்றலை நேரடியாக அனுபவிக்க ஈஷா தன்னார்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
- வீட்டில் மகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்ற சூழ்நிலை உள்ளது.
- சிறுமி வெட்கத்துடன் புன்னகைப்பதும் நெட்டிசன்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
ஆட்டோ டிரைவர்கள் தங்களது வாகனத்தில் வித்தியாசமான அலங்காரம் மற்றும் நவீன வசதிகள் செய்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது உண்டு. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ ஒற்றை பெற்றோரின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் காட்சிகள் காண்போரை நெகிழ செய்துள்ளது.
அதில், ஆட்டோ பயணத்தின் போது பயணி ஒருவர் ஆட்டோவின் பின் இருக்கையில் ஒரு சிறுமி மிகவும் அமைதியாக உறங்கி கொண்டிருப்பதை கவனிக்கிறார். அவர் டிரைவரிடம் அந்தச் சிறுமியை பற்றி கேட்கிறார். அதற்கு டிரைவர், அது என் மகள் ஆயுஷி என்று கூறுகிறார். தொடர்ந்து பயணி ஆட்டோ டிரைவரிடம் அவரை பற்றி கேட்ட போது அவர் அளித்த பதில் பலரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த சிறுமியின் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த தந்தை தனது மகளை தனியாகவே வளர்த்து வருகிறார். வீட்டில் மகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்ற சூழ்நிலை உள்ளது.
எனவே தினமும் ஆட்டோ ஓட்ட செல்லும் போதெல்லாம் தனது மகளையும் உடன் அழைத்து செல்கிறாராம். ஆட்டோவின் இரைச்சல், மேடுபள்ளங்கள் என எதை பற்றியும் கவலைப்படாமல் அந்தத் தந்தை மீதான நம்பிக்கையில் ஆயுஷி நிம்மதியாக உறங்குகிறாள். வேலையையும் குழந்தைப் பராமரிப்பையும் ஒரே நேரத்தில் கவனிக்கும் ஒரு ஒற்றை பெற்றோரின் போராட்டத்தை பிரதிபலிக்கும் இந்த வீடியோவின் முடிவில், அந்தப் பயணி தந்தைக்கும் மகளுக்கும் சிற்றுண்டி வாங்கித் தருவதும், அப்போது அந்தச் சிறுமி வெட்கத்துடன் புன்னகைப்பதும் நெட்டிசன்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், எளியவர்களின் சத்தமில்லாத போராட்டங்களுக்கு இந்தத் தந்தை ஒரு உதாரணம் என பதிவிட்டனர்.
- பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்ததாக ஓம் பிர்லா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
- சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தின் கீழவையில் பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்ததாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் பதிலளிக்க இருந்தபோது, சில காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமரின் இருக்கைக்கு அருகே சென்று ஒரு அசம்பாவித சம்பவத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், இத்தகைய சூழலில் நாட்டின் ஜனநாயக மரபுகள் சிதைக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று தாமே கேட்டுக்கொண்டதாக ஓம் பிர்லா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. .
இந்நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை மக்களவை செயலகத்தில் எதிர்க்கட்சிகள் வழங்கினர்.
- உடல் வெப்பநிலையைச் சரியாகப் பராமரிக்க உதவும் கருவியில் குழந்தை வைக்கப்பட்டது.
- மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததில், குழந்தை தீ காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தனியார் மருத்துவமனையில் பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று தீயில் கருகி உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் உள்ள பக்கர்கஞ்சில் வசிக்கும் அருண் நிஷாத் மற்றும் அவரது மனைவி பிட்டு ஆகியோருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிறந்த குழந்தையின் உடல் வெப்பநிலையைச் சரியாகப் பராமரிக்க உதவும் கருவியில் குழந்தை வைக்கப்பட்டது. அப்போது மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததில், அதிலிருந்த குழந்தை தீ காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறது.
இந்த சம்பவத்தைப் பல மணி நேரம் கழித்தே பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளது மருத்துவமனை நிர்வாகம். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவத்தை குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
- 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின.
- காங்போக்பி, உக்ருல் மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி சென்று கொண்டிருக்கிறார்கள்.
இம்பால்:
மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குகி, மெய்தி ஆகிய இரு சமூகங்கள் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து பா.ஜ.க. அரசு விலகியதால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே கடந்த 4-ந் தேதி கெம்சந்த் சிங் தலைமையில் புதிய பா.ஜ.க. அரசு பதவியேற்றது.
இதற்கிடையே மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது. உக்ருல் மாவட்டம் லிட்டன் சரேய்கோங் கிராமத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் தங்குல் சமூகத்தை சேர்ந்த நபரை தாக்கியது. மேலும் வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின.
இந்த நிலையில் லிட்டன் சரேய்கோங் கிராமத்தில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு நடந்தது. ஒரு கும்பல் பல சுற்றுகளாக துப்பாக்கியால் சுட்டன. இந்த சத்தங்களை கேட்டு அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த லிட்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் பதற்றம் நீடித்து வருகிறது.
இதற்கிடையே மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் குகி மற்றும் தங்குல் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்கிறார்கள்.
கடந்த 2 நாட்களாக லிட்டன் சரேய்கோங் மற்றும் அண்டை குகி கிராமங்களை விட்டு காங்போக்பி, உக்ருல் மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி சென்று கொண்டிருக்கிறார்கள்.
வன்முறையை தொடர்ந்து உக்ருல் மாவட்டத்தில் இணைய சேவைகளை 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
- பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு
- காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகையிடும் வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை "நேரடியாகத் தாக்க" திட்டமிட்டிந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்ததாகச் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தெரிவித்தார்.
பிரதமரின் பாதுகாப்பு கருதியே அவரது பதிலுரை ரத்து செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்களை கேடயமாகப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்ததாக ஓம் பிர்லா தெரிவித்தார்.
பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகையிடும் வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "காங்கிரஸ் கட்சி தங்கள் எம்.பி.க்களின் மிகவும் இழிவான நடத்தையைப் பற்றி பெருமை கொள்கிறது. நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.
- ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.
- 100 விமானங்களை இந்தியாவில் தயாரிக்க திட்டம்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விரைவில் டெல்லி வர இருக்கிறார். இந்த நிலையில், இந்திய விமானப்படையின் பல்நோக்கு போர் விமானத் திட்டத்திற்காக 114 பிரெஞ்சு தயாரிப்பு ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ரூ.3.25 லட்சம் கோடி ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் இந்த வாரம் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒப்புதல் அளிக்கப்பட்டால், இது இந்தியாவின் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தமாக அமையும். இதில் சுமார் 100 விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன. இது உயர்தர போர் விமான தொழில்நுட்பத்தை இடமாற்றம் செய்வதையும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்பட்டால், இது இந்தியாவை பிரான்ஸ் அல்லாத நாடுகளில் ரஃபேலின் மிகப்பெரிய இயக்குநர்களில் ஒன்றாக உறுதிப்படுத்தும்.
இந்த இரட்டை என்ஜின், பல்நோக்கு போர் விமானம் உலகின் தலைசிறந்த விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இது வான்வெளி ஆதிக்கம் மற்றும் துல்லியமான தாக்குதல் பணிகளை நிறைவேற்றுவதற்கு பெயர்பெற்றது. இந்தியா ஏற்கனவே 36 ரஃபேல்களை வைத்துள்ளது.– இந்திய விமானப்படை கடந்த 2024 டிசம்பரில் கடைசி 'சி' வகை விமானத்தை பெற்றது. மேலும் ரூ.63,000 கோடி மதிப்புள்ள 26 கடற்படை வகைகளான 'எம்' விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.
அந்த ஒப்பந்தத்தில் நான்கு இரட்டை இருக்கை பயிற்சி விமானங்கள் வாங்குதல், கடற்படை பராமரிப்பு, லாஜிஸ்டிக்ஸ் ஆதரவு மற்றும் பணியாளர்கள் பயிற்சி ஆகியவை உள்ளடங்கிய MRO (பராமரிப்பு, பழுதுபார்த்தல், மேம்படுத்தல்) ஒப்பந்தமும் அடங்கும். 'எம்' வகை ரஃபேல்கள் ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போன்ற விமானம் தாங்கி கப்பல்களில் பயன்படுத்தப்படும்.
இந்திய விமான படையினர் இந்த விமானங்களை ஏற்கனவே போரில் பபயன்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு மே மாதம் பஹல்கம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடியான "ஆபரேஷன் சிந்தூர்" மற்றும் லடாக்கில் பங்கேற்றன. ஆபரேஷன் சிந்தூரின் போது பயன்படுத்தப்பட்ட ரஃபேல்கள், ஸ்கால்ப் என்ற வான்-வழி குரூயிஸ் ஏவுகணையை ஏவியதாக நம்பப்படுகிறது. இது 250 கிமீ தொலைவில் உள்ள கடின இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடியது, இது ஈராக் போர் மற்றும் லிபியாவில் உள்ளிட்ட பல்வேறு மோதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரான்ஸ் மற்றும் இந்தியா, உற்பத்தியாளர்களான டசால்ட் ஏவியேஷன் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் இடையே நான்கு முக்கிய உற்பத்தி இடமாற்ற ஒப்பந்தங்களை அறிவித்தன. இது இந்திய இராணுவத்திற்கு ரஃபேல்களின் பாக்கியை விரைவுபடுத்தும். டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ஐதராபாத்தில் பிரெஞ்சு போர் விமானத்தின் முக்கிய கட்டமைப்பு பிரிவுகளை தயாரிப்பதற்கான அதிநவீன உற்பத்தி வசதியை அமைக்கும்.
இதில் பின்புற உடற்பகுதியின் பக்கவாட்டு ஷெல்கள், முழு பின்புற பிரிவு, மைய உடற்பகுதி மற்றும் முன்புற பிரிவு ஆகியவை அடங்கும். முதல் உடற்பகுதி பிரிவுகள் 2028இல் உற்பத்தி வரிசையில் இருந்து வெளியேறும். ஒரு மாதத்திற்கு இரண்டு முழு உடற்பகுதிகளை வழங்குவதே இலக்கு, ரஃபேல் போர் விமானத்தின் இறுதி அசெம்பிளி பிரான்ஸின் போர்டோ அருகிலுள்ள மெரிக்னாக்கில் உள்ள டசால்ட் உற்பத்தி ஆலையில் நடைபெறும்.






