search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உ.பி மந்திரி தரம் சிங் சைனி
    X
    உ.பி மந்திரி தரம் சிங் சைனி

    உ.பி தேர்தல்: 3-வது மந்திரி பதவி விலகல்- ஆட்டம் காணும் பா.ஜ.க

    தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், வேலையில்லாத இளைஞர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோரை பா.ஜ.க புறக்கணித்து வருவதாக தரம் சிங் சைனி தெரிவித்தார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. 

    இந்நிலையில் பா.ஜ.கவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அக்கட்சியைச் சேர்ந்த மந்திரிக்கள் சுவாமி பிரசாத் மவுரியா, தாரா சிங் சவுகான் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதை தொடர்ந்து 5 எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

    இந்நிலையில் தற்போது உ.பி மந்திரி தரம் சிங் சைனி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர், ஆயுஷ், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் ஆகிய துறைகளின் (தனிப் பொறுப்பு), மாநில மந்திரியாக இருந்தார்.

    தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், வேலையில்லாத இளைஞர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோரை பா.ஜ.க புறக்கணித்து வருவதால் தாம் பதவி விலகுவதாக தரம் சிங் சைனி தெரிவித்தார்.

    தேர்தலுக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் பா.ஜ.க மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து பதவி விலகுவது அக்கட்சியினரை ஆட்டம் காண வைத்துள்ளது. 
    Next Story
    ×