search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு - சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

    திமுக தொடுத்துள்ள தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை காலை தீர்ப்பு வழ்ங்குகிறது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    வேட்புமனு நாளை தொடங்க உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், வார்டு மறுவரையறை முழுமையாக நிறைவடையும் வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்.  வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது.

    தி.மு.க.வின் புதிய மனு மற்றும் 5 புதிய மாவட்டங்களின் வாக்காளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    இந்த மனு மீதான விசாரணையின் போது, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில், நாளை காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இதனால், உள்ளாட்சி  தேர்தலுக்கு தடை விதிக்கப்படுமா? அல்லது தேர்தல் நடத்த அனுமதி  கிடைக்குமா? என்பது நாளை தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×