search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சோனியா-ராகுல்
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சோனியா-ராகுல்

    பாராளுமன்ற வளாகத்தில் சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்

    கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாரதிய ஜனதாவை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் நடந்து வரும் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகளில் பா.ஜனதாவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கோவாவிலும் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென பா.ஜனதா பக்கம் இழுக்கப்பட்டனர்.

    பா.ஜனதாவின் இந்த நடவடிக்கைகளுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பதற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    இதற்கிடையே கர்நாடகா- கோவா மாநிலங்களில் காங்கிரசை அழிக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் இன்று பெங்களூரிலும், டெல்லியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காந்தி சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா-ராகுல் கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்.பி.க்கள், மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்


    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள், “ஜனநாயகத்தை காப்பாற்று” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி நின்றனர். சுமார் 30 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×