என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தமிழக உரிமைகள் பறிபோகின்றன என்று டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். #dinakaran #edappadipalanisamy

    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சாகுல் ஹமீதுக்கு ஆதரவு கேட்டு, க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட தும்பிவாடி, ஆரியூர், எல்ல மேடு, சின்னதாராபுரம், க.பரமத்தி, பவுத்திரம், சத்திரம் உள்ளிட்ட இடங்களில் அக் கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவின் ஆதரவோடு பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்கினோம். ஆனால் அவர் பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்பட்டதினால், பின்னர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினோம்.

    இப்போது இங்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நமது சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து கொண்டுபோய் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார். எனவே கட்சி மீது கொள்கை பிடிப்புள்ளவரை தேர்வு செய்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.

    ஜெயலலிதாவின் பெயரை சொல்லி தற்போது ஆட்சி நடத்தி கொண்டிருப்பவர்கள், அவர் முன்பு எந்த திட்டங்களையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கினாரோ அதையெல்லாம் தற்போது செயல்படுத்துகின்றனர்.

    இதனால் தமிழக உரிமை பறிபோவதோடு மோடியின் எடுபிடிகளாக பழனிசாமியும், பன்னீர் செல்வமும் இருக்கின்றனர். அவர்களது ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வந்து, ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் மலர செய்ய பரிசு பெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்.

    தமிழக விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், வேலை வாய்ப்புக்காக காத்திருக்கக்கூடிய இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கு நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரசாரத்தின்போது மாவட்ட செயலாளர் பி.எஸ். என்.தங்கவேல் மற்றும் கட்சி யினர் உடனிருந்தனர். #dinakaran #edappadipalanisamy

    உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. படுதோல்வி அடையும். இதனால் உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறது என்று தமிழக காங். தலைவர் அழகிரி கூறியுள்ளார். #ksalagiri #admk #localelection

    கோவை:

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ். அழகிரி இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தோல்வி பயத்தால் தன் அரசியல் நிலைமையை மாற்றியுள்ளார். சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக ராகுல் காந்தியை பற்றி அவதூறு பேசி வருகிறார்.


    புல்வாமா சம்பவத்தில் ராணுவ நடவடிக்கைகளை மோடி மாற்றி அமைத்ததே வீரர்கள் உயிர் பலிக்கு காரணம். தமிழிசை சவுந்தரராஜனுக்கு வரலாறு தெரியவில்லை. தானே புயல் பாதிப்புகளை உள்துறை மந்திரியாக இருந்த ப. சிதம்பரம் நேரில் சென்று பார்வையிட்டார்.

    கஜா புயல் பாதிப்பு குறித்து பா.ஜனதா சார்பில் ஒரு நிர்வாகி கூட வாயை திறக்கவில்லை.

    நீட் தேர்வில் காங்கிரஸ் தெளிவாக உள்ளது. பா.ஜனதா போல மாநிலங்களுக்கு எதிராக செயல்படாது. 3 எம். எல். ஏ.க்கள் தகுதி நீக்கம் என்பது ஜனநாயக போக்கு கிடையாது. மோடியுடன் சேர்ந்து எடப்பாடி அரசும் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மத்தியில் அமைச்சரவை அமைக்கும் அளவிற்கு வெற்றி பெறும்.

    உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. படுதோல்வி அடையும். இதனால் உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறது.

    பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு என்பது அந்தந்த மாநிலங்களில் தேர்வுகளை நடத்தி பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ksalagiri #admk #localelection

    தமிழக அரசியல் தலைவர்கள் தன்னை விட சிறப்பாக நடிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHassan #makkalneedhimaiam
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 

    இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விட சிறப்பாக நடிக்கின்றனர்; அதைக்கண்டு மக்களாகிய நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள். மக்கள் நீதி மய்யத்தில் சாதி, மத பேதமில்லை; அன்பு, பாசம் மட்டுமே இருக்கிறது.

    எங்கள் வேட்பாளர் முறையாக பணியாற்றா விட்டால் நானே ராஜினாமா கடிதத்தை வாங்கி உங்களிடம் கொடுப்பேன். காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலத்தை போக்க முடியுமா என்ற சந்தேகத்தை அரசியல்வாதிகள் ஏற்படுத்தி உள்ளனர். நான் செய்வேன் அல்ல; நாம் செய்வோம் என்று இணைந்து செய்தால்தான் நாடு விளங்கும். என்னால் பணம் கொடுக்க முடியாது; நான் இந்த மக்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்” என்று பேசினார். #KamalHassan #makkalneedhimaiam 
    மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைய வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக அமர வேண்டும் என்று ஆதரவு தெரிப்பதற்காக பாலிவுட் திரை பிரபலங்கள் டெல்லியில் இன்று கலந்துரையாடல் நடத்தினர். #celebritiesgettogether #celebritiessupportBJP
    புதுடெல்லி:

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் திரையுலக பிரமுகர்களின் ஆதரவு அதிகமாக கிடைத்துள்ளது. விவேக் ஓபராய் உள்ளிட்ட சில பெரிய நடிகர்கள் வெளிப்படையாக பாஜகவுக்கு பிரசாரம் செய்து வருகின்றனர். 

    சன்னி டியோல் உள்ளிட்ட நடிகர்களுக்கு தேர்தலில் போட்டியிடவும் பாஜக வாய்ப்பளித்துள்ளது. இந்நிலையில், மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைய வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக அமர வேண்டும் என்று ஆதரவு தெரிப்பதற்காக பாலிவுட் திரை பிரபலங்கள் பலர் டெல்லியில் இன்று கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.

    மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் பாஜக மேலிட தலைவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மனோஜ் ஜோஷி, மல்யுத்த வீரர் ‘தி கிரேட் காலி’, ஜெயப்பிரதா, பூனம் தில்லான் உள்ளிட்ட நடிகர், நடிகையர் கலந்து கொண்டனர். #celebritiesgettogether #celebritiessupportBJP
    பதவிக்காக எதையும் செய்யகூடியவர் ஓ பன்னீர்செல்வம் என்று தங்க தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். #thangatamilselvan #opanneerselvam

    திருப்பரங்குன்றம்:

    அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் திருப்பரங்குன்றத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர கூறியதாவது:-

    தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்கள் பிரசாரத்தில் அவர்களின் நிலைப்பாட்டில் பின்வாங்குகிறார்கள். எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை அவசரமானது. தமிழக மக்கள் புதிய தலைமையை எதிர்பார்க்கிறார்கள்.

    அம்மா இல்லாத நிலையில் அ.தி.மு.க.வினர் தி.மு.க. விற்கு வாக்களிப்பார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசுவது தவறானது. அ.ம.மு.க.விற்கு தான் அம்மாவின் தொண்டர்கள் வாக்களிப்பார்கள்.

    தமிழக மக்களுக்கு எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லை என்பதையே அமைச்சர்கள் பிரசாரங்கள் வெளிப்படுத்துகிறது. திருப்பரங்குன்றம் தொகுதியில் பணப்பட்டுவாடா குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

    ஜெயக்குமார் விஞ்ஞான பூர்வமாக யோசிக்கிறார். காவி வேட்டியை கட்டி கொண்டு மோடி சாமியை வணங்கதான் வாரணாசி சென்றுள்ளனர். ஓ.பி.எஸ். குடும்பத்தால் தமிழகத்தின் மானம் வடமாநிலத்தில் காற்றில் பறக்கிறது.


    மோடி நீட் தேர்வு கொண்டு வந்த காரணமே வட மாநிலத்தவர்களை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என்பதே. நீட் என்பது தமிழகத்தில் திணிக்கப்படுகிறது. வசந்த குமார் எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் நிலை வந்தால் பிரச்சினை உள்ளது.

    அ.ம.மு.க. என்பது அனைத்து தொகுதிகளிலும் நிச்சயம் வெல்லும். ஆளுநர் பதவியை பெற்றுக்கொண்டு அரசியல் வாழ்வை முடித்து கொள்ளலாம் என ஓ.பி.எஸ். நினைக்கிறார். அவரது மகன் வெற்றி பெறமாட்டார். பதவிக்காக எதையும் செய்யகூடியவர் ஓ.பி.எஸ். பா.ஜனதா சொல்படியே ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ். செயல்படுகிறார்கள்.

    தி.மு.க.வின் ‘பி’ என்பது எங்கள் மீதான அச்சத்தின் வெளிப்பாடு. ஓட்டை பிரிக்கும் கட்சி அ.ம.மு.க. அல்ல. வெற்றிபெறும் கட்சியாக உள்ளது. நான் ஓ.பி.எஸ்.சின் துரோகங்களை தான் எடுத்துக் கூறுகிறேன். அ.தி.மு.க.வை நாங்கள் பிரிக்கவில்லை. நாங்கள் உண்மையான அ.தி.மு.க. என்பதை தேர்தல் முடிவிற்கு பின் மக்களே அடையாளம் காட்டுவார்கள்.

    தேர்தல் முடிவிற்கு பின் அ.தி.மு.க. காணாமல் போகும். அ.ம.மு.க. தான் அ.தி.மு.க. என்பதை நிரூபிப்போம். திருப்பரங் குன்றம் தொகுதியில் குடிநீர், பாதாள சாக்கடை, சாலைவசதி அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என மக்கள் குற்றச் சாட்டுகளை அடுக்குகின்றனர். பாராளுமன்ற தேர்தல் முடிவிற்கு பின் இழுபறி நிலை ஏற்பட்டால் கட்டாயம் பா.ஜனதாவிற்கு ஆதரவு கொடுக்கமாட்டோம். பா.ஜனதா தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு ஆதரவு தொடர்பாக பொதுச் செயலாளர் முடிவு செய்வார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #thangatamilselvan #opanneerselvam  

    ராஜீவ் காந்தி ஊழல்வாதி என கூறிய பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். #RahulGandhi #PMModi

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி உத்திரபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, எனது மதிப்பை சீர்குலைப்பதற்கே ராகுல் காந்தி ரபேல் விமான ஒப்பந்தத்தில் என்னை குற்றம் சாட்டி வருகிறார்.

    உங்கள் (ராகுல்காந்தி) தந்தை ராஜீவ்காந்தி நேர்மையானவர் என்று அவரது விசுவாசிகளால் கூறப்பட்ட நிலையில் அவர் தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் ஊழலில் ‘நம்பர் ஒன்’னாக திகழ்ந்தார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டதை சுட்டிக்காட்டி மோடி பேசினார்.

    மேலும் மோடி பேசும்போது, எனது செல்வாக்கை சிதைத்து, என்னை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் நாட்டில் நிலையற்ற, பலவீனமான அரசு அமைய வேண்டும் என விரும்புகிறார்கள். நான் பிறக்கும்போது தங்க தட்டிலோ, வசதியான குடும்பத்திலோ பிறக்க வில்லை என ராகுல் காந்தியையும் விமர்சித்தும் பேசினார்.

     


     

    மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:-

    மோடிஜி, போர் முடிந்துவிட்டது. உங்களது கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. என் தந்தையை பற்றிய உங்களின் உள் நம்பிக்கைகளை பரப்புவது எந்த விதத்திலும் உங்களை பாதுகாக்காது. உங்களுக்கு எனது அனைத்து அன்பும், ஒரு பெரிய அரவணைப்பும் என்று கூறியுள்ளார்.

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியதாவது:-

    மோடி எல்லை மீறி மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி அவதூறாக பேசியுள்ளார். போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ்காந்தி லஞ்சம் பெற்றார் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை என கூறி கோர்ட்டு வழக்கை தள்ளுபடி செய்தது பற்றி மோடிக்கு தெரியாதா?

    இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்ததும் அப்போதைய பா.ஜனதா ஆட்சி என்பது மோடிக்கு தெரியுமா?

    இவ்வாறு அவர் கூறினார். #RahulGandhi #PMModi

    தமிழிசை நோட்டாவை விட அதிக ஓட்டு வாங்கவேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Congress #Kushboo

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய வெளிமாநிலங்களிலும் பிரசாரம் செய்து வந்தேன். அடுத்து டெல்லி செல்ல உள்ளேன். எல்லா பகுதிகளிலும் மோடி மீது வெறுப்பு இருக்கிறது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற விருப்பம் மக்களிடையே இருப்பதை பார்த்தேன். எனவே காங்கிரசின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

    மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் கீழ்த்தரமான வார்த்தைகளை எல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்.

    ராகுலை பார்த்து உங்கள் தந்தை ஒரு ஊழல்வாதியாகத்தான் இறந்தார் என்கிறார். ஒரு முன்னாள் பிரதமரை இவ்வளவு கீழ்த்தரமாக யாரும் பேச மாட்டார்கள். தோல்வி அடையப் போகும் விரக்தியில் மோடி இப்படியெல்லாம் பேசுகிறார்.


    அவர் எவ்வளவு குரூரமானவர் என்பதை அவரது பேச்சின்மூலம் உணர்ந்து கொள்ளலாம். அதி.மு.க. வினர் இன்று மோடியை தூக்கிப்பிடிக்கிறார்கள். அவர்களது தலைவி ஜெயலலிதாவையும் குற்றவாளியாகத்தானே இறந்தார் என்று மோடி பேசமாட்டார் என்பது என்ன நிச்சயம்?

    மோடி ராஜ்ஜியத்தில் எதுவும் சாத்தியமாகும் என்கிறார்கள். உண்மைதான். ஒரு ராணுவ வீரர் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் மலேகான் குண்டு வெடிப்பு பங்கரவாதி பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர்கள் ஆளும் ராஜ்ஜியமும், அதன் நியாயமும் இப்படித்தான் இருக்கும். எனவே தான் மக்கள் 23-ந்தேதி மொத்தமாக அவர்களை வீட்டுக்கு அனுப்ப போகிறார்கள்.

    தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிடுகிறது. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது. கடலில் தாமரை மலரும் என்று தமிழிசை கூறியிருக்கிறார். உப்பு நீரில் தாமரை மலராது என்பது அவருக்கு தெரியாது போலும்.

    அதற்கு காரணம் அவர்கள் அ.தி.மு.க.வோடு இருக்கிறார்கள். அங்கு ஏற்கனவே தெர்மாகோல் விஞ்ஞானி போல் பலர் இருக்கிறார்கள். அதேபோல் தமிழிசையும் கூறி இருக்கிறார்.

    தமிழிசை மீது மட்டும் எனக்கு ஒரு ஆசை. அவரும் ஒரு பெண் என்பதால் நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கி தோற்க கூடாது. நோட்டாவை விட கூடுதலாக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்பதே என் ஆசை.

    தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி 35 முதல் 36 தொகுதிகளை கைப்பற்றும் என்பது என் கணிப்பு.

    இவ்வாறு குஷ்பு கூறினார். #LokSabhaElections2019 #Congress #Kushboo

    பாராளுமன்றத்துக்கு 5வது கட்டமாக நடைபெற உள்ள தேர்தலில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் போட்டியிடுகிற ரேபரேலி, அமேதி உள்பட 51 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. #RahulGandhi #SoniaGandhi

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்டது.

    முதல் கட்டமாக கடந்த 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 18-ந்தேதி 95 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 23-ந்தேதி 116 தொகுதிகளுக்கும், 4-வது கட்டமாக 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும் ஓட்டுப் பதிவு நடந்தது. இதுவரை 373 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து உள்ளது.

    5-வது கட்ட வாக்கு பதிவு நாளை (6-ந்தேதி) நடக்கிறது.

    5-வது கட்ட ஓட்டுப் பதிவில் 51 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

    பீகார் (5), காஷ்மீர் (2), ஜார்க்கண்ட் (4), மத்திய பிரதேசம் (7), ராஜஸ்தான் (12), உத்தரபிரதேசம் (14), மேற்கு வங்காளம் (7).

    இந்த 51 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஒய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.

     


    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் வயநாடுக்கு தேர்தல் முடிந்துவிட்டது. அமேதி தொகுதிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இதேபோல ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா போட்டியிடும் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.

    நாளை வாக்குப் பதிவை சந்திக்கும் மற்ற முக்கிய தலைவர்கள் வருமாறு:-

    மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் (லக்னோ), ஸ்மிருதி இரானி (அமேதி), ரத்தோர் (ஜெய்ப்பூர், ரூரல்), ஜெயந்த்சின்கா, அர்ஜின்ராம் மேக்வால். இந்த 51 தொகுதிகளில் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    5-வது கட்ட தேர்தலில் 8.76 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள். அதில் ஆண் வாக்காளர்கள் 4.63 கோடி பேர் ஆவார்கள். 4.12 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 96,088 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. #RahulGandhi #SoniaGandhi

    விவி பாட் ஒப்புகை சீட்டால் பாராளுமன்ற தேர்தல் முடிவு மாலை 4 மணிக்கு பிறகே தெரியவரும் என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #Loksabhaelections2019

    புதுடெல்லி:

    இந்தியாவில் தேர்தல்களில் ஆரம்பத்தில் ஓட்டு சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. இதன்பிறகு எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    முதன் முதலில் கேரள மாநிலம் வடக்கு பரவூர் தொகுதி சட்டமன்ற தேர்தலில் 1982-ம் ஆண்டு ஓட்டு எந்திரம் பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டது.

    பின்னர் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் சில தொகுதிகளில் மட்டும் ஓட்டு எந்திரத்தை பயன் படுத்தினார்கள்.

    1999-ல் கோவா மாநில சட்டசபை தேர்தலில் முழுமையாக ஓட்டு எந்திரம் பயன்படுத்தப்பட்டது. 2004 பாராளுமன்ற தேர்தலில் இருந்து இந்தியா முழுவதும் ஓட்டு எந்திரம் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால், ஓட்டு எந்திரத்தில் உள்ள பொத்தானை அழுத்தும் போது, யாருக்கு ஓட்டு பதிவாகிறது என்பதை நமக்கு காட்டாது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக புகார் கூறப்பட்டது.

    இதனால் யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்பதை நமக்கு காட்டும் வகையில் விவிபாட் (ஒப்புகை சீட்டு) என்ற எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதில், ஓட்டு எந்திரத்தில் பொத்தானை அழுத்தியதும் அங்குள்ள சிறிய மானிட்டரில் நாம் ஓட்டு போடும் நபரின் படம், சின்னம் ஆகியவை தெரியும். அதில் இருந்து ஒப்புகை சீட்டு ஒன்றும் அதற்குள் உள்ள பெட்டியில் விழும்.


    இந்த எந்திரம் ஏற்கனவே பரிட்சார்த்த முறையில் பல தேர்தல்களில் பயன் படுத்தப்பட்டது. இப்போது நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் விவிபாட் எந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    ஓட்டு எந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே, பழைய மாதிரி ஓட்டு சீட்டு முறையையே கொண்டு வர வேண்டும் என்றும் பல எதிர்க்கட்சிகள் தேர்தல் கமி‌ஷனிடம் கோரிக்கை வைத்தன.

    ஆனால், அதை தேர்தல் கமி‌ஷன் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா ஒரு விவிபாட் எந்திரத்தில் ஒப்புகை சீட்டை எண்ணி, ஓட்டு எந்திரத்தின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.

    இதை ஏற்க மறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அதில், 50 சதவீத வி.வி. பாட் எந்திரத்தின் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. அதற்கு பதிலாக பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா 5 விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    இதன்படி இந்த பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வருகிற 23-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.

    வழக்கமாக எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே முன்னணி நிலவரங்கள் தெரிய வரும். அடுத்த 2 அல்லது 3 மணி நேரத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தெரிந்து விடும்.

    ஆனால், இப்போது சட்டமன்ற தொகுதி வாரியாக 5 எந்திரங்களில் ஒப்புகை சீட்டை எண்ண வேண்டி இருப்பதால் மிகவும் காலதாமதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக பெங்களூரு மாவட்ட தேர்தல் அதிகாரி மஞ்சுநாதபிரசாத் கூறியதாவது:-

    விவிபாட் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டி இருப்பதால் தேர்தல் முடிவு மிகவும் காலதாமதம் ஆகும். காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்கினாலும் மாலை 4 மணிக்கு பிறகு தான் தேர்தல் முடிவு தெரிய வரும்.

    ஓட்டு எந்திரத்தில் உள்ள எண்ணிக்கையும், ஒப்புகை சீட்டில் உள்ள எண்ணிக்கையும் வேறுபட்டால் முடிவை அறிவிப்பதில் மேலும் சிக்கல்கள் ஏற்படும். ஓட்டு எண்ணிக்கையை ஒரு கண்காணிப்பாளர் மற்றும் உதவி, மைக்ரோ மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக 5 விவிபாட் எந்திரங்களை எண்ண வேண்டி இருப்பதால் நாடு முழுவதும் 20 ஆயிரத்து 655 எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதனால் காலையிலேயே தேர்தல் முடிவை அறிய முடியாது என்று தெரிய வந்துள்ளது. #Loksabhaelections2019

    அரவக்குறிச்சி தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை பிரசாரம் செய்கிறார். #EdappadiPalaniswami #ADMK

    சென்னை:

    திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இதில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி இடையே 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி, போட்டியிடுகிறார்.

    அரவக்குறிச்சி தொகுதியில் வி.பி.செந்தில் நாதன். சூலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக வி.பி. கந்தசாமி ஓட்டப்பிடாரம் தொகுதியில் பெ.மோகன் போட்டியிடுகிறார்கள்.

    4 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே சூலூர் தொகுதியில் பிரசாரம் செய்தார். மீண்டும் இன்று பிரசாரத்தை தொடங்கும் அவர் 14-ந்தேதி வரை பிரசாரம் செய்கிறார்.

    இன்று அரவக்குறிச்சி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு தளவாபாளையத்தில் பிரசாரத்தை தொடங்கும் அவர் 5.45 மணிக்கு வேலாயுதம்பாளையம், 6.30 மணிக்கு புன்னம் சத்திரம், இரவு 7.15 மணிக்கு க.பரமத்தி, 8 மணிக்கு தென்னிலை, 8.45 மணிக்கு சின்னதாராபுரம், 9.15 மணிக்கு நஞ்சை காளகுறிச்சி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    நாளை 6-ந் தேதி மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி வீரகனூர்,5.45 மணிக்கு ஐராவதநல்லூர், 6.30 மணிக்கு சிந்தாமணி, இரவு 7.30 மணிக்கு வளையங்குளம், 8 மணிக்கு பெருங்குடி, 8.45 மணிக்கு அவனியாபுரம் பஸ்நிலையம், 9.20 மணிக்கு எம்.எம்.எஸ். காலனி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    7-ந்தேதி ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு ஓட்டப்பிடாரம், 5.40 மணிக்கு புதியம்புத்தூர், 6.20 மணிக்கு தருவைக்குளம், இரவு 7 மணிக்கு மாப்பிள்ளை ஊரணி, 8 மணிக்கு முத்தம்மாள் காலனி, 8.45 மணிக்கு முத்தையாபுரம், 9.20 மணிக்கு புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    11-ந்தேதி மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி நாகமலை புதுக்கோட்டை, 5.30 மணிக்கு வடபழஞ்சி, 6.30 மணிக்கு தனக்கன்குளம், இரவு 7.15 மணிக்கு ஆர்.வி. பட்டி, 8 மணிக்கு நிலையூர் கைத்தறி நகர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். 8.45 மணிக்கு திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்தில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

    12-ந் தேதி மாலை 5 மணிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதி வசவப்புரம், 5.45 மணிக்கு வல்லநாடு, 6.30 மணிக்கு தெய்வ செயல்புரம், இரவு 7.15 மணிக்கு சவாலப்பேரி, 8 மணிக்கு ஒட்ட நத்தம், 8.45 மணிக்கு ஒசநூத்து, 9.15 மணிக்கு குறுக்குச்சாலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    13-ந்தேதி மாலை 5 மணிக்கு அரவக்குறிச்சி தொகுதியில் சீத்தாப்பட்டி காலனி, 5.45 மணிக்கு அரவக்குறிச்சி, 6.30 மணிக்கு பள்ளப்பட்டி, இரவு 7.15 மணிக்கு கினங்கனூர், 8 மணிக்கு குரும்பப்பட்டி, 8.45 மணிக்கு ஆண்டில்பட்டி கோட்டை, 9.15 மணிக்கு ஈசரத்தப் பகுதியில் பிரசாரம் செய்கிறார்.

    14-ந்தேதி மாலை 5 மணிக்கு சூலூர் தொகுதி சின்னியம் பாளையம், 5.45 மணிக்கு முத்துக்கவுண்டம்புதூர், 6.45 மணிக்கு லாகராயம்பாளைம், இரவு 7.15 மணிக்கு கிட்டாம்பாளையம் நால்ரோடு, 8 மணிக்கு கருமத்தம்பட்டி, 8.30 மணிக்கு சாமளாபுரம், 9.20 மணிக்கு சூலூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். #EdappadiPalaniswami #ADMK

    பஞ்சாப் மாநிலத்தில் மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார். #congress #appmla
    பஞ்சாப்:

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதியில் மே 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 

    இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ரூப்நகர் சட்டப்பேரவை உறுப்பினர் அமர்ஜித் சிங், பஞ்சாப் முதல்மந்திரி அமரீந்தர் சிங் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    முன்னதாக, கடந்த மாதம் 29-ம் தேதி மான்ஸா சட்டப்பேரவை உறுப்பினர் நாஸர் சிங் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து காங்கிரசில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இரண்டு எம்.எல்.ஏ.-க்கள் காங்கிரசில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    அமர்ஜித் சிங்கின் வருகையை வரவேற்றுள்ள அம்மாநில முதல்மந்திரி அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியின் பலம் மேலும் வலுவடைந்துள்ளது என கூறினார். #congress #appmla
    பாராளுமன்ற தேர்தலில் ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கவுள்ள ஜார்கண்டின் ஹசாரிபாக் தொகுதியில் ரெயில் பெட்டிகளின் வடிவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி பலரை கவர்ந்துள்ளது. #Hazaribagh #lspolls
    ராஞ்சி:

    பாராளுமன்ற தேர்தலில் ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவை 6-ம் தேதி சந்திக்கவுள்ள ஹசாரிபாக் தொகுதிக்குட்பட்ட சட்டக் என்ற கிராமத்தில் வழக்கமாக வாக்குச்சாவடியாக பயன்படுத்தப்படும் ஒரு உயர்நிலைப் பள்ளி உள்ளது.

    இந்த தொகுதிக்குட்பட்ட டுல்மி பகுதி வட்டார அலுவலர் இங்கு வாக்கு சதவீதத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று விரும்பினார். இதற்காக வகுப்பறைகளின் நுழைவு வாயில்களில் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளின் வடிவத்தில் மர வேலைப்பாட்டால் வர்ணம் பூசிய தற்காலிக நுழைவு வாயில்களை இவர் அமைத்துள்ளார்.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கும் நிலையில் இந்த வாக்குச்சாவடி நுழைவு வாயில்களை குழந்தைகள் உள்பட ஏராளமானோர் ஆச்சரியத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். #Hazaribagh #lspolls
    ×