என் மலர்
செய்திகள்

ரெயில் பெட்டிகளின் வடிவில் வாக்குச்சாவடி - ஜார்கண்டில் வாக்காளர்களை கவர புதிய யுக்தி
பாராளுமன்ற தேர்தலில் ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கவுள்ள ஜார்கண்டின் ஹசாரிபாக் தொகுதியில் ரெயில் பெட்டிகளின் வடிவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி பலரை கவர்ந்துள்ளது. #Hazaribagh #lspolls
ராஞ்சி:
பாராளுமன்ற தேர்தலில் ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவை 6-ம் தேதி சந்திக்கவுள்ள ஹசாரிபாக் தொகுதிக்குட்பட்ட சட்டக் என்ற கிராமத்தில் வழக்கமாக வாக்குச்சாவடியாக பயன்படுத்தப்படும் ஒரு உயர்நிலைப் பள்ளி உள்ளது.
இந்த தொகுதிக்குட்பட்ட டுல்மி பகுதி வட்டார அலுவலர் இங்கு வாக்கு சதவீதத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று விரும்பினார். இதற்காக வகுப்பறைகளின் நுழைவு வாயில்களில் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளின் வடிவத்தில் மர வேலைப்பாட்டால் வர்ணம் பூசிய தற்காலிக நுழைவு வாயில்களை இவர் அமைத்துள்ளார்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கும் நிலையில் இந்த வாக்குச்சாவடி நுழைவு வாயில்களை குழந்தைகள் உள்பட ஏராளமானோர் ஆச்சரியத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். #Hazaribagh #lspolls
Next Story






