search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுஷ்மா சுவராஜ்"

    அமெரிக்காவில் நடைபெற உள்ள 73-வது ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நியூயார்க் நகர் வந்தடைந்தார். #SushmaSwaraj #73UNGeneralAssembly
    வாஷிங்டன் :

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். இரண்டு வாரம் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று நடப்பு ஆண்டில் உள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து பொதுவிவாதம் நடத்துவார்கள்.

    அதன்படி, இந்த ஆண்டிற்கான ஐ.நா பொதுச்சபையின் 73-வது கூட்டம், செப்டம்பர் 25 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செப்டம்பர் 25 ஆம் தேதி காலை, ஐக்கிய நாடுகள் அரங்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலகத் தலைவர்களிடையே உரையாற்ற உள்ளார்.

    இந்நிலையில், இந்தியா சார்பாக இந்த கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்ட மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நியூயார்க் நகரம் சென்றடைந்தார்.

    இந்த பொதுக்கூட்டத்தின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிகள் மட்டத்திலான அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
    ரஷியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ரஷியா துணை பிரதமர் யூரி போரிசோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #SushmaSwaraj
    மாஸ்கோ:

    இந்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். பயணத்தின் ஒருபகுதியாக ரஷியாவின் துணை பிரதமர் யூரி போரிசோவை அவர் மாஸ்கோவில் சந்தித்து பேசினார்.

    இதுதொடர்பாக வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் டுவிட்டரில் கூறுகையில், ரஷியா-இந்தியா நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவு ஆணையத்தின் மாநாடு மாஸ்கோவில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷியா துணை பிரதமர் யூரி போரிசோவ் மற்றும் சுஷ்மா சுவராஜ் இருவரும் பங்கேற்றனர்.

    அப்போது பேசிய சுஷ்மா, இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு வரை ரஷியா செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டாலராகவும், ரஷியாவில்  இந்தியா செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு 13 பில்லியன் அமெரிக்க டாலராகவும் உள்ளது. இரண்டு நாடுகளும் இணைந்து 2025-ம் ஆண்டிற்குள் 30 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுக்கு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், இப்போதே அந்த இலக்கை எட்டிவிட்டதை நினைத்து மகிழ்ச்சியடைவதாக
    அவர் தெரிவித்தார்.

    பின்னர் நடைபெற்ற துணை பிரதமர் யூரி போரிசோவுடனான சந்திப்பில், அனைத்து துறைகளிலும் இருநாடுகளுக்கு இடையேயான உறவை விரிவுபடுத்தி புதிய வாய்ப்புகளை கண்டறிவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர் என ராவீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். #SushmaSwaraj
    மத்திய ஆசிய நாடுகளில் 4 நாள் அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் டெல்லி திரும்பினார். #SushmaSwaraj
    புதுடெல்லி :

    மத்திய ஆசிய நாடுகளுக்கு 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்ட வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.  

    அப்போது, மத்திய ஆசிய நாடுகளுடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தியதாக வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ராவேஷ் குமார் தெரிவித்தார். 

    மேலும், கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து கலந்துரையாடிய சுஷ்மா, உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    இறுதியாக, மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த அவர் நேற்று டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். #SushmaSwaraj
    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பாய் ஜீன்பேகோவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். #SushmaSwaraj
    பிஸ்கெக் :

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். 

    பயணத்தின் முதல் நாடாக கடந்த 2-ம் தேதி கஜகஸ்தான் சென்றடைந்த சுஷ்மா அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கஜகஸ்தான் நாட்டில் வாழும் இந்தியர்கள், தலைநகர் அஸ்டானாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றினார் 

    கஜகஸ்தான் பயணத்தை நிறைவு செய்துவிட்டு கிர்கிஸ்தான் சென்றைடைந்த சுஷ்மாவை இஷ்க் கல் விமான நிலையத்தில் கிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி எர்லன் அப்ட்ய்ல்டேவ் வரவேற்றார். பின்னர் நடைபெற்ற சுஷ்மா - எர்லன் அப்ட்ய்ல்டேவ் சந்திப்பில் பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசித்தனர்.

    தொடர்ந்து, கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பாய் ஜீன்பேகோவை சந்தித்து பேசிய சுஷ்மா, மத்திய ஆசிய நாடுகளுடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கிர்கிஸ்தான் பயணத்தை முடித்துவிட்டு இன்று உஸ்பெகிஸ்தான் செல்லும் சுஷ்மா அங்கு இன்று மற்றும் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #SushmaSwaraj
    சுஷ்மா சுவராஜை சமூக வலைதளங்களில் சிலர் மோசமான வகையில் கிண்டல் செய்து வந்தது தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்த கருத்தும் வெளிவராத நிலையில், அந்த அமைதியை ராஜ்நாத் சிங் உடைத்துள்ளார். #SushmaSwaraj #RajnathSingh
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசத்தில் கணவர் முஸ்லிம் என்பதால் பெண்ணுக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து, அந்த மண்டல பாஸ்போர்ட் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என கூறி அந்த அதிகாரிக்கு ஆதரவாக சுஷ்மா மீது பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

    சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் சுஷ்மாவுக்கு எதிராக மோசமாக விமர்சிக்க, பொங்கி எழுந்த அவர் வெளிப்படையாகவே இது தொடர்பாக ட்வீட் செய்ய தொடங்கினார். பலர் எல்லை மீறி சுஷ்மாவின் கணவரையும் சேர்ந்து விமர்சித்தாலும், பாஜகவிடம் இருந்தோ, மத்திய அரசிடம் இருந்தோ எந்த கண்டிப்பும் வரவில்லை.



    இதற்கிடையே, தனக்கு எதிரான ட்வீட்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். அதில், 57 சதவிகிதம் பேர் இல்லை என பதிலளித்துள்ளனர். காங்கிரஸ், இடதுசாரிகள், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் சுஷ்மா மீதான இந்த சைபர் தாக்குதல்களை கண்டித்தனர்.

    இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு இன்று பதிலளித்த உள்துறை மந்திரி, சுஷ்மா மீதான விமர்சனங்கள் தவறானவை என கூறினார். 
    அரசுமுறை பயணமாக ஐரோப்பா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று லக்சம்பர்க் பிரதமர் சேவியர் பெட்டலை சந்தித்து பேசினார். #SushmaSwaraj
    லக்சம்பர்க் சிட்டி:

    ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 7 நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

    இந்த பயணத்தின் முதல்கட்டமாக  திங்கட் கிழமை இத்தாலி சென்றடைந்த சுஷ்மா அந்நாட்டின் பிரதமர் கியூசெப்பி கான்ட்டேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பிரான்ஸ் சென்ற சுஷ்மா அந்நாட்டு பிரதமர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இருநாட்டு முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்தார்.


    இந்நிலையில், சுஷ்மா சுவராஜ் இன்று லக்சம்பர்க் நாட்டிற்கு சென்றடைந்தார். அந்நாட்டு பிரதமர் சேவியர் பெட்டலை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவினை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    பயணத்தின் இறுதிக்கட்டமாக பெல்ஜியம் நாட்டுக்கு செல்லும் அவர் 23-ம் தேதிவரை அங்கு தங்குகிறார். ப்ருசெல்ஸ் நகரில் பெல்ஜியம் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியுமான டிடியெர் ரெய்ண்டெர்ஸ் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜேன் கிளாட் ஜங்கர் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் அண்டோனியோ டஜானி ஆகியோரை சந்தித்து ஐரோப்ப்பிய யூனியன் - இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

    ‘பருவநிலை, அமைதி, பாதுகாப்பு: செயல்பாட்டுக்கான நேரம்’ என்னும் தலைப்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் சுஷ்மா அங்கு நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் தலைமையேற்பதுடன் ஐரோப்பிய நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களையும் சந்தித்து விட்டு 24-ம் தேதி டெல்லி திரும்புகிறார். #SushmaSwaraj

    ×