என் மலர்

  நீங்கள் தேடியது "Easter blasts"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை முன்னர் எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாததற்கு அந்நாட்டு மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்டது. #SriLankablasts #SriLankaapologises #intelligencetipoff #Easterblasts
  கொழும்பு:

  இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

  இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று நாடு முழுவதும் தேசிய துக்கதினம் அனுசரிக்கப்படுகிறது. பலியானவர்கள் ஆன்மா சாந்தியடைவதற்காக நாட்டு மக்கள் அனைவரும் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

  இந்நிலையில், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை முன்னர் எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாததற்கு அந்நாட்டு மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.  ‘இதுதொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. சில தகவல்களும் அளிக்கப்பட்டிருந்தது. நாங்கள் மிக, மிக வருந்துகிறோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் அமைப்புகளுக்கும் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியுள்ளது.

  இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீண்டும் கட்டித் தரப்படும்’ என இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும் அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரியுமான ரஜித சேனரத்னே தெரிவித்துள்ளார்.

  முன்னதாக இந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடாக இலங்கை அரசு நேற்று அறிவித்திருந்தது. இறந்தவர்களின் இறுதிச்சடங்குக்கு என தனியாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். #SriLankablasts #SriLankaapologises #intelligencetipoff #Easterblasts
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நிகழந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த 290 பேரில் 8 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. #8Indianskilled #Easterblasts #SriLankarblasts
  கொழும்பு:

  இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.

  இந்தியாவை சேர்ந்த லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று தெரிவித்திருந்தார். 

  இலங்கை குண்டுவெடிப்புகளில் மேலும் 4 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் பெயர் வேமுராய் துளசிராம், எஸ்.ஆர். நாகராஜ், கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா என்றும் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் இன்று தெரிவித்தது.

  இந்நிலையில், இதுவரை 8 இந்தியர்கள் குண்டுவெடிப்பில் பலியானதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் இன்று மாலை தெரிவித்துள்ளது. 

  ஹெச்.சிவக்குமார் என்ற இந்தியரும் குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

  இதற்கிடையில், கேரள மாநிலத்தை சேர்ந்த ரசினா என்பவரும் இந்த குண்டுவெடிப்பிப் பலியானதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் நேற்று தெரிவித்திருந்தார். இந்த தகவல் இந்திய அரசின் சார்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. #8Indianskilled  #Easterblasts #SriLankarblasts
  ×