என் மலர்
நீங்கள் தேடியது "Sri Lankan government"
- இலங்கை அரசு இன்று நல்லெண்ண அடிப்படையில் விடுவித்தது.
- விசைப் படகுகளும் விரைவில் விடுவிக்கப்படும்.
ராமேசுவரம்:
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு விடுவித்துள்ளது.
3 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிபர் அநுரா குமார திசநாயகேவை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து இலங்கை அதிபரிடம் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப்பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதம் நடத்தியதாக தெரிவித்தார்.
மேலும், அவர் 'மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்' என்றார்.
இந்தநிலையில் இலங்கை பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துவிட்டு பிரதமர் மோடி கிளம்பினார். இதற்கி டையே பிரதமர் மோடியின் வேண்டுகோள் மற்றும் வலியுறுத்தலை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு இன்று நல்லெண்ண அடிப்படையில் விடுவித்தது. அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள். இதற்கான ஏற்பாடுகள் அனைத்து விரைவாக நடந்து வருகிறது.
அதேபோல் மீனவர்க ளுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான விசைப் படகுகளும் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் உள்ளனர். மேலும் இலங்கை சிறையில் வாடும் மற்ற தமிழக மீனவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை தமிழக மீனவர்கள் மனதில் துளிர்த்துள்ளது.
- நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு இருக்கிறது.
- ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயும் படகு சேவையை தொடங்க முடிவு செய்துள்ளோம்.
இலங்கை அதிபர் அனுராகுமார திசநாயகா தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை இலங்கை அதிபர் திசநாயகா சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது மீனவர் பிரச்சனையில் சுமூக தீர்வு காண வேண்டும் என்று இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் அதிபர் அநுர குமார திசநாயக்கவுடன் பிரதமர் மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
நான் ஜனாதிபதி திசநாயக்கவை இந்தியாவிற்கு வரவேற்கிறேன். அதிபராக நீங்கள் முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
இன்றைய யாத்திரை மூலம் நமது உறவுகளில் புதிய வேகமும் ஆற்றலும் உருவாகி இருக்கிறது. எங்கள் கூட்டாண்மைக்காக நாங்கள் ஒரு எதிர்கால நோக்கத்தை ஏற்றுக்கொண்டோம்.
எங்களின் பொருளாதார ஒத்துழைப்பில், முதலீடு சார்ந்த வளர்ச்சி மற்றும் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். உடல், டிஜிட்டல் மற்றும் ஆற்றல் இணைப்பு ஆகியவை எங்கள் கூட்டாண்மையின் முக்கிய தூண்களாக இருக்கும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
மின் இணைப்பு மற்றும் பல பெட்ரோலிய குழாய் இணைப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியாவில் பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டபோது, இலங்கையிலும் அது கொண்டாடப்பட்டது.
படகு சேவை மற்றும் சென்னை- யாழ்ப்பாணம் விமான இணைப்பு ஆகியவை சுற்றுலாவை மேம்படுத்தி நமது கலாச்சார உறவுகளை வலுப்படுத்தியுள்ளன.
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை படகு சேவைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டதை அடுத்து, இப்போது இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவை தொடங்கப்படும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இலங்கையின் பௌத்த சுற்று மற்றும் ராமாயணப் பாதை மூலம் சுற்றுலாவின் மகத்தான ஆற்றலை உணர்ந்துகொள்ளும் பணியும் மேற்கொள்ளப்படும்.
மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் பேசினோம். இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
இலங்கையில் கட்டுமானம் மற்றும் நல்லிணக்கம் குறித்தும் பேசினோம். அதிபர் திசநாயக்க தனது அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை பற்றி என்னிடம் கூறினார்.
இலங்கை அரசு தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி, இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் தனது உறுதிமொழியை நிறைவேற்றும் என நம்புகிறோம்.
இலங்கையை பல வழிகளில் அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளில் இந்தியா தொடர்ந்து நம்பகமான நட்புறவில் இருக்கும் என்று அதிப் திசநாயக்கவிடம் நான் உறுதியளித்துள்ளேன்.
நம் பாதுகாப்பு நலன்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் முழுமையாக ஒப்புக்கொள்கிறோம். பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க முடிவு செய்துள்ளோம். ஹைட்ரோகிராஃபி தொடர்பான ஒத்துழைப்பும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு பாதுகாப்பு மாநாடு பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஒரு முக்கியமான தளம் என்று நாங்கள் நம்புகிறோம்.
இதன் கீழ், கடல் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, இணைய பாதுகாப்பு, கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டம், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற தலைப்புகளில் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள்-மக்கள் உறவுகள் நமது நாகரிகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு இந்தியா இதுவரை 5 பில்லியன் டாலர்களை கடன் மற்றும் மானிய உதவியாக வழங்கியுள்ளது.
இலங்கையின் 25 மாவட்டங்களிலும் எமக்கு ஒத்துழைப்பு உள்ளது மற்றும் எமது திட்டங்களின் தெரிவு எப்போதும் சக நாடுகளின் அபிவிருத்தி முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டது.
எமது அபிவிருத்தி ஒத்துழைப்பை முன்னோக்கி எடுத்துச் சென்று, மாஹோ-அநுராதபுரம் புகையிரதப் பிரிவு மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் சமிக்ஞை முறைமையை புனரமைப்பதற்கு மானிய உதவி வழங்கப்படுமென தீர்மானித்துள்ளோம்.
கல்வி ஒத்துழைப்பின் கீழ், அடுத்த வருடம் முதல் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாண பல்கலைக்கழகங்களில் 200 மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் 1500 அரசு ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படும். வீடமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன், இலங்கையில் விவசாயம், பால்பண்ணை மற்றும் மீன்வளம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா ஒத்துழைக்கும்.
இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள திட்டத்தில் இந்தியாவும் பங்கேற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்ட சீனா இலங்கைக்கு 1.7 பில்லியன் டாலர் கடன் வழங்கியது.
- வருடந்தோறும் 100 மில்லியன் டாலர் திரும்பிய வழங்க முடியாததால் 99 வருடத்திற்கு குத்தகை விட்டுள்ளது
இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயக இன்று இந்தியா வந்திருந்தார். அவரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எங்களது நீர்நிலைககள் உள்பட எந்த பகுதியையும் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது என இலங்கை உறுதி அளித்துள்ளது.
இந்தியா- சீனா இடையில் ஏற்கனவே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் இந்தியா அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கையுடன் சீனா நெருக்கம் காட்ட தொடங்கியுள்ளது.
இந்தியாவை குறிவைத்து சீனா "Mission Indian Ocean" என்பதை குறிவைத்துள்ளது. இந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இந்திய பெருங்கடலில் இலங்கை பகுதியில் சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது காணப்பட்டது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இலங்கையுடன் நட்புணர்வை வளர்த்துக் கொள்ள சீனா அதிக அளவில் உடன் கொடுத்தது. குறிப்பிட்ட அளவிலான கடனை பெற்ற இலங்கையால் சீனாவுக்கு கடனை திருப்பி அடைக்க முயடிவில்லை. இதனால் சீனா இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டது. இதனால் சீனாவின் அதிநவீன கப்பல்கள் வரத் தொடங்கியது.
இலங்கை இந்தியாவுக்கு மிக அருகில் உள்ளதால், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
2022 ஆகஸ்ட் மாதம் இந்தியா இலங்கையிடம் இது தொடர்பாக தனது கவலையை தெரிவித்தது. இதனால் இலங்கை சீனாவிடம் இது போன்ற செயல்களை நிறுத்த வலியுறுத்தியது. என்றபோதிலும் பின்னர் சீன கப்பல்களை நிறுத்துவதற்கு அனுமதி அளித்தது. அதில் இருந்து சீனா இந்திய பெருங்கடலில் ஆய்வு மேற்கொள்வதும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் (Hambantota Port) கப்பல்களை நிறுத்தி வருகிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்ட இலங்கைக்கு சீனா 1.7 பில்லியன் டாலர் கடன் வழங்கியிருந்தது. அதற்கு வருடம் 100 மில்லியன் டாலர் திரும்ப வழங்க முடியாத நிலையில், 99 வருட ஒப்பந்தத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எடுத்துக் கொண்டது. 2010-ம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதற்கட்ட கட்டுமானப்பணிகள் முடிவடைந்தது.
இந்தியாவுடனான இன்றைய ஒப்பந்தத்தில் இலங்கை அதன் நீர்நிலைகள் உட்பட இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்கிறது எனத் தெரிவித்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

‘இதுதொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. சில தகவல்களும் அளிக்கப்பட்டிருந்தது. நாங்கள் மிக, மிக வருந்துகிறோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் அமைப்புகளுக்கும் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியுள்ளது.
இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீண்டும் கட்டித் தரப்படும்’ என இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும் அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரியுமான ரஜித சேனரத்னே தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடாக இலங்கை அரசு நேற்று அறிவித்திருந்தது. இறந்தவர்களின் இறுதிச்சடங்குக்கு என தனியாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். #SriLankablasts #SriLankaapologises #intelligencetipoff #Easterblasts






