என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ பன்னீர்செல்வம்"

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய-மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
    • ஓ.பன்னீர்செல்வம் விஷயம் தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என தெரிகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இல்லாததால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று வருகிற 15-ந்தேதி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக கூறி இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய-மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    அ.தி.மு.க.வில் தன்னை சேர்க்க மறுப்பதால் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாமா? என்று ஆலோசித்ததாக தெரிகிறது.

    இந்த சூழ்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய பிறகு இப்போது டெல்லி சென்றுள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வம் விஷயம் தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என தெரிகிறது.

    எந்த கூட்டணியில் சேருவது என்று முடிவெடுக்க முடியாமல் உள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் வருகிற 15-ந்தேதியன்று நடத்த இருந்த மாவட்டச்செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தை தற்போது ஒத்திவைத்துள்ளார்.

    இந்த கூட்டத்தை அவர் டிசம்பர் 24 அன்று எம்.ஜி.ஆர். நினைவு நாளில் கூட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மும்முரமாகவே ஈடுபட்டு வருகிறார்.
    • ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களின் எதிர்காலம் என்ன? என்கிற கேள்வியும் உருவாகி இருக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    அந்த வகையில் தேர்தலை எதிர்கொள்வதற்கு அ.தி.மு.க.வும் தயாராகி உள்ளது. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயலாற்றி வருகிறார்.

    இதற்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க. மேலும் சில கட்சிகளையும் கூட்டணியில் சேர்ப்பதற்கு திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது.

    ஆனால் அ.தி.மு.க. தரப்பிலோ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிவித்து வருகின்றனர்.

    இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மும்முரமாகவே ஈடுபட்டு வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் வெளியானது. டெல்லி சென்று திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இணைவது பற்றிய கேள்விக்கு விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புவதாக தெரிவித்திருந்தார். இது போன்ற பரபரப்பான சூழலில் தான் சென்னை வானகரத்தில் நேற்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. அது பற்றி யாரும் பேசவும் இல்லை.

    அதே நேரத்தில பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் சிலர் வருகிற சட்டமன்றத் தேர்தலில் துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். தமிழகத்தில் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்க்க வேண்டும் என்பது பற்றிய முடிவை எடுப்பதற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பது போன்ற நிலை உருவாகி இருக்கிறது.

    இவர்களில் டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனி கட்சி நடத்தி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் புதிதாக கட்சியை தொடங்காமலேயே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு என்பதையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்கிற தனி அமைப்பை அவர் நடத்தி வருகிறார். இது அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத அமைப்பாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த உரிமை மீட்பு குழுவை உரிமை மீட்பு கழகம் என ஓபிஎஸ் மாற்றியுள்ளார்.

    அ.தி.மு.க.வில் அவரை சேர்ப்பதற்கு முட்டுக்கட்டை போட்டு பொதுக்குழுவில் கதவடைக்கும் சூழலை ஏற்படுத்தி இருப்பது அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களின் எதிர்காலம் என்ன? என்கிற கேள்வியும் உருவாகி இருக்கிறது. ஒருவேளை அ.தி.மு.க.வில் இணையவே முடியாத சூழல் ஏற்பட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை புதுக்கட்சியாக மாற்றலாமா? என்பது பற்றியும் ஓ. பன்னீர் செல்வம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதுபோன்ற நிலை ஏற்பட்டால் புதுக்கட்சியை தொடங்கி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஓ. பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் திரை மறைவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிச்சயம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு நடைபெறும் எனவும் தெரிவித்தார். ஒருவேளை அது போன்ற சூழல் ஏற்படாவிட்டால் மட்டுமே அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றிய முடிவை பன்னீர்செல்வம் எடுப்பார் எனவும் அவர் கூறினார்.

    • மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. தனித்தனியாக போட்டியிட்டதால் வாக்குகள் சிதறி, தி.மு.க. பல இடங்களில் குறைவான வாக்குகள் பெற்றிருந்தாலும் வெற்றி பெற்றது.
    • அ.தி.மு.க. கூட்டணியை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்காக அமித்ஷா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    போடி:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் சூழலில், கட்சியில் நிலவும் உட்கட்சிப் பிரச்சினைகள் தீர்ந்து, பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவார்களா? என்ற பெரிய அரசியல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில் போடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

    தமிழ்நாடு நல்லா இருக்க வேண்டும் என விரும்பும் அனைவரும் பிரிந்து இருக்கும் அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளதால் அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முடிவுகள் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. தனித்தனியாக போட்டியிட்டதால் வாக்குகள் சிதறி, தி.மு.க. பல இடங்களில் குறைவான வாக்குகள் பெற்றிருந்தாலும் வெற்றி பெற்றது.

    இந்த நிலை மீண்டும் நடைபெறக்கூடாது என்பதே பா.ஜ.க. உயர்மட்டத் தலைவர்களின் கணிப்பு. எனவே அ.தி.மு.க. கூட்டணியை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்காக அமித்ஷா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க.வுக்கான வாக்குகள் சிதறாமல் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே அவரின் முதன்மை நோக்கமாக உள்ளது என்றார்.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். இணைப்பு மீண்டும் சாத்தியமா என எதிர்பார்த்து இருக்கும் சூழலில், ஓ.பி.எஸி.ன் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல்கள் குறித்து எடுத்துரைத்தேன்.
    • தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த பின்னர் செங்கோட்டையனுடன் பேசவில்லை.

    சென்னை:

    மறைந்த ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * தனிக்கட்சியை தொடங்க இருப்பதாக நான் எங்கேயும் எந்த சூழலிலும் சொல்லவில்லை.

    * டெல்லிக்கு சென்று மரியாதை நிமித்தமாகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன்.

    * பிரிந்து இருப்பவர்கள் ஒன்றுபட வேண்டும் என நோக்கத்தில் தான் அமித்ஷாவை சந்தித்தேன்.

    * பிரிந்து இருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என அமித்ஷாவிடம் கூறினேன்.

    * மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல்கள் குறித்து எடுத்துரைத்தேன்.

    * தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த பின்னர் செங்கோட்டையனுடன் பேசவில்லை என்றார். 

    • புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்.
    • டிடிவி தினகரன், சசிகலாவை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன்.

    SIR பணிகளுக்கு காலக்கெடுவை தேர்தல் ஆணையம் நீடிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அவர் கூறியதாவது:-

    SIR பணிகளுக்கு தேர்தல் ஆணையம் கால அவகாசம் கொடுக்காதது தவறான நடைமுறை.

    புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்.

    அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும். அதிமுக அணிகள் இணைப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

    டிடிவி தினகரன், சசிகலாவை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன்.

    அரசியலில் இருந்து தன்னை யாரும் தனிமைப்படுத்த முடியாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • யார் மீதும் கடுமையான விமர்சனங்களை நான் வைத்தது இல்லை.
    • எடப்பாடி பழனிசாமியின் மகன், மருகன் உள்ளிட்ட உறவினர்கள் தற்போது அ.தி.மு.க.வை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

    ஈரோடு:

    அ.தி.மு.க.வில் இருந்து தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * யார் மீதும் கடுமையான விமர்சனங்களை நான் வைத்தது இல்லை.

    * சாதாரண பெண்ணுக்காக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என கேட்டவர் எடப்பாடி பழனிசாமி.

    * ஜெயலலிதா வாழ்ந்த இடத்தில் நடந்த கொலைக்காக சி.பி.ஐ. விசாரணை கேட்காதது ஏன்?

    * பா.ஜ.க. என்னை அழைத்து கூட்டணிக்காக பேச வேண்டும் என கூறினர்.

    * என்னை அழைத்து அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என பா.ஜ.க. பேசியது.

    * எடப்பாடி பழனிசாமியின் மகன், மருகன் உள்ளிட்ட உறவினர்கள் தற்போது அ.தி.மு.க.வை நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்றார். 

    • அ.தி.மு.க. வலிமையாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி என்னிடம் பேசியிருப்பார்.
    • சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னால் இருந்தபோதும் என்னிடம் பேச அவர் தயாராக இல்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் செங்கோட்டையன் கூறியதாவது:-

    * அ.தி.மு.க.விற்காக தொடர்ந்து உழைத்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

    * 45 வயதிற்குட்பட்டவர்கள் மட்டும் தான் பூத் கமிட்டியில் இருக்க வேண்டும் என்றார் எடப்பாடி பழனிசாமி.

    * தன்னை சுற்றி இருப்பவர்களை பலவீனமடைய செய்யும் போது அவர்களும் பலவீனமடைகிறார்கள்.

    * நிர்வாகிகளை நீக்கி கொண்டிருந்தால் முழு நிலவு தேய்ந்து அமாவாசை ஆகிவிடும்.

    * அ.தி.மு.க. வலிமையாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி என்னிடம் பேசியிருப்பார்.

    * சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னால் இருந்தபோதும் என்னிடம் பேச அவர் தயாராக இல்லை.

    * அ.தி.மு.க.வின் பலம் தெரியாமல் கொடி பறக்கிறது என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    * நாமக்கல்லில் த.வெ.க. கொடி பறந்தபோது பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள் என்று இ.பி.எஸ். பேசினார்.

    * ஒருவர் முன்னேற வேண்டுமென்றால் தன் காலிலே சுயமாக நடக்க வேண்டும். பிறர் முதுகில் ஏறி சவாரி செய்யக்கூடாது என்றார். 

    • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என குரல் கொடுக்கப்பட்டதா?
    • கொடநாடு விவகாரத்தை வைத்து யார் தி.மு.க.வின் பி டீம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ஈரோடு:

    அ.தி.மு.க.வில் இருந்து தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 2009-ம் ஆண்டு ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஒதுக்கப்பட்டார்.

    * அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைப்பட்டால் தான் ஆட்சி அமைக்க முடியும் என அ.தி.மு.க. நன்மைக்காக பேசினேன்.

    * எங்களை போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகி இருக்க முடியாது.

    * ஜெயலலிதாவால் 3 முறை முதலமைச்சராக அமர்த்தப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.

    * எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புறமாக முதலமைச்சர் ஆனவர்.

    * கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து இதுவரை குரல் கொடுக்கப்படவில்லை.

    * கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என குரல் கொடுக்கப்பட்டதா?

    * கொடநாடு விவகாரத்தை வைத்து யார் தி.மு.க.வின் பி டீம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    * எல்லா பணத்தையும் தொகுதியில் கொட்டி விட்டீர்கள் என என்னிடம் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    * பாராளுமன்ற தேர்தலில் பணம் செல்வு செய்தால் போதும் என சீட் வழங்கியவர்.

    * எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கு வழிவகை செய்த சசிகலாவை கொச்சையாக பேசினார்.

    * ஆட்சியை நடத்த தடுமாறிய போது ஓ பன்னீர்செல்வத்தை அழைத்து வந்தார் எடப்பாடி பழனிசாமி.

    * நான்கரை ஆண்டுகள் ஆட்சியை நடத்த உதவிய பா.ஜ.க.விற்கு துரோகம் செய்தார் எடப்பாடி பழனிசாமி என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    • ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
    • நான் அதிமுக கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை என ஜெயலலிதாவிடம் கூறியிருக்கிறார்கள்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    2011-ம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 12 இடங்கள் தான் தருவோம் என கூறினார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    நான் அதிமுக கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை என ஜெயலலிதாவிடம் கூறியிருக்கிறார்கள்.

    கூட்டணிக்கு மதிமுக வர தயாராகவில்லை என ஜெயலலிதாவிடம் தவறாக கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்; ஜெயலலிதா 15 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தது பின்னர்தான் எனக்கு தெரியவந்தது.

    அப்போது ஓபிஎஸ் செய்த தவறுக்காகத்தான் அதன் பலனை தற்போது அனுபவித்து கொண்டு இருக்கிறார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக உரிமைகளை பாதுகாக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
    • இன்று மாலை தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைந்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மனோஜ் பாண்டியன் கூறியதாவது:-

    * தமிழக உரிமைகளை பாதுகாக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.

    * வேறொரு கட்சியின் சொல்பேச்சை கேட்டு அ.தி.மு.க. வழி நடத்தப்படுகிறது.

    * பா.ஜ.க.வின் கிளைக்கழகமாக அ.தி.மு.க மாறிவிட்டது.

    * இன்று மாலை தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்றார். 

    • 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    • 2010 முதல் 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

    அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைந்தார். இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

    அ.தி.மு.க.வில் பயணித்து வந்த மனோஜ் பாண்டியன் 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு, 2010 முதல் 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். இதன்பின், அ.தி.மு.க. இரு பிரிவாக பிளவுபட்டபோது, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மூவரும் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் சிறிதுநேரம் காத்திருந்து சசிகலாவை சந்தித்தனர்.

    பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தேவர் நினைவிடத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மூவரும் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து டி.டி.வி., ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஒன்றாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, அ.தி.மு.க. எங்களுக்கு எதிரி இல்லை. இ.பி.எஸ். மட்டும் தான் எங்களது எதிரி. இ.பி.எஸ்.-ஐ வீழ்த்தும் வரை ஓய மாட்டோம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

     

    இதையடுத்து டி.டி.வி.தினகரன் புறப்பட்டுச் சென்ற நிலையில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் சிறிதுநேரம் காத்திருந்து சசிகலாவை சந்தித்தனர்.

    அப்போது ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் சசிகலாவிடம் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். பின்னர் அவர்களுடன் சசிகலா சிறிது நேரம் பேசினார்.

    பின்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வி.கே.சசிகலா தரையில் அமர்ந்து வழிபாடு செய்தார்.

    ×