என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அரிமளம் அருகே கல்லூரில் கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் காளைகளை அடக்கியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    அரிமளம்:

    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அரியநாயகி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் மது எடுப்பு திருவிழா நடந்தது. இதையொட்டி கல்லூர் செம்முனீஸ்வரர் கோவில் திடலில் நேற்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. பின்னர் காளைகள் அனைத்தும் செம்முனீஸ்வரர் கோவில் திடலில் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள், இளைஞர்கள் போட்டி, போட்டு அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்கின. சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்காமல் துள்ளிக்குதித்து ஓடின.

    இதில் காளைகள் முட்டியதில் சிலர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வேட்டி, துண்டு, சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டை அரிமளம், கல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில் அரிமளம் போலீசார் செய்திருந்தனர்.  
    குடிநீர் கேட்டு கூழையன் காடு, புதுப்பட்டி, மழையூரில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே கூழையன் காடு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி பொதுமக்கள் இங்குள்ள ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் குடிநீர் செல்ல கூடிய ஒரு குழாயில் பழுது ஏற்பட்டது. இதனால் குடிநீர் வசதி இல்லாமல் இப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீரென காலிக் குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கறம்பக்குடி அருகே பல்லவராயன்பத்தை ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக 4 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட சிறுமின்விசை தொட்டிகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நீர்மட்டம் குறைவு, மின்மோட்டார்கள் பழுதால் அடுத்தடுத்த நீர்த்தேக்கதொட்டிகள் செயல் படாமல் போனது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று அப்பகுதி பொதுமக்கள் புதுப்பட்டியில் உள்ள கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் சதாசிவம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகை சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல மழையூரில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கறம்பக்குடி தாலுகா பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் வறண்டு விட்டதால் அன்றாட தேவைகளுக்கு குடிநீர் கிடைக்காமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் கறம்பக்குடி தாலுகா பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, குடிநீர் பிரச்சினையை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். #CauveryManagementBoard #EdappadiPalanisamy #VijayaBhaskar
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் அ.தி.மு.க. சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அறந்தாங்கி தெற்கு ஒன்றியச் செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், வீட்டு வசதி வாரிய தலைவருமான வைரமுத்து, எம்.எல்.ஏ. ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராஜ நாயகம், அரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மறைந்த முதல்வர் ஜெயலலிதா, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை போராடி கெஜட்டில் வெளிவரச்செய்தார். கெஜட்டில் வெளிவந்ததால் தான், இன்று உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கொஞ்சம் கால தாமதம் ஆனபோதிலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதால், மத்திய அரசு விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும். அதன்மூலம் காவிரி பிரச்சினைக்கு நிரந் தர தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.



    கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தினார். அவர் ஆட்சியின் போது, சசிகலா குடும்பத்தினரால் கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டது. அதுகுறித்து நாங்கள் எல்லாம் அறிந்தபோதும், ஜெயலலிதாவிடம் கூறுவதற்கு பயந்தோம். அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த குடும்பம் கொள்ளை அடித்து பணத்தை சேர்த்தது. தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. அதில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா குடும்பம் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. இதற்கு கார ணம் அ.தி.மு.க. தொண்டர் கள் தான்.

    ஆரம்பத்தில் வேகமாக இருந்த தினகரனின் வேகம் குறைந்து விட்டது. தற் போது அவருக்கு ஓய்வு கிடைத்து வருகிறது. முன்பு தினமும் பேட்டி கொடுத்து வந்த தினகரனை தற்போது டிவியில் தேட வேண்டியுள் ளது. ஒன்றாக இருந்த தின கரன், திவாகரன் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரே துறையாக மக்கள் நல் வாழ்வுத்துறை விளங்குகி றது. இதனால் இந்த துறை தேசிய அளவில் பல விருது களை பெற்று வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூறி அவரை பதவி விலகச் சொல்வது தவறானதாகும். ஜெயலலிதாவின் ஆசியுடன் நடக்கும் இந்த ஆட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குரங்கணி தீ விபத்து குறித்து ஒருநபர் கமிசன் விசாரணை நடத்தி உள்ளது. விரைவில் அந்த அறிக்கை வெளியிடப்படும். அதன் பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதால், மத்திய அரசுடன் இணக்கமாக செயல் படுகிறோம். தமிழகத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் தைல மரங்களுக்கு பதில் முந்திரி மரங்கள் நடவு செய்ய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட சிறு பான்மை நலப்பிரிவு செய லாளர் லியாகத்அலி, அறந் தாங்கி வடக்கு ஒன்றியச் செயலாளர் வேலாயுதம், ஆவுடையார்கோவில் ஒன்றியச் செயலாளர் கூத் தையா, புதுக்கோட்டை நகரச் செயலாளர் பாஸ் கர், நிர்வாகிகள் சோலை ராஜ், மண்டலமுத்து, முருகா னந்தம், வைத்திலிங்கம், ரெங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.#CauveryManagementBoard #EdappadiPalanisamy #VijayaBhaskar
    கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்திய சசிகலா குடும்பத்தினர் பற்றி ஜெயலலிதாவிடம் கூற பயந்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். #Sasikala #Jayalalithaa #TNMinister #DindigulSreenivasan
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் அ.தி.மு.க. சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தினார். அவர் ஆட்சியின் போது, சசிகலா குடும்பத்தினரால் கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டது. அதுகுறித்து நாங்கள் எல்லாம் அறிந்தபோதும், ஜெயலலிதாவிடம் கூறுவதற்கு பயந்தோம். அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த குடும்பம் கொள்ளை அடித்து பணத்தை சேர்த்தது. தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. அதில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா குடும்பம் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. இதற்கு காரணம் அ.தி.மு.க. தொண்டர்கள் தான்.


    ஆரம்பத்தில் வேகமாக இருந்த தினகரனின் வேகம் குறைந்து விட்டது. தற்போது அவருக்கு ஓய்வு கிடைத்து வருகிறது. முன்பு தினமும் பேட்டி கொடுத்து வந்த தினகரனை தற்போது டிவியில் தேட வேண்டியுள்ளது.

    ஒன்றாக இருந்த தினகரன், திவாகரன் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரே துறையாக மக்கள் நல்வாழ்வுத்துறை விளங்குகிறது. இதனால் இந்த துறை தேசிய அளவில் பல விருதுகளை பெற்று வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூறி அவரை பதவி விலகச் சொல்வது தவறானதாகும். ஜெயலலிதாவின் ஆசியுடன் நடக்கும் இந்த ஆட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், குரங்கணி தீ விபத்து குறித்து ஒருநபர் கமிஷன் விசாரணை நடத்தி உள்ளது. விரைவில் அந்த அறிக்கை வெளியிடப்படும். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதால், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுகிறோம். தமிழகத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் தைல மரங்களுக்கு பதில் முந்திரி மரங்கள் நடவு செய்ய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sasikala #Jayalalithaa #TNMinister #DindigulSreenivasan
    ஐகோர்ட்டு உத்தரவையடுத்து கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சாலையோரம் அமைக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. #Tasmac #HighCourt

    புதுக்கோட்டை,:

    தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து அதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியிடாமல் அந்த சாலைகளில் டாஸ்மாக் மது பானக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அப்படிப்பட்ட கடைகளை உடனடியாக மூட வேண்டும்.

    அது போல வகை மாற்றம் செய்யாமல் இனி புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்கப்படுகிறது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையோரம் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டையில் 6 கடைகள் மற்றும் அறந்தாங்கியில் 10, கீரனூரில் 3, கீரமங்கலத்தில் 2, ஆலங்குடியில் 1 என மொத்தம் 22 கடைகள் இன்று முதல் மூடப்பட்டன.

    கரூர் மாவட்டத்தில் மொத்தம் 88 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 22 கடைகள் நேற்றிரவு முதல் மூடப்பட்டன. குறிப்பாக கரூர் நகராட்சி மற்றும் குளித்தலை நகராட்சியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியை சேர்ந்த குடிமகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளதோடு, வெளியூர்களில் உள்ள கடைகளுக்கு சென்று மது வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கரூர் மாவட்ட டாஸ்மாக் அதிகாரி கூறும் போது, ஐகோர்ட்டு உத்தரவையடுத்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து அது குறித்து முறையான அறிவிப்பு வெளியிட்டு மூடப்பட்ட கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்கப்படும் என்றார்.

    அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து சரியான உத்தரவு வரவில்லை. உத்தரவு வந்ததும் டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாவட்டங்களின் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்திலும் சாலையோரம் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. #Tasmac #HighCourt

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வட்டார போக்குவரத்து துறையின் மூலம் பள்ளி வாகனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கடுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடவும், ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க செய்திடவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனத்தினையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

    அதனடிப்படையில் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட அனைத்து பள்ளி வாகனங்களை அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி காலை 9 மணிக்கு புதுக்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்திலும், அறந்தாங்கி பகுதி போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட வாகனங்களை அறந்தாங்கி பகுதி அலுவலக வளாகத்திலும், இலுப்பூர் பகுதி அலுவலக எல்லைக்கு உட்பட்ட வாகனங்களை இலுப்பூரில் உள்ள பகுதி அலுவலக வளாகத்திலும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    எனவே ஆய்விற்கு வரும் பள்ளி வாகனங்களோடு அந்த வாகனங்களின் பதிவு சான்று, காப்பு சான்று, அனுமதி சீட்டு, ஓட்டுனர் உரிமம், நடத்துனர் உரிமம் ஆகியவைகளை அரசு சிறப்பு விதிகளின் படி அமைக்கப்பட்ட குழுவின் ஆய்விற்கு மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு மே மாதம் 5-ந் தேதி கொண்டு வருமாறு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி உரிமையாளர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்களின் அனுமதி சீட்டினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    குட்கா ஊழல் விவகாரத்தில் அமைச்சர், டி.ஜி.பி. பதவி விலக கோரி புதுக்கோட்டையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 400 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுக்கோட்டை:

    குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தமி ழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை திலகர் திடல் முன்பு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக கோரி கோ‌ஷம் எழுப்பினர்.

    இதைத்தொடர்ந்து புதுக் கோட்டை திலகர் திடலில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது

    இருப்பினும் தடையை மீறி சென்றனர். புதுக்கோட்டை மேல ராஜவீதி அருகே செல்லும் போது தி.மு.க.வினர் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 400 பேர் வரை கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தினால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

    விராலிமலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    விராலிமலை:

    விராலிமலை அருகே உள்ள வாணதிராயன்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் மின்மோட்டாருடன் கூடிய சிறிய குடிநீர் தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் வாணதிராயன்பட்டி பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த வாணதிராயன்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் விராலிமலை செக்போஸ்ட்டில் திருச்சி செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஊராட்சி மன்ற அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
    கீரமங்கலத்தில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கீரமங்கலம்: 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கீரமங்கலம் பேரூராட்சிக்கு சொந்தமான குளத்தை நிர்வாகம் ஆக்கிரமிக்க வைத்துவிட்டது. மேலும் அம்புலி ஆறு, ராமனேரி குளத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும் முறையான டெண்டர் முறைகளை கடைப்பிடிக்கவில்லை என்பன உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பேரூராட்சி உயர் அதிகாரிகள் வரவேண்டும் எனக்கூறினார்கள். அதைத்தொடர்ந்து பேரூராட்சிகள் துணை இயக்குநர் சதீஷ் மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது சில இடங்களில் வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள். இதையடுத்து பஸ் நிலையம் அருகே பேரூராட்சி நிர்வாகத்தால் வைக்கப்பட்ட பதாகை அகற்றப்பட்டது. தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேரை கீரமங்கலம் போலீசார் கைது செய்து ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
    உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தலை தள்ளிப்போடுகிறார்கள் என்று புதுக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். #MKStalin
    புதுக்கோட்டை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் இன்று மாலை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.

    இதில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை வந்துள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை காமராஜர்புரம் பகுதியில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்கள் வாங்கினார்.

    பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு சிறப்பாக செயல்படாத காரணத்தினால் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீரை ரூ.5, ரூ.6-க்கு வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.

    குடிநீர் பிரச்சனையை தீர்க்க தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து கரூர் மாவட்டம் மாயனூரில் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீதமுள்ள அந்த நிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. இதனால் தான் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    இதனை சரிசெய்யும் நிலையில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எதையும் கண்டு கொள்ளாமல் கொள்ளையடிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.


    அ.தி.மு.க.வும், பா.ஜ.க. வும் இரட்டை குழல் துப்பாக்கி போன்று செயல்பட்டு வருகிறது என்று அ.தி. மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் செய்தி வெளியிட்டுள்ளது உண்மை தான். நீட் பிரச்சனை, காவிரி பிரச்சனை என எந்த பிரச்சனையாக இருந்தாலும், மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசும், தமிழகத்தில் ஆட்சி செய்யும் அ.தி.மு.க. அரசும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதால் அவர்கள் இரட்டை குழல் துப்பாக்கி போல்தான் செயல்பட்டு வருகின்றனர்.

    உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தலை நடத்த தயங்குகின்றனர், தள்ளிப்போடுகிறார்கள். இதனால் உள்ளாட்சிக்கு வர வேண்டிய நிதி மத்திய அரசுக்கு மீண்டும் திரும்பி போகும் நிலை உள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக தமிழக முதல்வர், துணை முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் அது குறித்து எழுதினார்களா? அல்லது பதவியை காப்பாற்றுவதற்காக அந்த பிரச்சனை குறித்து எழுதினார்களா? என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் கவர்னர் பெயர் சம்பந்தப்பட்டு உள்ளதால் அவரே தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் சமூக வலை தளத்தில் பரவிய ஆடியோ தொடர்பான சர்ச்சை குறித்து தமிழக ஆளுனர் அவசரமாக விசாரணை கமி‌ஷன் அமைத்தது ஏற்கக்கூடியது அல்ல.

    இந்த விவகாரத்தில் உதவி பேராசிரியர் ஒரு அம்புதான். ஆனால் அவர் யாருக்காக இவ்வாறு செயல்பட்டார் என்பதை விசாரணையின் மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுனர் பெயரும் சம்பந்தப்பட்டு உள்ளதால் அந்த பதவிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆளுனர் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குடியரசு தலைவர், தமிழக ஆளுனரை திரும்ப பெற வேண்டும்.


    இந்த விவகாரத்தை திசை திருப்பி தனக்கு விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டுமென்று கருத்துக்களை தெரிவித்த எச்.ராஜாவை உடனே கைது செய்ய வேண்டும். அந்த கட்சியின் தலைமையும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எச்.ராஜாவின் செயல்பாடுகளுக்கு கண்டனம் கூட தெரிவிக்காமல், புகார் கொடுத்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது பொறுப்பற்ற பதில். தமிழக அரசு லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வர வேண்டும். காவிரி பிரச்சனைக்காக ஒன்று சேர்ந்துள்ள கட்சிகளெல்லாம் தேர்தல் கூட்டணியாக மாற வேண்டுமென்பது என் விருப்பம். அதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கறம்பக்குடி அருகே உள்ள முதலிப்பட்டி காட்டாற்று பாலத்தின் கீழ் இன்று தீயில் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முதலிப்பட்டி காட்டாற்று பாலத்தின் கீழ் இன்று தீயில் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், ஆலங்குடி டி.எஸ்.பி. அப்துல் முத்தலிப், கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பாதி எரிந்தநிலையில் பிணமாக கிடந்தார். அவரது பெயர், ஊர் விவரம் எதுவும் தெரியவில்லை.

    போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. நாயானது சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

    இறந்து கிடந்த வாலிபர் மர்ம நபர்களால் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் பிணம் அருகே சாக்கு பை ஒன்று கிடந்தது. இதனால் மர்மநபர்கள் அந்த வாலிபரை வேறு எங்காவது வைத்து கொலை செய்து விட்டு, சாக்குமூட்டையில் அடைத்து முதலிப்பட்டி காட்டாற்று பாலத்தின் கீழ் போட்டுவிட்டு தீ வைத்து விட்டு சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×