search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக போராட்டம்"

    • சென்னை சென்டிரலில் திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • மத்திய அரசை கண்டித்தும், கெஜ்ரிவாலை விடுவிக்க கோரியும் திமுகவின் போராட்டம்.

    அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து சென்னையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை சென்டிரலில் திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    அப்போது, மத்திய அரசை கண்டித்தும், கெஜ்ரிவாலை விடுவிக்க கோரியும் திமுகவின் கோஷம் எழுப்பினர்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில்," நாட்டின் தலைநகரில் ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள கொடூரமான தாக்குதலை திமுக வன்மையாக கண்டிக்கிறது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது.
    • திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகம் கைது செய்ததை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து சென்னையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை சென்டிரலில் திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    அப்போது, மத்திய அரசை கண்டித்தும், கெஜ்ரிவாலை விடுவிக்க கோரியும் திமுகவின் கோஷம் எழுப்பினர்.

    • குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
    • பல்வேறு நகரங்களில் தி.மு.க.வினர் குஷ்பு கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் பா.ஜனதா சார்பில் நடந்த போதைப் பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான பா.ஜனதா நிர்வாகி நடிகை குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

    குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பல்வேறு நகரங்களில் தி.மு.க.வினர் குஷ்பு கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னையில் தி.மு.க. மகளிர் அணியினர் இன்று மாலை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஒட்டு மொத்த சென்னை மாவட்ட மகளிர் அணியினர் திரளாக பங்கேற்கும் இந்த போராட்டத்தில் குஷ்பு கொடும் பாவியையும் கொளுத்த இருக்கிறார்கள்.

    மகளிர் அணியினர் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்தில் மகளிர் தொண்டர் அணியினர், மகளிரணி அமைப்பாளர்கள் திரளாக பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    • நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராகும் கனவு பறிக்கப்படுகிறது.
    • ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நீட் தேர்வுக்கு எதிராகவே திமுக இருந்து வருகிறது.

    சென்னை:

    சென்னை அண்ணாநகர் தெற்கு பகுதி செயலாளரும், மாநகராட்சி ஆளும் கட்சித் தலைவருமான ராமலிங்கம் இல்லத் திருமணம் விஜய் ஸ்ரீ மஹாலில் இன்று காலை நடைபெற்றது.

    மணமக்கள் ஹேமலதா-ராஜராஜன் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இன்றைக்கு ஒரு பாசிச ஆட்சி, மத்தியிலே ஆண்டு கொண்டிருக்கிற மோடி ஆட்சியை எதிர்க்கிற துணிச்சல் இன்று தி.மு.க.வுக்கு இருக்கிறது என்றால் ராமலிங்கம் போன்ற தொண்டர்கள் இயக்கத்தில் உழைத்துக் கொண்டிருக்கும் காரணம் தான். இன்று தி.மு.க.வின் உண்ணாவிரத அறப்போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். பல பேர் அங்கு போக முடியவில்லையே என்று வருத்தத்தோடு இருப்பதை நான் உணராமல் இல்லை.

    ஆளும் கட்சியாக இருக்கும் போது இந்த அறப்போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் எதனால் ஏற்பட்டது என்பதை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்.

    இங்கு மணமக்கள் இருவரும் டாக்டர்கள். நீட் தேர்வு எழுதி பாஸ் செய்து வந்து உட்காரவில்லை. அப்போதெல்லாம் நீட் கிடையாது. அதனால் ஏழை-எளிய நடுத்தர குடும்பத்தில் பிறந்து இருக்க கூடியவர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெறக் கூடிய மதிப்பெண்களை பெற்று டாக்டருக்கு படிக்கும் வாய்ப்பு இருந்தது.

    இப்போது நீட் எழுதி தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவர்களாக வர முடியும் என்ற நிலை இன்று வந்துள்ளது. அதனால் தான் தொடர்ந்து ஏற்கனவே இந்த நீட்டை கொண்டு வந்திருந்தாலும், அதை அன்றைக்கு நாம் கடுமையாக எதிர்த்தோம். ஆனாலும் அதை நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது.

    அதற்கு பிறகு மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்த பிறகு அதை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள்.

    அப்போது கூட சட்டமன்றத்தில் நாம் தீர்மானம் போட்டு அனுப்பினோம். எதிர்க்கட்சியாக இருக்கும் போது கூட அதற்கு அழுத்தம் கொடுத்து அதை ஆதரித்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றி, மசோதாவை கவர்னருக்கு அனுப்பி அதன் பிறகு அது டெல்லிக்கு ஜனாதிபதிக்கு செல்கிறது.

    ஆனால் ஜனாதிபதிக்கு சென்ற அந்த மசோதா ஆளும் கட்சியாக அ.தி.மு.க. இருந்த போது அது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

    திருப்பி அனுப்பிய செய்தியை கூட ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க. அதை வெளியில் சொல்லவில்லை. சட்டமன்றம் நடந்து கொண்டிருந்த போது கூட சொல்லவில்லை. ஆனால் அதை நீதிமன்றம் மூலம் நாம் தெரிந்து கொண்டு உடனடியாக அந்த பிரச்சனையை எழுப்பினோம்.

    அது ஓராண்டு காலமாக சொல்லாமல் இருந்த காரணத்தால் அது செல்லுபடியாகாத நிலைக்கு போய் விட்டது. அதனால்தான் தேர்தல் நேரத்தில் நாங்கள் சொன்னோம்.

    தி.மு.க. ஆட்சிக்கு வருகிற போது நிச்சயமாக இதை நிறைவேற்றுகிற முயற்சியில் ஈடுபடுவோம் என்று கூறினோம். நீட் நுழைவுத் தேர்வை எதிர்ப்போம். அதை ரத்து செய்வதற்கான எல்லா முயற்சியிலும் ஈடுபடுவோம் என்று தெளிவாக எடுத்து சொன்னோம்.

    அதற்கு பிறகு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தோம். சட்டமன்றத்திலே மீண்டும் அந்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றினோம்.

    எல்லா கட்சியும் ஆதரித்தது. இன்று எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய அ.தி.மு.க.வும் ஆதரித்தது. இந்த மசோதாவை அனுப்பி வைத்தோம். கவர்னரிடம் இருந்தது.

    அதற்கு பிறகு அதை அவர் அனுப்பவில்லை. நாம் போராட்டம் நடத்திய பிறகு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதற்கு பிறகு இன்றுள்ள கவர்னரிடமும் அனுப்பி வைத்தோம். அதை அவர் டெல்லிக்கு அனுப்பாமல் இங்கேயே வைத்திருந்தார். பின்னர் பல்வேறு நிகழ்வுக்கு பிறகு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இன்னும் அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. ஆனாலும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்காக பல்வேறு கட்டப் போராட்டங்களும் நடந்து வருகிறது. எனவே, நீட் தேர்வில் விலக்கு பெறும் வரை தி.மு.க. ஓயாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருமண விழாவில் அமைச்சர் துரைமுருகன், மாவட்டக் கழக செயலாளர் நே.சிற்றரசு மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

    • ஆதிக்ககாரர்களால் அமல்படுத்தப்பட்டது நீட் தேர்வு.
    • கலைஞரின் வேகம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திட்டமிட்டு பணியாற்றுகிற அந்த அனுபவம் அமைச்சர் உதயாவிடம் இருக்கிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    3 தலைமுறையாக நான் கோபாலபுரத்துடன் ஐக்கியமாகி உள்ளேன். இரு பெரும் தலைவர்களுடன் வருங்கால தலைவராக இருக்கக் கூடிய உதயாவையும் பாராட்டி பேசுவது எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பல்ல. அந்த வகையில் நான் இங்கு வாழ்த்தி பேச கடமைப்பட்டுள்ளேன். நீட் தேர்வால் மருத்துவராக முடியாமல் மாணவர்கள் பலர் தங்களது இன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளனர். நீட் தேர்வை எதிர்த்து நீதிக்காக ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிலே ஒரு அறப்போராட்டம் தான் உண்ணாவிரதப் போராட்டம்.

    நீட் தேர்வு என்ற கொடிய சட்டத்தை மாணவர்கள் முதுகில் சுமத்தி அவர்களை நிமிரவிடாமல் செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் டாக்டர் ஆகும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

    இந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. நீண்ட நாட்களாக போராடி வருகிறது. மாணவர்களும் இதை எதிர்த்து தங்களது உயிரை மாய்த்து கொள்கின்றனர். இதற்கு முன்பு தி.மு.க.வில் பல பேர் இந்தி திணிப்பை எதிர்த்து உயிர் விட்டனர். பல மாணவர்களும் இந்தி திணிப்பை எதிர்த்து உயிர் இழந்துள்ளனர்.

    அந்த வழியில் இன்று நீட் தேர்வை எதிர்த்து மாணவர்களாகிய இளம் சிட்டுகள் தங்கள் உயிரை மாய்த்து வருகின்றனர். ஆனால் அதைப் பற்றி மத்தியில் ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. வரலாற்றை பார்த்தால் இந்தியை திணித்த ஆட்சி ஒழிந்தது. அதை போல் நீட்டை எதிர்த்து பலர் விடுகிற சாபம் ஆட்சியை ஒழித்துவிடும்.

    நீட் தேர்வை நாம் மட்டும்தான் எதிர்ப்பதாக பலர் பேசுகிறார்கள். ஆதிக்ககாரர்களால் அமல்படுத்தப்பட்டது நீட் தேர்வு. இதனால் பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் மருத்துவராகும் வாய்ப்பை நீட் தேர்வால் இழந்து உள்ளனர்.

    இன்று நீட் தேர்வை ரத்து செய்ய அரசியல்வாதிகள் மட்டுமல்ல கல்வியாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று இளைய சமுதாயத்தின் ஒட்டுமொத்த தலைவராக உள்ள அமைச்சர் உதயநிதி நீட்டை ஒழித்துகட்டும் வரை இளைய சமுதாயம் ஓயாது என சபதம் எடுத்துள்ளார்.

    அவர் தாத்தா கலைஞரை போல் வேகமாக செயல்படும் ஆற்றல் படைத்தவர். அதை நான் பலமுறை பார்த்துள்ளேன். இந்த அறப்போராட்டத்தை பொறுத்தவரை ஏதோ ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தோம் என்று இல்லாமல் பல தொடர் போராட்டங்களை அமைச்சர் உதயா அறிவிப்பார். நீட் தேர்வு ஒழிந்தது அதற்கு காரணம் உதயநிதிதான் என சரித்திரத்தில் ஒருநாள் இடம்பெறும்.

    கலைஞரின் வேகம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திட்டமிட்டு பணியாற்றுகிற அந்த அனுபவம் அமைச்சர் உதயாவிடம் இருக்கிறது. இந்த இயக்கத்தில் நான் 3 தலைமுறையை பார்த்தவன். நீட்டை பொறுத்தவரை அவரால்தான் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என நினைக்கிறேன். எனவே அவரது போராட்டம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நீட் தேர்வை திணிக்கும் செயலில் மோடி அரசு வேகமாக இயங்குகிறது.
    • இந்தியை எதிர்த்ததுபோல நீட் தேர்வை அகற்றுவதிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். சென்னை போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உள்ளார்.

    போராட்டத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய துரைமுருகன்,

    நீட் தேர்வுக்கு எதிராக எத்தனையோ இளம் சிட்டுகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோயுள்ளது.

    மாணவர்களின் மரணம் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. நீட் தேர்வை திணிக்கும் செயலில் மோடி அரசு வேகமாக இயங்குகிறது. நீட் தேர்வுக்கு எதிராக பலர் விடும் சாபம் மத்திய அரசை அகற்றும்.

    இந்தியை எதிர்த்ததுபோல நீட் தேர்வை அகற்றுவதிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

    நீட் தேர்வு ஒழிந்தது என சரித்திரத்தில் இடம்பெறும். இதனை உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போராட்டத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்றனர்.

    சென்னை :

    தமிழகம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற உள்ளது. மதுரையில் மட்டும் வருகிற 23-ந்தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணியினர் மற்றும் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    • உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
    • மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை :

    தமிழகம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற உள்ளது. மதுரையில் மட்டும் வருகிற 23-ந்தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவுள்ள போராட்டத்தை திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைக்க உள்ளார்.

    உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

    • மதுரையில் தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த போராட்டம் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மதுரை மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி தேதி மாற்றத்தை அறிவித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் நீட் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நாளை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், மதுரையில் தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த போராட்டம் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா நடராஜ் தியேட்டர் அருகில் நடைபெற இருந்த போராட்டம் வருகிற 23-ந்தேதி புதன்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து 20-ந்தேதி தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளது.
    • தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணியினர் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் நடைபெற உள்ளது.

    சென்னை:

    நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தி.மு.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அதற்கு மத்திய அரசு இதுவரை சம்மதிக்கவில்லை.

    இதற்கான கோப்பு ஜனாதிபதியிடம் உள்ளது. தமிழக அரசு பலமுறை வற்புறுத்தியும் மத்திய அரசு செவி சாய்க்காமல் உள்ளதாக தி.மு.க. குற்றம் சாட்டி வருகிறது.

    அதுமட்டுமின்றி சமீபத்தில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி நீட் மசோதாவில் கையெழுத்து போடமாட்டேன் என்று கூறினார்.

    நீட் தேர்வுக்கு தடை கோருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட மாட்டேன்.

    இந்த விவகாரம் பொதுப்பட்டியலில் இருப்பதால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை பயிற்சி மையங்களுக்கு சென்றுதான் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பாக பேசி இருந்தார்.

    இந்த நிலையில் மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து 20-ந்தேதி தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளது.

    தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணியினர் பங்கேற்கும் இந்த உண்ணாவிரத போராட்டம் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் நடைபெற உள்ளது.

    சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    இதேபோல் அந்தந்த மாவட்டங்களின் தலைநகரங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டும் என்று தி.மு.க. தலைமை முடிவெடுத்து உள்ளது.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்து உள்ளனர்.

    • நீட் தேர்வு, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைத்து, அவர்களை மட்டுமன்றி அவர்தம் பெற்றோரையும் மரணத்தை நோக்கி தள்ளுகிறது.
    • தி.மு.க. சார்பில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, நீட் விலக்கு மசோதாவில் எந்த காலத்திலும் நான் கையெழுத்து போடமாட்டேன். நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கிவிடும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று பேசியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    கவர்னரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், கவர்னரையும் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 20-ந்தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் வரும் 20-ந்தேதி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

    இதுதொடர்பாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    நீட் தேர்வு, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைத்து, அவர்களை மட்டுமன்றி அவர்தம் பெற்றோரையும் மரணத்தை நோக்கி தள்ளுகிறது.

    எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் எனக்கென்ன என்றிருக்கும் ஒன்றிய அரசையும் - ஆளுநரையும் கண்டித்து, முதலமைச்சர்

    மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 20 அன்று மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம்.

    தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் - நம் மாணவர்கள் - பெற்றோர்களின் உயிரை காக்கவும் இந்த உண்ணாவிரத அறப்போரில் திரளாக பங்கேற்போம். நீட்டை ஒழிப்போம் என கூறியுள்ளார்.

    • இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை.

    இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று திமுகவினர் கருப்பு உடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும்,திருத்தணி எம்,எல்,ஏ.வுமான எஸ்.சந்திரன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.வுமான கோவிந்தராஜன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாணவரணி இணைச் செயலாளர் ஜெரால்டு, திருத்தணி பூபதி,திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பொன்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


    மேலும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் டி.கே.பாபு, திருவள்ளூர் நகரச் செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூண்டி மோதிலால்,மாநில விவசாய பிரிவு செயலாளர் ஆர்.டி.இ. ஆதிசேஷன்,டாக்டர் குமரன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு உடை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் முழக்கமிட்டனர்.

    ×