search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடைகள் மூடல்"

    • ராயபுரம் தொகுதி ஜி.ஏ.ரோட்டில் உள்ள 2 பள்ளிகளுக்கு எதிரில் நடந்து வந்த எண்-138 டாஸ்மாக் கடையும் மூடப்பட்டுள்ளது.
    • முதலமைச்சருக்கும் அமைச்சர் முத்துசாமிக்கும் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

    தமிழக மக்கள் இயக்க தலைவரும் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில், ராயபுரம் தொகுதி ஜி.ஏ.ரோட்டில் உள்ள கே.சி.சங்கரலிங்கனார் மேல்நிலைப்பள்ளி மற்றும் பி.ஏ.கே. பழனிச்சாமி மேல்நிலை பள்ளிகளில் 6000 மாணவர்கள் படிக்கிறார்கள். அந்த பள்ளிகளுக்கு மிக அருகில் பல ஆண்டுகளாக நடந்து வந்த எண்-138 டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக மக்கள் இயக்கம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நான் நடத்தினேன். ஆனால் அப்போது அந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அந்த கடையை மூடவிடாமல் தடுத்து நிறுத்தி விட்டார். தற்போது முதலமைச்சர் ஆணைக்கிணங்க அமைச்சர் முத்துசாமி தமிழகத்தில் 500 கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்படி ராயபுரம் தொகுதி ஜி.ஏ.ரோட்டில் உள்ள 2 பள்ளிகளுக்கு எதிரில் நடந்து வந்த எண்-138 டாஸ்மாக் கடையும் மூடப்பட்டுள்ளது.

    இதற்கு காரணமான முதலமைச்சருக்கும் அமைச்சர் முத்துசாமிக்கும் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். மேலும் ராயபுரம் தொகுதியில் 3 மதுக்கடைகளை மூடுவதற்கு முயற்சி மேற்கொண்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலரும் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான இளைய அருணா ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி ஆகியோருக்கும் பல ஆண்டுகளாக நான் பல கட்ட போராட்டங்கள் நடத்திய போது எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • பணியாற்றும் ஊழியர்கள் நிர்வாகத்தின் அறிவுரைப்படி வேறு கடைகளில் பணியமர்த்தப்படுவர்.
    • நடைமுறை மூடப்படும் கடைகளின் கணக்கு வழக்குகள் சரி பார்த்து முடிந்த பின் செயல்படுத்தப்படும் என டாஸ்மாக் மேலாளர் தெரிவித்தார்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள பேருந்து நிலையங்கள், வழிபாட்டுதலங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கும் 500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் செயல்படாது என டாஸ்மாக நிர்வாகம் சார்பில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. திருப்பூர் மாநகரில் 18 டாஸ்மாக் கடைகள் உட்பட மாவட்டத்தில் 24 கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து திருப்பூர் பழைய பேருந்து நிலையம், கொங்கு மெயின் ரோடு, ஊத்துக்குளி சாலை உட்பட மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 24 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்பட்டன. நேற்று இரவுடன் இந்த கடைகளில் மது விற்பனை முடிவுக்கு வந்தது. கடையில் உள்ள மீதமுள்ள இருப்பு சரக்குகள் இன்று கணக்கு சரி பார்க்கப்பட்டு, மாவட்ட 'டாஸ்மாக்' கிடங்குக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

    பணியாற்றும் ஊழியர்கள் நிர்வாகத்தின் அறிவுரைப்படி வேறு கடைகளில் பணியமர்த்தப்படுவர். இந்த நடைமுறை மூடப்படும் கடைகளின் கணக்கு வழக்குகள் சரி பார்த்து முடிந்த பின் செயல்படுத்தப்படும் என டாஸ்மாக் மேலாளர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கூறினார்.
    • டாஸ்மாக் மதுபான கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார்

    இந்த நிலையில், 500 கடைகளை இறுதி செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கூறினார்.

    அவர் மேலும் கூறுகையில், "டாஸ்மாக் மதுபான கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக டாஸ்மாக் மதுபான கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுதந்திர தின நாளில் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவித்துள்ளார்.
    • மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    வருகின்ற 15 - ந்தேதி (திங்கள்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 15-ந்தேதி ஒரு நாள் மட்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் இயங்காது என அதில் கூறப்பட்டுள்ளது.

    ×