search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    500 டாஸ்மாக் கடைகள் மூடல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கே.ராஜன் பாராட்டு
    X

    500 டாஸ்மாக் கடைகள் மூடல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கே.ராஜன் பாராட்டு

    • ராயபுரம் தொகுதி ஜி.ஏ.ரோட்டில் உள்ள 2 பள்ளிகளுக்கு எதிரில் நடந்து வந்த எண்-138 டாஸ்மாக் கடையும் மூடப்பட்டுள்ளது.
    • முதலமைச்சருக்கும் அமைச்சர் முத்துசாமிக்கும் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

    தமிழக மக்கள் இயக்க தலைவரும் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில், ராயபுரம் தொகுதி ஜி.ஏ.ரோட்டில் உள்ள கே.சி.சங்கரலிங்கனார் மேல்நிலைப்பள்ளி மற்றும் பி.ஏ.கே. பழனிச்சாமி மேல்நிலை பள்ளிகளில் 6000 மாணவர்கள் படிக்கிறார்கள். அந்த பள்ளிகளுக்கு மிக அருகில் பல ஆண்டுகளாக நடந்து வந்த எண்-138 டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக மக்கள் இயக்கம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நான் நடத்தினேன். ஆனால் அப்போது அந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அந்த கடையை மூடவிடாமல் தடுத்து நிறுத்தி விட்டார். தற்போது முதலமைச்சர் ஆணைக்கிணங்க அமைச்சர் முத்துசாமி தமிழகத்தில் 500 கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்படி ராயபுரம் தொகுதி ஜி.ஏ.ரோட்டில் உள்ள 2 பள்ளிகளுக்கு எதிரில் நடந்து வந்த எண்-138 டாஸ்மாக் கடையும் மூடப்பட்டுள்ளது.

    இதற்கு காரணமான முதலமைச்சருக்கும் அமைச்சர் முத்துசாமிக்கும் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். மேலும் ராயபுரம் தொகுதியில் 3 மதுக்கடைகளை மூடுவதற்கு முயற்சி மேற்கொண்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலரும் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான இளைய அருணா ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி ஆகியோருக்கும் பல ஆண்டுகளாக நான் பல கட்ட போராட்டங்கள் நடத்திய போது எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×