என் மலர்
காஞ்சிபுரம்
உள்ளாட்சி, இடைத்தேர்தலுக்கு முன் தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்று பிரேமலதா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ளாட்சி, இடைத்தேர்தலுக்கு முன் விரைவில் பொதுத்தேர்தல் வர உள்ளது. தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி இல்லை. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்-அமைச்சராக இருந்தால் நல்ல ஆட்சியாக இருக்கும். எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சர் எப்படி நல்ல முதல்-அமைச்சராக, நிலையான ஒரு முடிவு எடுக்க முடியும். நிரந்தர கவர்னர், நிரந்தர உள்ளாட்சி அமைப்புகளும், நிலையான முதல்-அமைச்சரும் இல்லை. தமிழகத்தில் இந்த நிலை மாறவேண்டும்.

அ.தி.மு.க.வில் விசுவாசத்தின் பேரில் பிரச்சினை நடக்கவில்லை. அதிகாரத்தையும், பதவியையும் யார் பிடிக்க வேண்டும்? என்ற உள்கட்சி பிரச்சினைதான். யாருக்கு முதல்-அமைச்சர், பொதுச்செயலாளர் பதவி என்பதில்தான் 2 அணிகளும் இணைவது பற்றி பேசுகின்றனர். இவர்களுக்கு ஜெயலலிதா மீதோ, கட்சியின் மீதோ விசுவாசம் கிடையாது. இரு அணிகளுக்கு இடையே பதவி போட்டிதான் நடக்கிறது. விவசாயிகள் தங்கள் உணர்வுகளை காட்ட டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது தான் தே.மு.தி.க.வின் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.

நீலாங்கரை அருகே ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகளுடன் காரில் வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள தேனீர் விடுதிக்கு காரில் வந்த 2 பேர் டீ குடித்துவிட்டு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து சென்றதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அடையாறு துணை கமிஷனர் சுந்தரவடிவேல், நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் பாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜீவ்காந்தி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதியில் நிற்காமல் வேகமாக சென்ற காரை போலீசார் விரட்டிச்சென்று பாலவாக்கம் பகுதியில் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சென்னை அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜாயேல்உசேன் (வயது 45), ஆவடியை சேர்ந்த ஜானி (36) என தெரியவந்தது.
காரில் சோதனை செய்தபோது, ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் 18 தாள்களும், ரூ.60 ஆயிரம் பணமும் போலி போலீஸ் அடையாள அட்டைகளும் போலீஸ் சீருடை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் கார் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

மதுராந்தகம் அருகே டிரைவரை கட்டிப்போட்டு முகமூடி கும்பல் காரை துணிகரமாக கடத்தி சென்றனர்.
மதுராந்தகம்:
பண்ருட்டி அருகே உள்ள மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் விக்னேஷ், கார் டிரைவர். இவர் துபாயில் இருந்து வந்த உறவினரை அழைப்பதற்காக நேற்று இரவு சென்னை நோக்கி காரில் வந்தார்.
மதுராந்தம் அருகே தொழுபேடு டோல்கேட் பக்கம் வந்தபோது சிறுநீர் கழிப்பதற்காக காரை சாலையோரம் நிறுத்தி விட்டு இறங்கினார்.
அப்போது இருளில் பதுங்கி இருந்த 2 வாலிபர்கள் முகமூடி அணிந்தபடி வந்தனர். அவர்கள் விக்னேசை சரமாரியாக தாக்கினர். அவரது கை, கால்களை துணியால் கட்டி சாலையோரத்தில் தள்ளிவிட்டனர். பின்னர் காரை கடத்தி சென்றுவிட்டனர்.
விக்னேசின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டனர். கார் கடத்தல்காரர்கள் தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழுபேடு டோல்கேட் அருகே வாகனங்களில் செல்பவர்களை தாக்கி கொள்ளை மற்றும் வாகன கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அச்சரப்பாக்கம் அருகே போலி மதுபாட்டில்களை கடத்தியதாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கத்தை அடுத்த எலப்பாக்கம் கூட்டுசாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் அட்டை பெட்டிகளுடன் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 384 மது பாட்டில்கள் இருந்தன. அனைத்தும் போலி மது பாட்டில்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை கடத்தி வந்த சூனாம்பேடு அருகே உள்ள பேட்டை கிராமத்தை சேர்ந்த துரை, சங்கரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து போலி மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலி மதுபாட்டில்கள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது. மதுபான தொழிற்சாலை எங்கு உள்ளது என்று அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

வேலூரில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய 13 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர்களையும் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் சப்-கலெக்டர் அருண் தம்புராஜுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரும், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரும் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் முதல் சுங்குவார் சத்திரம் வரை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை சோதனை செய்தனர். அந்த லாரிகளின் மேல் பகுதியில் ஜல்லி கற்கள் காணப்பட்டன. அதனுள் தோண்டி பார்த்த போது மணல் இருந்தது.
இதே போல் 13 கனரக லாரிகளில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இந்த மணலை வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை பாலாற்றில் இருந்து திருட்டுத்தனமாக லாரியில் அள்ளிக் கொண்டு சென்னைக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மணல் கடத்திய 13 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மணல் கடத்தியதாக மணல் லாரி டிரைவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியபாளையம் அருகே ஆரணி ஆறு மற்றும் கொசஸ்தலை ஆற்றில் இரவு-பகலாக ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் மணல் கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் திருவள்ளூர் சப்-கலெக்டர் திவ்யஸ்ரீ தலைமையில் வருவாய்துறையினர் நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெரிய பாளையம் அருகே எர்ணாகுப்பம் கிராமத்தில் ஆரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு லாரிகளையும், கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று லாரிகள்,ஒரு ஜெ.சி.பி எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த சூழலில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஆலந்தூர்:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தூத்துக்குடி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த சூழலில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் நீட் தேர்வு நிரந்தரமாக வேண்டாம் என்று சொன்னால் கல்வி தரத்தை உயர்த்த மாட்டோம் என்று பொருள் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராடுவதற்கும், மற்றவர்கள் போராடுவதற்கும் வித்தியாசம் உண்டு.
மருத்துவர்கள் போராட்டத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் நீட் தேர்வு நிரந்தரமாக வேண்டாம் என்று சொன்னால் கல்வி தரத்தை உயர்த்த மாட்டோம் என்று பொருள்.
50 ஆண்டு கால திராவிட கட்சிகள் ஆட்சியில் கல்வி தரம் தாழ்ந்து விட்டது. மாநில அரசுதான் 85 சதவீத இடங்களை நிரப்பப்போகிறது. 15 சதவீத இடத்தைத்தான் விட்டுக் கொடுக்க போகிறார்கள்.
அதே நேரத்தில் மற்ற ஒவ்வொரு மாநிலத்திலும் 15 சதவீதம் வாய்ப்புள்ளது. மாநில சுயாட்சி என்பது ஆட்சிக்கு வருவதற்கும், தமிழர்களை முட்டாள் ஆக்குவதற்கும் பயன்படுத்தக் கூடிய வார்த்தை.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தி.மு.க. பயன்படுத்திய ஆயுதங்களை தற்போது பயன்படுத்தி வருகிறது. அது துருபிடித்துபோய் விட்டது. தி.மு.க.வின் சாயம் வெளுத்து விட்டது.
தமிழ்நாட்டு மக்களுக்கு 50 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள். அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இரு மடங்காகி இருக்கிறது. என்ன காரணம்? நீட் நிரந்தரமாக வேண்டாம் என்பது தமிழர்களை திட்டமிட்டு அழிக்க கூடியது.
கழகங்கள் செய்த தவறுகளை மக்கள் புரிந்து கொண்டார்கள். அதில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று மக்கள் ஏங்குகிறார்கள். புதிய தேடலை தேட தொடங்கி இருக்கிறார்கள்.

10 மாதங்களாக ஆளுங்கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறது. அப்படி இருந்தும் யாராவது தி.மு.க. பக்கம் போக விரும்புகிறார்களா? இரண்டு கழகங்களிலும் சேர இளைஞர்களோ மாணவர்களோ தயார் இல்லை. தி.மு.க. மூழ்கி கொண்டிருக்கும் கப்பல் என்பது எல்லோருக்கும் தெரியும்.
கழகங்களின் காலம் முடிந்து விட்டது. கலைஞரின் ஆளுமை அபரிமிதமாக இருந்ததை மறுக்க முடியாது. இப்போது நிலைமை மாறி விட்டது. பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். எதுவும் பலிக்கவில்லை. அதனால்தான் எதற்கெடுத்தாலும் பா.ஜனதாவை பழிபோட்டு தன் காலை பலப்படுத்த பார்க்கிறார்கள். எந்த வித்தையும் இனி தமிழக மக்களிடம் எடுபடாது.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது குற்றம் சொல்வது நியாயமில்லை. தமிழகத்தையும், தமிழர்களையும் வளர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் வருமான வரித்துறையினர் தன்னிச்சையாக அவர்களது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் பா.ஜனதா வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில் ஆட்சி அமைக்கும். இதன் காரணமாகவே பா.ஜனதா மீது திராவிட கட்சிகள் குறை கூறி வருகின்றன.

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ராமானுஜர் அவதார தினவிழா இன்று நடைபெற்றது. இத்தினத்தை முன்னிட்டு கோவிலில் இன்று லட்டக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
திருப்பாற்கடலில் ஸ்ரீமந்நாராயணனின் படுக்கையாக உள்ள ஆதிசேஷன் ராமாஅவதாரத்தில் ராமருக்கு தம்பி லட்சுமணனாகவும் கிருஷ்ணா அவதாரத்தில் கிருஷ்ணருக்கு அண்ணன் பலராமரானகவும் தோன்றினார் என்பது புராணம்.
அதே ஆதிசேஷனே கலியுகத்தில் ராமானுஜராக ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார் என்பது ஐதீகம். இவர் கி.பி. 1017-ம் ஆண்டு அப்போது பூதபுரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஸ்ரீபெரும்புதூரில் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் தோன்றினார்.
ஸ்ரீபெரும்புதூர் ஆசூரி கேசவசோமாஜி பட்டர் மற்றும் காந்திமதி தம்பதிக்கு ஒரே மகனாக பிறந்தார். இவரது தாய் மாமாவான திருமலை நம்பிகள் அக்குழந்தைக்கு இளையாழ்வார் என பெயர் சூட்டினார். இவருக்கு பூமிநாச்சியார், கமலாம்பாள் ஆகிய இரு சகோதரிகள் உண்டு.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேச பெருமாள், பாஷியகார சுவாமி கோவிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக (உற்சவர்) அருள்பாலித்து வருகிறார். இவரை வணங்கினால் சகல பாவங்களும், தோஷங்களும் நீங்கும், குழந்தை பாகியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு திருவா திரைக்கு 9 நாட்களுக்கு முன்பு சித்திரை பெருவிழா, அவதார உற்சவமாக நடைபெறும்.இந்த ஆண்டு ராமானுஜரின் 1000-வது ஆண்டு ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஸ்ரீபெரும் புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 21-ந் தேதி ராமானுஜர் அவதார தின விழா தொடங்கியது. வருகிற 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.விழாவையொட்டி நேற்று காலை திருத்தேர் பவனி விழா நடைபெற்றது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதில் ராமானுஜர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முக்கிய விழாவான ராமானுஜர் அவதார தினவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணி அளவில் மஞ்சத்தில் இருந்து ராமானுஜர் புறப்பட்டு, தங்க மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.பின்னர் தாயார் சன்னதிக்கு சுவாமி வந்து அடைந்தார்.
இதைத் தொடர்ந்து ராமர் சன்னதி கண்டருதல், ஒய்யார நடை உற்சவம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மண்டபம் வந்தடைந்தது. இதையடுத்து சுவாமி திருஅவதார மண்டபத்தில் தொட்டில் சேவை நடைபெற்றது. தங்க பல்லக்கில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதைத்தொடர்ந்து சங்கு பால் அமுது சேவித்தல், திருமஞ்சனம் ஈரவாடை தீர்த்தம், திருபாவை சேவித்தல் நடைபெற்றது.
பிற்பகல் 1 மணி அளவில் ராமானுஜருக்கு திருமேணி சேவையுடன் கண்ணாடி அறையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று இரவு கண்ணாடி அறையில் இருந்து சுவாமி புறப்பட்டு நாலுக்கால் மண்டபத்தில் சுவாமி நித்திய விபூதி மங்களா சேவை நடைபெறுகிறது.
நாளை (2-ந் தேதி) காலை கூத்துமுறை தீர்த்தம், கந்தபொடி சேவையுடன் ராமானுஜர் புறப்பட்டு ஆண்டாள் சன்னதி வந்து அடைகிறது. அங்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடைபெறும். பின்னர் அங்கிருந்து சுவாமி புறப்பட்டு `திருப்பரி வட்ட கொட்டி கடா வத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அங்கு ராமானுஜர் மஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.அவதார தினத்தை முன்னிட்டு கோவிலில் இன்று லட்டக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. காஞ்சீபுரம் வேலூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் இந்திரா காந்தி சிலை அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தில் நின்று சென்றன.
சென்னையில் இருந்து காஞ்சீபுரம், வேலூர் செல்லும் பஸ்கள் ஸ்ரீபெரும்புதூர் நுழைவு வாயிலில் அருகே நின்று பைபாஸ் வழியாக செல்லும். பக்தர்களின் கார்கள் அனைத்தும் ஸ்ரீபெரும்புதூர் வன போஜன மடம் அருகே நிறுத்தப்பட்டது. விஐ.பி. கார்கள் அனைத்தும் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் மற்றும் ஜெயின் கோவில் அருகே நிறுத்தப்பட்டன. பெண் பக்தர்கள் அனைவருக்கும் பெண்காவலர்கள் மூலம் செயின் பறிப்பு சம்பவத்தை தடுக்க சேப்டி பின் அணிவிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் மாவட்டம் முழுவதும் இருந்து 1000 க்கும் மேற்பட்ட போலீசார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டி.டி.வி.தினகரன் கைதுக்கு பின்னால் பா.ஜனதா இருக்கிறது என்று சொல்வதில் உண்மை இல்லை. ஊழல் குற்றச்சாட்டு இருந்ததால் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஆலந்தூர்:
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. இரு அணிகளையும் கட்டுப்படுத்தி பா.ஜனதா கட்சி காலூன்ற நினைக்கிறது என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறி இருப்பது சரியானது அல்ல.

மோடியின் நலத்திட்டங்களால் பா.ஜனதாவை மக்கள் விரும்புகிறார்கள். அ.தி.மு.க.வின் இரு அணிகளால் தான் பா.ஜனதா காலூன்றுகிறது என்பது தவறு. பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்தில் இந்தி திணிப்பு இல்லை.
டி.டி.வி.தினகரன் கைதுக்கு பின்னால் பா.ஜனதா இருக்கிறது என்று சொல்வதில் உண்மை இல்லை. ஊழல் குற்றச்சாட்டு இருந்ததால் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். இதில் பா.ஜனதாவின் தலையீடு எங்கு இருக்கிறது. எல்லாவற்றிலும் பா.ஜனதாவையும், மோடியையும் குறை சொல்வது வழக்கமாகவே இருக்கிறது.
கொடநாட்டில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. சட்டம்-ஒழுங்கு என்பது மாநில அரசின் பொறுப்பு. இந்த வழக்கில் மாநில அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிட்லபாக்கத்தில் கால் டாக்சி டிரைவரை வெட்டி மொபைலை பறித்து சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சிட்லபாக்கம் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சிவா (25). கால் டாக்சி டிரைவர். நேற்று இரவு சிவாவின் போனில் கார் கேட்டு ராதா நகரில் இருந்து அழைப்பு வந்தது.
உடனே காரில் ராதா நகர் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் காரை வழிமறித்தனர். ஆனால் சிவா காரை நிறுத்தாமல் சென்று விட்டார்.
ராதா நகரில் கார் கேட்டிருந்த வீட்டின் முன்பு பயணியின் வருகைக்காக காத்து நின்றார். அங்கிருந்து ஒரு பெண் பயணி காருக்கு வந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்களும் அந்த பெண்ணிடம் இருந்த மொபைல் போனை பிடிங்கினார்கள்.
டிரைவர் சிவாவிடமும் மொபைல் போனை கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததும் கத்தியால் தலை மற்றும் கையில் வெட்டினார்கள். பின்னர் அவரது மொபைல் போனை பறித்து கொண்டு சென்று விட்டனர்.
காயம் அடைந்த சிவா குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை வெட்டியது யார்? காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வருகிற மே 1-ந்தேதி முதல் சென்னை உள் நாட்டு விமான நிலையம் ‘சைலண்ட்’ விமான நிலையமாக மாற்றப்படுகிறது.
ஆலந்தூர்:
டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய விமான நிலைங்களில் பயணிகளுக்கு ஒலி பெருக்கிகள் மூலம் தகவல் தெரிவிப்பதில்லை. மாறாக எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுந்தகவல்கள் மூலம் தகவல் கொடுக்கப்படுகிறது.
அதை தொடர்ந்து சென்னை உள் நாட்டு விமான நிலையத்திலும் விமானம் ரத்து, தாமதம் மற்றும் நுழைவு வாயில் மாற்றம் குறித்த தகவல்களை பயணிகளுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட மாட்டாது. எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுந்தகவல் மூலமே தரப்படும்.

வருகிற மே 1-ந்தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. அதே நேரத்தில் முக்கியமான தருணங்களுக்கு மட்டும் ஒலிபெருக்கி மூலம் தகவல்கள் தரப்படும். எனவே சென்னை உள்நாட்டு விமான நிலையத்தை சைலண்ட் விமான நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தகவலை சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் அனாதையாக கிடந்த 3 மர்மபைகளால் பீதி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
ஆலந்தூர்:
சென்னை உள்நாட்டு விமானநிலையம் புறப்பாடு பகுதி 4-வது நுழைவுவாயிலில் இன்று அதிகாலை 5 மணியளவில் கறுப்பு மற்றும் பிரவுன் கலர் பைகள் அனாதையாக கிடந்தன.
இதே போல கார் பார்க் கிங் பகுதியிலும் ஒரு பை கேட்பாரற்று கிடந்தது.
இந்த 3 மர்மபைகளால் விமான நிலையத்தில் பீதி ஏற்பட்டது. வெடிகுண்டு இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் அந்த பைகள் இருந்த பகுதியில் இரும்பு கம்பிகளை வைத்தனர். அங்கு நின்று கொண்டு இருந்த பயணிகளை மாற்று நுழைவு வாயிலில் செல்லுமாறு உத்தரவிடப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் மோப்பநாயுடன் அங்கு வாகன சோதனை செய்தனர்.
அந்த பைகளில் வெறும் துணிமணிகள் மற்றும் ஊறுகாய் பாட்டில்கள் இருந்தன. யாரோ தெரியாமல் அந்த பைகளை விட்டு சென்று இருக்கலாம். அல்லது அதிகமான சுமை காரணமாக விட்டு சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
போலீசார் அந்த பைகளை அங்கிருந்து எடுத்து சென்றனர். இந்த பைகளால் விமான நிலையத்தில் 1மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பீதி காரணமாக 4-வது நுழைவு வாயிலில் பயணிகள் செல்ல முடியாததால் மற்ற வழிகளில் பயணிகள் நீண்ட வரிசையில் நின்றே சென்றனர்.