search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.டி.வி.தினகரன்"

    • யாரோ சிலர் விலை போயிருக்கலாம். நம் லட்சியத்தை நிறைவேற்றும் வரை ஓயமாட்டோம் .
    • டிசம்பர் 31-ந் தேதிக்குள் பூத் கமிட்டி அமைக்கப்படும் என நிர்வாகிகள் சொல்லி இருக்கின்றனர்.

    கோவை,

    கோவை ஒருங்கிணைந்த மாவட்ட அ.மு.மு.க செயல் வீரர்கள் கூட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    இதில் அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    2017-ம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த இயக்கத்தை வழி நடத்துகின்றனர். யாரோ சிலர் விலை போயிருக்கலாம். நம் லட்சியத்தை நிறைவேற்றும் வரை ஓயமாட்டோம் . பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அ.ம.மு.க இருக்காது என சிலர் சொல்கின்றனர்.

    இது டெண்டர் பார்டிகளால் உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. தொண்டர்களால் உருவாக்க இயக்கம்.பழனிச்சாமி ஆட்சியை இது அடிமைகளின் ஆட்சி என தூக்கி எறிந்து விட்டு வந்தவர்கள் நீங்கள். இந்த இயக்கம் உயிரோட்டமாக இருக்க காரணம் ஓரே லட்சியம். ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம்.

    டிசம்பர் 31-ந் தேதிக்குள் பூத் கமிட்டி அமைக்கப்படும் என நிர்வாகிகள் சொல்லி இருக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரகணக்கானோர் பங்கேற்றனர்.

    • தி.மு.க. வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டது.
    • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 70 லட்சம் பேர் பதிவு செய்து விட்டு காத்திருக்கின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாணவ, மாணவியர் அணி சார்பில் கட்சியில் இணை யும் விழா பொதுச் செயலா ளர் டி.டி.வி.தினகரன் முன் னிலையில் இணைத்து உறுப் பினர் அட்டை பெற்றுக் கொண்டனர்.

    முன்னதாக டி.டி.வி. தினகரனை திருமங்கலம் பெரியார் சிலை முன்பு மாணவியர் அணி செயலா ளர் ஜீவிதா நாச்சியார், தொண்டர்களுடன் சென்று வரவேற்றார். இதனைத் தொடர்ந்து திருமங்கலம் சந்தைப்பேட்டையில் திரு மங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண் ணன், வடக்கு ஒன்றிய செய லாளர் வினோத், திருமங்க லம் நகரச் செயலாளர் வைரவன் ஆகியோர் வர வேற்றனர்.

    நிகழ்ச்சியில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேந்தி ரன் தலைமை தாங்கி பேசி னார். அம்மா பேரவை செய லாளர் டேவிட் அண்ணா துரை, மகளிர் அணி செய லாளர் வளர்மதி ஜெபராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றி னர்.

    பின்னர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

    பழனிச்சாமி செய்த தவறுகளால் மக்கள் தி.மு.க. ஆட்சியை ஏற்படுத்தியுள்ள னர். பொய்யான வாக்குறுதி களை கொடுத்து மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது. தேர்தல் வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, மாணவர் களுக்கு கல்விக்கடன் ரத்து, லட்சக்கணக்கில் வேலை வாய்ப்பை பெற்றுத் தரு வார்கள் என்று சொன் னார்களே என்னவாயிற்று?

    இளம் சமுதாயத்திற்கு நல்வழிகாட்டுதலை செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. அரசுத் துறையில் வேலை வாய்ப்பு என்ன ஆயிற்று, பெரும் கனவான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை முறையாக நடத்த முடிய வில்லை. பொறியியல், கலைக்கல்லூரிகளில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக் கில் உள்ளது. அவர்களுக்கு முறையான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 70 லட்சம் பேர் பதிவு செய்து விட்டு காத்திருக்கின்றனர்.

    தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து விடுபட வேண் டுமென்றால் மீண்டும் தமி ழகத்தில் அம்மாவின் ஆட் சியை உருவாக்கி தரவேண் டும். அதற்கு மாணவர்களின் பங்களிப்பு இருக்கவேண் டும். எப்போதெல்லாம் ஆட்சி மாற்றம் நிகழ்கிறதோ அப்போதெல்லாம் மாண வர்களின் எழுச்சி இருக்கும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சி உருவாக பாடு பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • பிரியா என்ற மாணவி இறந்தது அனைவருக்கும் தெரியும்.
    • அரசு ஆஸ்பத்திரிகளில் கவனக்குறைவான சிகிச்சையால் உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கிறது.

    சென்னை :

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள் டிசம்பர் 5-ந் தேதி வருகிறது. அன்றைய தினம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அதன் பின்னர் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இதற்கு உரிய அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் வழங்கும்படி மனு கொடுத்துள்ளோம். உரிய பாதுகாப்பும், அனுமதியும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அண்மை காலமாக அரசு ஆஸ்பத்திரிகளில் கவனக்குறைவான சிகிச்சையால் உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கிறது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அதிக மயக்க மருந்து கொடுத்ததன் காரணமாக குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இதுபோல குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் குழந்தை ஒன்று இறந்துள்ளது. பிரியா என்ற மாணவி இறந்தது அனைவருக்கும் தெரியும்.

    ஆட்சியாளர்கள் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சி என்ற முறையில் இதை எடுத்து சொல்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் போன்றோர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக, பேச்சு அடிபடுகிறதே, என்ற நிருபர்களின் கேள்விக்கு, 'இதற்கு பதில் அளித்து, அளித்து புளித்து போய் விட்டது. அது முடிந்து போன கதை. அது தொடரும் கதை அல்ல. அதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமியே, கூறி விட்டார்' என்று ஜெயக்குமார் உறுதியாக பதில் அளித்தார்.

    • மணமக்களை டி.டி.வி. தினகரன் வாழ்த்தி பேசினார்
    • பெருமாள் கோவில் அருகே டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு

    திருப்பூர், 

    அ.ம.மு.க.பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி தலைவருமான மலையாண்டவர் ஏ.ஆர்.நடராஜ்-நிர்மலா தம்பதியின் மகன் லோகேஷ் மற்றும் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்கிற மாரிமுத்து-ஈஸ்வரி தம்பதியின் மகள் வித்யா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நேற்று இரவு திருப்பூர் ராமசாமி கவுண்டர்முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு வந்திருந்தவர்களை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் உடுமலை சி.சண்முகவேலு, அமைப்பு செயலாளர் சேலஞ்சர் துரை ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மணமக்களை வாழ்த்தி அவர் பேசினார். விழாவில் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள், மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் டாக்டர் கே.கிங், மாநகர் மாவட்ட துணை செயலாளர் சூர்யா செந்தில் மற்றும் அ.ம.மு.க. திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் அ.ம.மு.க. பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலையாண்டவர் நடராஜ் நன்றி கூறினார்.

    முன்னதாக திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் பெருமாள் கோவில் முன்பும், வடக்கு மாவட்டத்தின் சார்பில் சந்தைப்பேட்டையிலும் அ.ம.மு.க. பொதுச்செயலளார் டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திருப்பூர் பெருமாள் கோவில் அருகே திருப்பூர் மாநகர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் விசாலாட்சி தலைமையில் மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் புல்லட் ரவி, சூர்யா செந்தில் , மாநகர் மாவட்ட பொருளாளர் சேகர் என்ற ஜெகநாதன், மாநகர் மாவட்ட அம்மாபேரவை செயலாளர் ரத்தினசாமி, மாநகர் மாவட்ட அம்மா இளைஞரணி செயலாளர் பெஸ்ட் தம்பு என்ற சண்முகசுந்தரம், மாநகர அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் முத்துக்குட்டி, பொதுக்குழு உறுப்பினர் குட்வின் பழனிசாமி, அம்மா பனியன் தொழிற்சங்கம் சுரேஷ்ராஜா, மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் பச்சமுத்து உள்பட அ.ம.மு.க. பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ×