என் மலர்
நீங்கள் தேடியது "Jayalalitha's birthday"
- மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழா நாளாக கொண்டாட முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- மக்களின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டு களையும் தெரிவித்து கொள்கிறேன்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழா நாளாக கொண்டாட முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்- அமைச்சருக்கு புதுவை மாநில கழகத்தின் சார்பிலும், மக்களின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை யும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதாவின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த மக்கள் முதல்- அமைச்சர் ரங்கசாமிக்கு முன்னாள் முதல்-அமைச்சர்
ஓ.பி.எஸ். சார்பிலும், அ.தி.மு.க.வின் தொண்டர்களின் சார்பிலும் பாராட்டுகளை தெரிவித்து மகிழ்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அரண்மனை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
- 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
சென்னை:
அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி வருகிற 24-ந்தேதி மாலை 4 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு ஏழை, எளியோருக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
இதனையொட்டி அ.ம.மு.க. மாவட்டங்கள் வாரியாக வருகிற 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்த பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன், தலைமைக் கழக நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் சார்பு அணிகளின் நிர்வாகிகளும் ஒன்றிணைந்து செய்து வருகிறார்கள்.






