ெஜயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம்- அ.ம.மு.க. பாெதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேச்சு

யாரோ சிலர் விலை போயிருக்கலாம். நம் லட்சியத்தை நிறைவேற்றும் வரை ஓயமாட்டோம் . டிசம்பர் 31-ந் தேதிக்குள் பூத் கமிட்டி அமைக்கப்படும் என நிர்வாகிகள் சொல்லி இருக்கின்றனர்.
ெஜயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம்- அ.ம.மு.க. பாெதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேச்சு
Published on

கோவை,

கோவை ஒருங்கிணைந்த மாவட்ட அ.மு.மு.க செயல் வீரர்கள் கூட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

இதில் அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

2017-ம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த இயக்கத்தை வழி நடத்துகின்றனர். யாரோ சிலர் விலை போயிருக்கலாம். நம் லட்சியத்தை நிறைவேற்றும் வரை ஓயமாட்டோம் . பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அ.ம.மு.க இருக்காது என சிலர் சொல்கின்றனர்.

இது டெண்டர் பார்டிகளால் உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. தொண்டர்களால் உருவாக்க இயக்கம்.பழனிச்சாமி ஆட்சியை இது அடிமைகளின் ஆட்சி என தூக்கி எறிந்து விட்டு வந்தவர்கள் நீங்கள். இந்த இயக்கம் உயிரோட்டமாக இருக்க காரணம் ஓரே லட்சியம். ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம்.

டிசம்பர் 31-ந் தேதிக்குள் பூத் கமிட்டி அமைக்கப்படும் என நிர்வாகிகள் சொல்லி இருக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரகணக்கானோர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com