என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kandanam"

    • திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலசங்கம் கண்டனம்.
    • குறிப்பிட்ட பட காட்சிகளை நீக்க கோரிக்கை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத் தலைவர் தனராஜ் தலைமை வகித்து பேசும்போது.

    தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2-திரைப்படத்தில் நடிகர் மனோபாலா நடிக்கும் ஒருசில காட்சிகளில் இ-சேவை மைய ஆபரேட்டர்கள் ரூ.300 கொடுத்தால் தான் ஆதார் தொடர்பான சேவைகள் செய்ய முடியும் என்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த காட்சிகள் மூலம் இ-சேவை மைய ஆபரேட்டர்களை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் இ-சேவை மைய தொழில் மீதும், ஆபரேட்டர்கள் மீதும் பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படும் வகையில் காட்சிகள் இருப்பதால் குறிப்பிட்ட அந்த காட்சியை மட்டும் இந்தியன்-2 திரைப்படத்தில் இருந்து நீக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கர் படக்குழுவினருக்கும், திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.

    தவறும் பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலசங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரஞ்சித், நவீன், மாவட்ட பொருளாளர் சுதாகர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தி.மு.க. அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
    • தச்சுத் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    திருவேற்காடு நகராட்சிப் பகுதியில் பன்னெடுங்காலமாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு எந்தவித மாற்று ஏற்பாடுகளையும் செய்து தராமலும், முன்னறிவிப்பு இல்லாமலும் குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை வெளியேற்றத் துடிக்கும் தி.மு.க. அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    எனவே, ஆக்கிரமிப்பு எனும் பெயரில் குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை அகதிகளாக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, அரசு நிர்வாகத்தின் நடவடிக்கையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தச்சுத் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தி.மு.க. அரசின் திறனற்ற நிர்வாகத்தால் அலங்கார ஊர்தி இடம்பெறாத நிலை.
    • வருடந்தோறும் அலங்கார அணிவகுப்பு ஊர்தி இடம்பெறுவது மரபு.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    குடியரசு தின விழாவில் தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அ.தி.மு.க. ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு.

    ஆனால் தி.மு.க. அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன்.

    தி.மு.க. அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும், அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாடு அரசின் மீது பபாசிக்கு மிகுந்த மரியாதை உண்டு.
    • அரசியல் பேசக் கூடாது என பதிப்பாளர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமானன பபாசி சார்பில் 48-வது சென்னைப் புத்தகக்காட்சி, கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி சென்னை நந்தனம் ஒ.ய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது.

    இந்த கண்காட்சி வருகிற 12-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக காட்சியில் ஒவ்வொரு நாளும் ஏதாவது புது நூல் அறிமுகம் நடைபெறும். அந்த வகையில், டிஸ்கவரி புக் பேலஸ் ஏற்பாடு செய்திருந்த தமிழ்த்தேசியம் குறித்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.


    அப்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான 'நீராருங் கடலுடுத்த' பாடலுக்குப் பதிலாக வேறு ஒரு பாடல் பாடப்பட்டது குறித்த சர்ச்சையும் கிளம்பியது.

    இதனையடுத்து, புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் தமிழ்த் தாய் வாழ்த்துப் புறக்கணிப்பட்டு புதுச்சேரி அரசின் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தான் காரணம் என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டிஸ்கவரி புக் பேல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் வேடியப்பன் விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பபாசி தலைவர் சொக்கலிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    அதில் அவர் இன்றைய அரசியல் சார்ந்தும், தமிழ்நாடு அரசின் முதலமைச்சரையும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரையும் ஒருமையிலும் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தின் தமிழ்த்தாய் பாடலையும் பாடியதற்கும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மேலும், இன்று அவசர செயற்குழு கூடி டிஸ்கவரி புக் பேலஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சூழ்நிலையை, இந்த நிகழ்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மேலும் தமிழ்நாடு அரசின் மீது பபாசிக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனவே தனிப்பட்ட முறையில் டிஸ்கவரி புக் பேலஸ் நடத்திய நிகழ்விற்கு பபாசிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என விளக்கம் அளித்தார்.


    இந்த சர்ச்சை தொடர்பாக பபாசி தலைவர் சொக்கலிங்கம் நந்தனம் புத்தக கண்காட்சியில் நடந்த பேட்டியில் கூறியதாவது:-

    சீமான் மேடை ஏறுவதற்கு முன்பே, இது அரசியல் மேடை அல்ல, இலக்கிய மேடை, புத்தகங்கள் தொடர்பாக மட்டும் பேசுமாறு அறிவுறுத்தினேன்.

    மேலும் புத்தக பதிப்பக நிறுவனம் அழைத்துவரும் நபர் அரசியல் பேசக் கூடாது என பதிப்பாளர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

    48 வருடத்தில் நடக்காதது ஒன்று இப்போது நடந்துள்ளது. புத்தக கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக வந்த சீமான் எப்படி இதை செய்யலாம். அவருடைய கண்ணியத்தை காக்க அவர் தவறிவிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத்தொடர்ந்து பபாசி பொதுச் செயலாளர் முருகன் பேசியதாவது:-

    சிறப்பு விருந்தினராக வந்த சீமான், புத்தகம் பற்றி மட்டுமே பேசியிருக்க வேண்டும். புத்தக காட்சி பாதைக்கு நாங்கள் யார் பெயரை வேண்டுமானாலும் வைப்போம்.

    இந்த விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகமும் உரிய மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த பதிப்பகம் திட்டமிட்டு இதனை நடத்தியுள்ளது"

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×