என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழக மக்கள் உயர்வுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சி.பா.ஆதித்தனார்-டி.டி.வி.தினகரன்
- தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று.
- பத்திரிகை உலகில் புதிய புரட்சிக்கு அடித்தளமிட்டவர்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
பத்திரிகை உலகில் புதிய புரட்சிக்கு அடித்தளமிட்டவரும், தினத்தந்தி நாளிதழை தொடங்கியவருமான தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று.
உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என முழங்கியதோடு, அவற்றையே வாழ்க்கையின் நோக்கமாக கொண்டு தமிழுக்கும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த சி.பா.ஆதித்தனாரின் அரும்பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி கொண்டாடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story






