என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானநிலையத்தில் 3 மர்மபைகள் பீதியால் வெடிகுண்டு சோதனை
    X

    விமானநிலையத்தில் 3 மர்மபைகள் பீதியால் வெடிகுண்டு சோதனை

    சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் அனாதையாக கிடந்த 3 மர்மபைகளால் பீதி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
    ஆலந்தூர்:

    சென்னை உள்நாட்டு விமானநிலையம் புறப்பாடு பகுதி 4-வது நுழைவுவாயிலில் இன்று அதிகாலை 5 மணியளவில் கறுப்பு மற்றும் பிரவுன் கலர் பைகள் அனாதையாக கிடந்தன.

    இதே போல கார் பார்க் கிங் பகுதியிலும் ஒரு பை கேட்பாரற்று கிடந்தது.

    இந்த 3 மர்மபைகளால் விமான நிலையத்தில் பீதி ஏற்பட்டது. வெடிகுண்டு இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் அந்த பைகள் இருந்த பகுதியில் இரும்பு கம்பிகளை வைத்தனர். அங்கு நின்று கொண்டு இருந்த பயணிகளை மாற்று நுழைவு வாயிலில் செல்லுமாறு உத்தரவிடப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் மோப்பநாயுடன் அங்கு வாகன சோதனை செய்தனர்.

    அந்த பைகளில் வெறும் துணிமணிகள் மற்றும் ஊறுகாய் பாட்டில்கள் இருந்தன. யாரோ தெரியாமல் அந்த பைகளை விட்டு சென்று இருக்கலாம். அல்லது அதிகமான சுமை காரணமாக விட்டு சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    போலீசார் அந்த பைகளை அங்கிருந்து எடுத்து சென்றனர். இந்த பைகளால் விமான நிலையத்தில் 1மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த பீதி காரணமாக 4-வது நுழைவு வாயிலில் பயணிகள் செல்ல முடியாததால் மற்ற வழிகளில் பயணிகள் நீண்ட வரிசையில் நின்றே சென்றனர்.
    Next Story
    ×