search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alandur"

    கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிமனை, ஆலந்தூர், பரங்கிமலை ரெயில் நிலையங்களில் சூரிய சக்தி மின்தகடுகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. #SolarProject #MetroTrainStation
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர்- சின்னமலை-விமானநிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்டிரல், சைதாப்பேட்டை- ஏ.ஜி-டி.எம்.எஸ் வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் போக்குவரத்து சேவை நடந்து வருகிறது.

    பயணிகளின் வரவேற்பை பொறுத்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர் ஆகிய 4 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்விளக்குகள், ஏசி, ரெயில் இயக்கம் ஆகியவற்றின் மின் தேவைக்காக 103 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான மின்தகடுகள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6.3 லட்சம் மின்சார செலவு குறைகிறது.



    தொடர்ந்து உயர் மட்ட பாதையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையிலான மின்தகடுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்தவகையில் ஆலந்தூர், பரங்கிமலை மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிமனையில் கூடுதலாக சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக 1,120 கிலோ வாட் சக்தி கொண்ட மின் தகடுகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 51 ஆயிரத்து 200 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.69 லட்சத்து 49 ஆயிரத்து 152 சேமிக்க முடியும். இதனுடன் சேர்த்து சென்னை மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகம், பணிமனை மற்றும் ரெயில் நிலையங்களில் 3 மெகாவாட் அளவில் சூரிய மின்சக்தி மின்தகடுகள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 4.6 மெகாவாட் அளவில் சூரிய மின்சக்தி மின்தகடுகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அவையும் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.

    மேற்கண்ட தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். #SolarProject #MetroTrainStation
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தாலுக்காக்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. கடந்த 16-ந்தேதி முதல் இது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. #ChennaiDistrict
    சென்னை:

    காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 42 உள்ளாட்சி அமைப்புகள் கடந்த 2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதனால் இப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளுக்கு சென்னை மாநகராட்சியையும், நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தையும் அணுக வேண்டிய நிலை இருந்தது.

    இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே நிர்வாக வசதிக்காகவும், பொது மக்களின் வசதிக்காகவும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளையும் சென்னை மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளை சென்னை மாவட்டத்துடன் அரசு இணைத்தது.

    அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தாலுக்காக்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. கடந்த 16-ந்தேதி முதல் இது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    ஆலந்தூர் தாலுக்காவில் உள்ள நந்தம்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், முகலிவாக்கம், மனப்பாக்கம், மீனம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், தலக்கனஞ்சேரி, மவுலிவாக்கம், உள்ளிட்ட பகுதிகள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஆலந்தூர் தாலுக்கா என்ற பெயரிலேயே செயல்படும்.

    இந்த தாலுக்காவில் இருந்த மூவரசம்பேட்டை பகுதி மட்டும் பல்லாவரம் தாலுக்காவுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

    இதேபோல் சோழிங்கநல்லூர் தாலுக்காவில் உள்ள உள்ளகரம், சோழிங்கநல்லூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, நீலாங்கரை, காரப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், ஒக்கியம், துரைப்பாக்கம், மடிப்பாக்கம் ஜல்லடியன் பேட்டை, செம்மஞ்சேரி, உத்தண்டி, சீவரம் பகுதிகள் சென்னை மாவட்டத்துடன் இணைந்துள்ளன. தொடர்ந்து சோழிங்கநல்லூர் தாலுக்கா என்ற பெயரிலேயே செயல்படும்.

    அந்த தாலுக்காவில் இருந்த பெரும்பாக்கம், சித்தலப்பாக்கம், ஒட்டியம் பாக்கம், வேங்கைவாசல், மேடவாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட 8 கிராமங்கள் தாம்பரம் தாலுக்காவுடன் இணைக்கப்பட்டு உள்ளன. #ChennaiDistrict

    ஆலந்தூரில் செல்போன் வியாபாரி ஒருவர் கை, கால் கட்டப்பட்டிருந்த நிலையில் மர்மமாக இறந்த கிடந்தார். இந்த கொலையில் வேலைக்கார பெண்ணுக்கு தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    பண்ருட்டியை சேர்ந்தவர் முகமது சுல்தான் (40). இவர் சென்னை ஆலந்தூர் எம்.கே.என்.சாலை 2-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் தனியாக வசித்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும், ரிச்சி தெருவில் செல்போன் மற்றும் அதன் உதிரி பாகங்கள் மொத்த விற்பனையும் செய்து வந்தார்.

    நேற்று மாலை முகமது சுல்தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து தீயை அணைத்தனர். அப்போது படுக்கை அறையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் முகமது சுல்தான் இறந்து கிடந்தார்.

    அவரது கை, கால்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. மர்ம நபர்கள் அவரை எரித்து கொலை செய்து தப்பி இருப்பது தெரிந்தது. இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த வீட்டின் அருகே கண்காணிப்பு காமிரா எதுவும் இல்லாததால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    கொலையுண்ட முகமது சுல்தான் வீட்டில் ஆலந்தூர் ராஜா தெருவை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் வேலை பார்த்து உள்ளார். அவருக்கும், முகமது சுல்தானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. எனவே இந்த மோதலில் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து வேலைக்கார பெண்ணை போலீசார் பிடித்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது சுல்தானை வேலைக்கார பெண்ணின் வருங்கால கணவர் வந்து சந்தித்துள்ளார்.

    பெண் தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. தற்போது வேலைக்கார பெண்ணின் வருங்கால கணவர் ராமேஸ்வரத்திற்கு சென்றிருப்பதாக தெரிகிறது. அவரிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் அங்கு சென்றுள்ளனர்.
    ×