என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்த காட்சி.
  X
  பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்த காட்சி.

  மு.க.ஸ்டாலின் பேசும் மேடை அமைக்கும் பணியை அமைச்சர் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆத்தூரில் 24-ந் தேதி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும் மேடை அமைக்கும் பணியை அமைச்சர் ஆய்வு செய்தார்.
  ஆத்தூர்:

  சேலம் மாவட்டம் ஆத்தூர் செல்லியம்பாளையம் பகுதியில் வருகிற  24-ந்தேதி மாலை 3 மணிக்கு தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 

  இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்   கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

   அதற்காக பிரமாண்ட திறந்தவெளி மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேடை அமைக்கும் பணி மற்றும் பொதுகூட்ட  ஏற்பாடுகள்  குறித்து  ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு  ஆய்வு செய்தார். 

  அப்பொழுது போலீசாரிடம் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து என கேட்டறிந்தார். கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

  இந்த ஆய்வின்போது  தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
  Next Story
  ×