search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேடை"

    • வருகிற 24-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூர் தொட்டிப்பாளையத்தில் நடக்கிறது.
    • 40 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    காங்கயம்:

    தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் வருகிற 24-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூர் தொட்டிப்பாளையத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 50 சட்டமன்றத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பங்கேற்கிறார்கள். திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்பட 7 வருவாய் மாவட்டத்தில் உள்ள கட்சியின் 14 மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதற்காக 40 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மேடை அமைப்பு, இருக்கை வசதி, பந்தல் அமைப்பது, கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் முத்துசாமி தொட்டிப்பாளையத்தில் உள்ள கூட்டம் நடக்கும் மைதானத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன், அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், நிர்வாகி திலகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • 19- ந் தே‌தி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • உலகங்காத்தான் பகுதியில் விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வருகிற 19- ந் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதில் அவர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். மேலும் முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கவும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. இதையொட்டி உலகங்காத்தான் பகுதியில் விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பயனாளிகள் அமர்வதற்கான பந்தல் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு பணிகள், வாகனங்கள் வந்து செல்வதற்கான பணிகள், தற்காலிக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து பணிகளை விரை ந்து மேற்கொள்ள பொது ப்பணித்துறை மற்றும் இதர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

    அப்போது கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, கள்ளக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் சத்தியமூர்த்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (கட்டிடம் மற்றும் கட்டுமானப் பணிகள்) மாலா, கள்ளக்குறிச்சி தாசில்தார் சத்தியநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    • 6 மாதங்களாக எரிவாயு தகன மேடை செயல்படாமல் உள்ளது
    • சாலையோரம் பிணங்களை எரிப்பதால் அச்சம்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் பொதுவான வகையில் எரிவாயு மின் தகன மேடை சென்ற ஆண்டு தமிழக அரசால் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இங்கு இறந்த நபரை தகனம் செய்ய ரூ.3000 என நகராட்சி மூலம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த 6 மாதங்களாக இந்த எரிவாயு தகன மேடை செயல்படாமல் உள்ளது.

    இதனால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முடியாமல் முக்கிய சாலையின் ஓரத்தில் உள்ள சுடுகாட்டில் பிணங்களை எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மீண்டும் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    மேலும் அந்த வழியாக சாலையை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், முதியவர்கள் புகை மூட்டமாக இருப்பதால் சிரமம் அடைகிறார்கள். மேலும் பலருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது.

    இந்த சுடுகாட்டின் அருகிலேயே அரசு கலைக்கல்லூரியும் அமைந்துள்ளது. கல்லூரி மாணவ, மாணவிகள் தாங்கள் வகுப்பறையில் பெரும் சிரமத்தை சந்திப்பதாக புகார் தெரிவித்துள்ளதோடு இந்த சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    • கல்லூரி வளாகத்தினுள்ளேயே அமர்ந்து உணவருந்தும் விதமாக ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் உணவருந்தும் மேடை.
    • தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகளை எம்.எல்.ஏ நட்டு வைத்தார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த புத்தூரில் சீனிவாசா சுப்புராயா அரசு பல் தொழிநுட்பக் கல்லூரியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் மதிய உணவு இடைவேளையின் போது மாணவிகள் கல்லூரி மைதானம் மற்றும் மரத்தின் நிழல்களில் அமர்ந்து உணவருந்துவதை அறிந்த கல்லூரியின் முன்னாள் மாணவரும் சென்னை துர்கா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் உரிமையா ளருமான சண்முகம் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ளேயே அமர்ந்து உணவருந்தும் விதமாக ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் உணவருந்தும் மேடை அமைத்து கொடுத்துள்ளார்.

    இதையடுத்து உணவரு ந்தும் வளாகம் திறப்பு விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

    பின்னர் பருவ தேர்வு களில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் விளையாட்டு துறையில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கல்லூரி முதல்வர் முனைவர் தங்கமணி தலைமை வகித்தார்.

    இயந்திரவியல் துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.

    ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ராஜேந்திரன், அமைப்பியல் துறை தலைவர் முகமதுஆஷிக் அலி முன்னிலை வகித்தனர்.

    கண்காணிப்பாளர் வைத்தியநாதன், ஆசிரிய ர்கள் பிரேம்நாத், தாமரைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கணினியில் துறை விரிவுரையாளர் சத்யா நன்றி கூறினார்.

    • கே.எஸ்.அழகிரி இன்று பார்வையிட்டார்
    • ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.பாதயாத்திரை தொடக்க விழா வருகிற 7- தேதி கன்னியாகுமரியில் நடக்கிறது.

    இதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார்கள்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி குமரி மாவட்டத்தில் முகாமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

    ராகுல் காந்தியை வரவேற்பது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் ராகுல் காந்தியை வரவேற்கும் வகையில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுக்களுடன் கே.எஸ் அழகிரி நாகர் கோவிலில் ஆலோசனை நடத்தினார்.

    இதை தொடர்ந்து இன்று காலை கன்னியாகுமரிக்கு சென்ற கே.எஸ்.அழகிரி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடப்பதை அழகிரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவருடன் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், எம்.பி.க்கள் விஜய் வசந்த், திருநாவுக்கரசு, ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி அரசின் சாதனைகளை விளக்கி மாநிலத் தலைவர் அண்ணாமலை, சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
    • 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில், ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    பல்லடம் :

    பல்லடம் கரையான் புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாமரை மாநாடு என்ற பெயரில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேச உள்ளார். கடந்த சிலநாட்களுக்கு முன் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. தற்போது மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநில பொதுச்செயலாளர் ஏ. பி. முருகானந்தம், திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச்செயலாளர் கே.சி.எம்.சீனிவாசன், கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆலோசனைகள் கூறி வருகின்றனர். இது குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் கூறியதாவது: - தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி அரசின் சாதனைகளை விளக்கி மாநிலத் தலைவர் அண்ணாமலை , சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் ஜூலை 17 ந்தேதி பல்லடத்தில் தாமரை மாநாடு என்ற பெயரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அண்ணாமலை கலந்து கொண்டு பேச உள்ளார். இந்த பொதுக்கூட்டத்திற்கு பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில், ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    கூட்டத்திற்கான ஒளி விளக்குகள், நாற்காலிகள், சுகாதார வளாகம் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது என்றனர்.

    ×