search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி  முகவர்கள் கூட்டம்: பிரம்மாண்ட மேடை-பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரம்
    X

    மேடை-பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்த காட்சி.

    தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்: பிரம்மாண்ட மேடை-பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரம்

    • வருகிற 24-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூர் தொட்டிப்பாளையத்தில் நடக்கிறது.
    • 40 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    காங்கயம்:

    தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் வருகிற 24-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூர் தொட்டிப்பாளையத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 50 சட்டமன்றத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பங்கேற்கிறார்கள். திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்பட 7 வருவாய் மாவட்டத்தில் உள்ள கட்சியின் 14 மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதற்காக 40 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மேடை அமைப்பு, இருக்கை வசதி, பந்தல் அமைப்பது, கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் முத்துசாமி தொட்டிப்பாளையத்தில் உள்ள கூட்டம் நடக்கும் மைதானத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன், அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், நிர்வாகி திலகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×