search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்க தேர்தலில் வெற்றி பெற்ற வக்கீல்கள்.
    X
    சங்க தேர்தலில் வெற்றி பெற்ற வக்கீல்கள்.

    ஓமலூரில் வக்கீல்கள் சங்க தேர்தல்

    ஓமலூர் நீதிமன்ற வக்கீல்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பொறுப்பாளர்கள் பதவி ஏற்றனர்.
    ஓமலூர்,

    சேலம் மாவட்டம் ஓமலூரில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பணியாற்றி வருகின்றனர்.
     
    ஓமலூர் வக்கீல்கள் சங்கம் சார்பில் வருடந்தோறும் தேர்தல் நடைபெற்று முறையாக தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர் உள்ளிட்டவர்களை தேர்ந்தெடுப்பது வழக்கம்.

    அதுபோல் இந்த ஆண்டு வக்கீல்கள் சங்கத் தேர்தல் நடைபெற்றது. வக்கீல்கள் சீனிவாசன், சித்தார்த்த சங்கர், ஆகியோர் தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டனர். தேர்தல் நடைமுறைகள் தொடங்கி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    இதில் ஓமலூர் வக்கீல்கள் சங்க தலைவராக ரங்கநாதன், செயலாளராக சிவக்குமார், பொருளாளராக கண்ணன், துணைச் செயலாளராக ஜெமினி சங்கர், இணைச் செயலாளர் சௌந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் முருகன், சிவரஞ்சனி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

    இவர்களை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் இதில் போட்டியிட்ட அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இன்று பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். 

    நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மூத்த வக்கீல்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

    வக்கீல்கள் சங்க தலைவர் பேசும்போது, ஓமலூர் நீதிமன்றத்தில் உள்ள வக்கீல்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்று தருவோம் என உறுதியளித்தார். இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    Next Story
    ×