என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  திருவள்ளூர் அருகே வடமாநில வாலிபர் கொலையில் மேலும் 8 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் அருகே வடமாநில வாலிபர் கொலையில் மேலும் 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருவள்ளூர்:

  திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி பகுதியில் தனியார் தொழிற்சாலைக்கு ஒப்பந்த ஊழியர்களை பணியில் அமர்த்துவ தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது.

  இதன் தொடர்ச்சியாக கடந்த 14-ந் தேதி இரவு பேரம்பாக்கத்தில் வடமாநில தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்து மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் வடமாநிலத்தை சேர்ந்த அப்துல் அசீம் (20), உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

  இவர்ளில் பலத்த காயம் அடைந்த அப்துல் அசீம் சென்னை ராஜீவ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

  இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வடமாநில வாலிபர் கொலை தொடர்பாக ஒப்பந்த ஊழியர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்களைச் சேர்ந்த மப்பேடு முத்தீஷ், கடம்பத்தூர் தினேஷ் , செயம்பாக்கம் பிரபு ஆகிய 3 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்து இருந்தனர்.

  இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் வருண்குமார் உத்தரவின் பேரில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மேற்பார்வையில் செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி மேலும் கீழச்சேரி திவாகர், திமியோன், கடம்பத்தூர் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த ராஜேஷ் என்ற ஆசீர்வாதம், சூர்யா, கே.வி.கே., நகரைச் சேர்ந்த தினேஷ் , சின்னதெருவைச் சேர்ந்த முகேஷ் என்ற பப்லு, பிரையாங்குப்பம் பிரகாஷ் என்ற தீபக், கசவல்லாத்தூரைச் சேர்ந்த ஸ்டீபன் என்ற ராஜா ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

  அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடிவருகிறார்கள்.

  Next Story
  ×