search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசிய காட்சி.
    X
    அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசிய காட்சி.

    அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் பிரதமர் மோடியை சந்திக்க முடிவு- நாராயணசாமி

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #CauveryIssue
    புதுச்சேரி:

    தமிழகத்தை போல் புதுவையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டம் ஓட்டல் ஆனந்தா இன்னில் நடந்தது.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், எம்.பி.க்கள் ராதா கிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன், விஜயவேணி, அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன், சிவா, கீதா ஆனந்தன், என்.எஸ்.ஜெ. ஜெயபால்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், பெருமாள், முருகன், பா.ஜனதா துணை தலைவர் ரவிச்சந்திரன், ராஷ்டீரிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சஞ்சீவி உள்ளிடட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்து கட்சி கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


    அவ்வாறு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கவில்லை என்றால் அதனை அமைக்க அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், பிரதிநிதிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளையும் டெல்லிக்கு அழைத்து சென்று ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து மத்திய அரசிடம் வலியுறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தினால் மத்திய அரசு உச்சநீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும்.

    கடைமடை பகுதியான காரைக்காலுக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும். காரைக்கால் பகுதி மேலும் வளர்ச்சி அடையும்.

    இவ்வாறு முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Tamilnews
    Next Story
    ×