என் மலர்

  செய்திகள்

  தி.மு.க. மனித சங்கிலி போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ. ஆதரவு: ஜி.ராமகிருஷ்ணன்
  X

  தி.மு.க. மனித சங்கிலி போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ. ஆதரவு: ஜி.ராமகிருஷ்ணன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்த விலக்கு அளிக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கம் என ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
  சென்னை:

  மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்த விலக்கு அளிக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் 27-ந்தேதி மாலை தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

  இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

  அதனை ஏற்று தி.மு.க. நடத்தும் மனித சங்கிலியில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என்று திருநாவுக்கரசர் அறிவித்தார். அவரை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களும் போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

  இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசனும், தி.மு.க. போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும், மாணவர்களும், பெற்றோர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.

  இந்த நிலையில் தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி போராட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது.

  இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் கூறியதாவது:-

  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற மத்திய அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.

  மாநில அரசு அதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மாணவர்கள் நலனுக்காக தி.மு.க. முன் எடுத்து செல்லும் மனித சங்கிலி போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு அளிக்கிறது. அந்த போராட்டத்தில் தோழர்கள் பங்கேற்பார்கள்.

  மேலும் 28-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிட்டு சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடத்தப்படுகிறது. அன்று என் தலைமையில் சென்னையில் மத்திய அரசு அலுவலகம் முன்பு மறியல் நடைபெறும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×