என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • காரில் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் இருக்கிறதா? என பத்திரிகையாளர் கேள்வி
    • அபராதம் கட்டவில்லையென்றால் நீதிமன்றம் செல்ல நேரிடும் எனக் கூறியுள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் காரில் சென்ற துஷார் சக்ஸேனா என்ற பத்திரிகையாளர் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி நொய்டா போலீசார் ரூ.1000 அபராதம் விதித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ராம்பூர் ராம்பூர் நகரில் வசி வசிக்கும் துஷார் சக்ஸேனா வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெள்ளை நிற ஹூண்டாய் காரை அவர் வாங்கினார்.

    அங்கிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள கவுதம புத்தா நகரில் அவர் கார் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாததற்காக 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று அவரது செல்போனுக்கு 9 மாதங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

    தவறுதலாக மெசேஜ் வந்துள்ளது என்று அவர் முதலில் நினைத்துள்ளார். ஆனாலும் அபராதம் செலுத்தக் கூறி அவருக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்துள்ளன.

    இது குறித்து போலீசாரிடம் அவர் கேட்டபோது, அபராதம் கட்டவில்லையென்றால் நீதிமன்றம் செல்ல நேரிடும் எனக் கூறியுள்ளனர்.

    இதுவரை கவுதம புத்தா நகருக்கு காரில் சென்றதே இல்லை எனக் தெரிவித்த துஷார், காரில் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    2017 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் இதேபோன்று ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. மாருதி ஆம்னி காரை ஒட்டிய நபருக்கு ஹெல்மெட் அணியாததற்காக போலீசார் அபராதம் விதித்தனர். இதனையடுத்து அந்த நபர் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்ட தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறுவனின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட போலீசார் அவனை மீட்டுள்ளனர்.
    • தன்னை யாரோ கடத்தி விட்டதாக சிறுவன் நாடகம் ஆடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் பதேபூரில் 17 வயது சிறுவனை காணவில்லை என்று அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சிறுவனை போலீசார் மீட்டுள்ளனர்.

    இதனையடுத்து போலீசாரின் விசாரணையில், சிறுவனை யாரும் கடத்தவில்லை என்று, தன்னை யாரோ கடத்தி விட்டதாக சிறுவன் நாடகம் ஆடியதும் தெரிய வந்துள்ளது.

    இன்ஸ்டாகிராமில் அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் இந்த சிறுவன் மெசேஜ் அனுப்பி தொடர்ச்சியாக பேசி வந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட பெண்ணின் குடும்பம் சிறுவனின் குடும்பத்திடம் இதை பற்றி தெரிவித்துள்ளனர்.

    இதனால் பயப்பட்ட சிறுவன் இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளான். அவரது தந்தைக்கு செல்போனில் அழைத்து உங்கள் மகனை கடத்தியுள்ளோம். உங்கள் மகனை விடுவிக்க ரூ.10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் மிரட்டியுள்ளான். பின்னர் தனது செல்போனை சிறுவன் சுவிட்ச் ஆப் செய்துள்ளான்.

    சிறுது நேரம் கழித்து தனது போனை சிறுவன் சுவிட்ச் ஆன் செய்த போது சிறுவனின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட போலீசார் அவனை மீட்டுள்ளனர்.

    • 3 பேரின் உடல்களையும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக தேடினர்.
    • இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள புனித தலங்களை பார்வையிட பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 நண்பர்கள் ஆகஸ்ட் 24 அன்று சென்றுள்ளனர்.

    அப்போது கங்கை நதியின் அருகே செல்பி எடுக்க முயன்றபோது, சோனா சிங் (19) என்ற மருத்துவ மாணவி ஆற்றில் தவறி விழுந்துள்ளார். உடனே அவரை காப்பாற்ற அவரது நண்பர்களான ரிஷி, வைபவ் சிங் ஆகியோரும் ஆற்றில் குதித்துள்ளனர். ஆனால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மூவரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

    இதனையடுத்து, 3 பேரின் உடல்களையும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக தேடினர். அப்போது வைபவ் சிங் என்ற இளைஞரின் உடலை அவர்கள் மீட்டனர். மற்ற 2 பேரில் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இந்தியாவில் ஆபத்தான இடங்களில் செல்பி, ரீல்ஸ் எடுக்கும் போது தொடர்ச்சியாக பலர் உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கானது.
    • அது ஏழை மக்கள், தொழிலாளர்களால் பாதுகாக்கப்படுகிறது என்றார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம்.

    இந்தியாவில் 90 சதவீத மக்கள் நிர்வாக அமைப்பை விட்டு விலகி வெளியே உள்ளனர்.

    அவர்களுக்காக இந்த கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்.

    90 சதவீத மக்களுக்கு திறனும், கல்வி அறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்கு தொடர்பு இல்லை.

    இதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

    சாதிவாரி கணக்கெடுப்பு என்பது காங்கிரசுக்கு ஒரு கொள்கை கட்டமைப்பு மற்றும் வழிகாட்டி.

    அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் 10 சதவீத மக்களுக்கானது அல்ல, அது அனைத்து குடிமக்களுக்கானது.

    அரசியலமைப்பு ஏழை மக்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர் ஆகியோரால் பாதுகாக்கப்படுகிறது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு சார்பில் போலாநாத் பாண்டே, தேவேந்திர பாண்டவுடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
    • போலாநாத் பாண்டே, தேவேந்திர பாண்டே ஆகிய இருவரும் போலீசில் சரண் அடைந்தனர்.

    லக்னோ:

    1978-ம் ஆண்டு மத்தியில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. உத்தரபிரதேசத்தில் முதல்- மந்திரியாக ராம்நரேஷ் யாதவ் இருந்தார்.

    அந்த ஆண்டு டிசம்பர் 20-ந்தேதி இந்திய ஏர்லைன்ஸ் விமானம் 152 பயணிகளுடன் கொல்கத்தாவில் இருந்து புதுடெல்லி புறப்பட்டது. அந்த விமானம் லக்னோ வந்த போது விமானத்தில் இருந்த இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களான போலா நாத் பாண்டே, தேவேந்திர பாண்டே ஆகிய 2 பேர் நேராக விமானியின் அறைக்குள் நுழைந்து கையில் துப்பாக்கியை வைத்து கொண்டு விமானத்தை கடத்துவதாக அறிவித்தனர்.

    மேலும் இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி ஆகிய இருவர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். ஜெயிலில் உள்ள இந்திரா காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் பதட்டம் நிலவியது.

    இதைத்தொடர்ந்து அரசு சார்பில் போலாநாத் பாண்டே, தேவேந்திர பாண்டவுடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அப்போது அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதை தொடர்ந்து விமானம் புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு போலாநாத் பாண்டே, தேவேந்திர பாண்டே ஆகிய இருவரும் போலீசில் சரண் அடைந்தனர்.

    பின்னர் 1980-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமர் ஆனவுடன் போலாநாத் பாண்டே, தேவேந்திர பாண்டே ஆகியோர் மீதான வழக்குகள் கைவிடப்பட்டது.

    பின்னர் போலாநாத் பாண்டே உத்தரபிர தேசத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். தற்போது 71 வயதான அவர் பதவி எதிலும் இல்லாத நிலையில் சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் அவர் காலமானார். அவரது உடல் லக்னோவில் பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    • ஹரி பயப்படாமல் தைரியமாக அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.
    • தற்போது ஹரியின் உடல்நிலை சீராக உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பாம்பு கடித்த நபர், அந்த பாம்பை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பாலியா தாலுகாவின் சம்பூர்ணா நகர் கிராமத்தில் வசிக்கும் ராம்சந்திரா என்பவரின் மகன் ஹரி ஸ்வரூப் (40) என்பவரின் கை விரலில் பாம்பு கடித்தது. ஆனால் ஹரி பயப்படாமல் தைரியமாக அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.

    டப்பாவில் பாம்பை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்கள் கூட பயந்து போனார்கள். ஹரி தன்னை கடித்த பாம்பு இதுதான் என காட்டி டாக்டரிடம் சிகிச்சை அளிக்க சொன்னார்.

    அவரது தைரியத்தை கண்டு டாக்டர்கள் வியந்தனர். பாம்பு கடித்த பின்னும் ஹரி நிதானமாக பேசிக் கொண்டிருந்தார்.

    தற்போது ஹரியின் உடல்நிலை சீராக உள்ளது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • திருமணத்துக்கு பிறகு, கணவரின் ஊரான அயோத்தியில் மரியம் வசிக்கத் தொடங்கினார்.
    • ஆத்திரம் அடைந்த அர்ஷத், தன் மனைவியை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பரைச் நகரை சேர்ந்தவர் மரியம். அவருக்கும், அயோத்தியை சேர்ந்த அர்ஷத் என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு, கணவரின் ஊரான அயோத்தியில் மரியம் வசிக்கத் தொடங்கினார்.

    அயோத்தி நகர சாலைகள், அங்குள்ள வளர்ச்சி, அழகு ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தையும், பிரதமர் மோடியையும் கணவர் முன்னிலையில் புகழ்ந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஷத், தன் மனைவியை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பெரியவர்கள் சமாதானத்துக்கு பிறகு, மரியம் மீண்டும் அயோத்தியில் கணவர் வீட்டுக்கு சென்றார். ஆனால், கோபத்தில் இருந்த அர்ஷத், மரியமை அடித்து உதைத்தார். பிரதமர் மோடியையும் ஆதித்யநாத்தையும் வசைபாடிய அவர், தன் மனைவியை பார்த்து 'தலாக், தலாக், தலாக்' என்று மூன்று முறை கூறினார்.

    மேலும், அர்ஷத்தின் குடும்பத்தினர் மரியமின் கழுத்தை நெரிக்க முயன்றனர். மேற்கண்ட தகவல்களை பரைச் நகர போலீசில் மரியம் புகார் மூலம் தெரிவித்தார். அதன்பேரில், கணவர் அர்ஷத் உள்பட அவருடைய குடும்பத்தினர் 8 பேர் மீது முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • வெறும் 26 சதவீத ஊழியர்கள் மட்டுமே இதுவரை இந்த உத்தரவை நிறைவேற்றியுள்ளனர்
    • உத்தரப் பிரதேசத்தில் சுமார் 17 லட்சத்து 88 ஆயிரத்து 429 அரசு ஊழியர்கள் உள்ளனர்.

    உத்தரப் பிரதேச யோகி ஆதித்தநாத் அரசின் உத்தரவால் அம்மாநிலத்தில் சுமார் 13 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை அரசின் மாநவ் சம்பதா [Manav Sampada] இணையத்தில் கட்டாயமாகப் பதிவேற்ற வேண்டும் என்பதே அந்த உத்தரவு.

    கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில் சொத்து விவரங்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி தேதியாகக் கடந்த வருட டிசம்பர் 31 ஆம் தேதியை நிர்ணயித்திருந்தது அரசு. பின் அதை ஜூன் 30 வரையும், அதன்பின் ஜூலை 31 வரையும் நீட்டித்திருந்து. ஆனால் வெறும் 26 சதவீத ஊழியர்கள் மட்டுமே இதுவரை தங்களின் சொத்து விவரங்களை அரசின் இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.

    எனவே ஆகஸ்ட் 31 வரை கடைசி தேதியை மீண்டும் அரசு நீட்டித்திருந்தது. இந்நிலையில் இந்த மாதம் முடிய இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத ஊழியர்களுக்கு இந்த மாதத்திற்கான சம்பளம் கிடையாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் சுமார் 17 லட்சத்து 88 ஆயிரத்து 429 அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 26 சதவீதம் பேர உத்தரவை நிறைவேற்றியுள்ள நிலையில், மீதம் இருக்கும் 13 லட்சம் பேர் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத பட்சத்தில் தங்களின் சம்பளத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

    • நோ பார்க்கிங் இடத்தில நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பு.
    • ஆட்டோ எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகரில் நோ பார்க்கிங் இடத்தில நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    இது தொடர்பாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநர், ஒருகட்டத்தில் விரக்தியாகி தனது ஆட்டோவை தீ வைத்து எரித்தார்.

    ஆட்டோ எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டோவிற்கு தீ வைத்ததற்காக ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அதே சமயம், தன்னை பழிவாங்குவதற்காக தனது ஆட்டோவை போலீசார் தீ வைத்து எரித்தனர் என்று ஆட்டோ ஓட்டுநர் குற்றம் சாட்டியுள்ளார்.

    • ராகுல்- அனிதா தம்பதியினரிடையே நேற்று வாக்குவாதம் எழுந்துள்ளது.
    • ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பிறந்த வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்ன மனைவியின் மூக்கை கணவன் அறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. லக்னோவில் பூர்வா [Baniyaani Purwa] பகுதியில் வசித்து வரும் ராகுல்- அனிதா தம்பதியினரிடையே நேற்று வாக்குவாதம் எழுந்துள்ளது.

    நேற்று ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டிவிட பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அனிதா கூறியதே இந்த சண்டைக்குக் காரணம். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் ராகுல் அனிதாவின் மூக்கை அறுத்துள்ளார்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தீவிர சிகிச்சைக்குப் பின் ஆபத்தான கட்டத்தை கடந்த அனிதா, தனது கணவனின் கொடூரமான செயல் குறித்து பேசினார். கணவன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    • அவர்கள் இருவரும் தங்களது கைகளைத் துணியால் ஒன்றாக கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்துள்ளனர்.
    • தனது மகள்கள் தற்கொலை செய்து கொள்ள மூத்த மகள் அனிதாவின் கணவனே காரணம் என்று தந்தை அசோக் குமார் போலீசில் தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் சகோதரிகள் இருவரும் கைகளைக் கட்டி ஒன்றாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மான்காபூர் கிராம் பகுதியை சேர்த்தவர் அசோக் குமார். இவருக்கு அனிதா, சுனிதா [19], புனிதா [17] என மூன்று மகள்கள் உள்ளனர்.

    மூத்த மகள் திருமணமாகிச் சென்றுவிட்டார். சுனிதா 12 வகுப்பில் தேரியுள்ள நிலையில் புனிதா 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அதிகாலை வெளியில் சென்ற சுனிதாவும், புனிதாவும் மீண்டும் வீடு திரும்பாததால் ஊர் மக்களுடன் மகள்களைத் தந்தை அசோக் குமார் தேடியுள்ளார். இந்த நிலையில் அவர்கள் இருவரின் உடல்களும் பிசுஷி ஆற்றில் Bisuhi river கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கிராமவாசிகள் உதவியுடன் அவர்கள் இருவரின் உடல்களும் ஆற்றில் இருந்து பின்னர் மீட்கப்பட்டது. அவர்கள் இருவரும் தங்களது கைகளைத் துணியால் ஒன்றாக கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்துள்ளனர். தனது மகள்கள் தற்கொலை செய்து கொள்ள மூத்த மகள் அனிதாவின் கணவனே காரணம் என்று தந்தை அசோக் குமார் போலீசில் தெரிவித்துள்ளார். அனிதாவின் கணவன் அவர்கள் இருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

    தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளுக்கு 044 2464 0050 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

    • சிறுமியை ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் ஒன்றுக்கு வரும்படி அழைத்த அந்த பி.டி. ஆசிரியர் தனது வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
    • சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ரூ.30,000 ஆயிரத்தை கொடுத்து போலீசுக்கு போக வேண்டாம் என்று அந்த பி.டி. ஆசிரியர் எச்சரித்துள்ளார்.

    நாடு முழுவதும் கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பதற்கு நீதி கேட்டு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் வேலையிலும் பாலியல் பலாத்கார கொடூரங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியில் பள்ளியில் பி.டி. ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 20 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த சிறுமி இன்று உயிரிழந்தார்.

    கடந்த வருடம் டிசம்பர் மாதம், சிறுமியை ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் ஒன்றுக்கு வரும்படி அழைத்த அந்த பி.டி. ஆசிரியர் தனது வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து மாணவியின் உடல்நிலை பாதிக்கபட்டதைத் தொடர்ந்து சிறுமியை அத்தை ஊருக்கு அனுப்பி பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். தனக்கு நடந்ததைச் சிறுமி அத்தையிடம் கூறவே, பெற்றோர்களுக்கு உண்மை தெரியவந்துள்ளது. ஆனால் ஊரார் முன் அவமானப்படக் கூடுமோ என்று பயந்து அவர்கள் போலீசில் புகார் அளிக்கத் தயங்கியுள்ளனர்.

    இதற்கிடையில் சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ரூ.30,000 ஆயிரத்தை கொடுத்து போலீசுக்கு போக வேண்டாம் என்று அந்த பி.டி. ஆசிரியர் எச்சரித்துள்ளார். கடந்த மாதங்களில் சிறுமியின் மிகவும் மோசமாகிக்கொண்டே வந்த நிலையில் ஜூலை 10 ஆம் தேதி இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையறிந்த அந்த பி.டி. ஆசிரியர் தப்பியோடிய நிலையில் அவரை இன்னும் போலீசார் தேடி வருகிறனர். இந்த நிலையில்தான் சிறுமியின் உடல்நிலை கடந்த 20 நாட்களாக மிகவும் மோசமாகி சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். 

    ×