என் மலர்
நீங்கள் தேடியது "Government Servants"
- அரசு ஊழியர்கள்-ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகரில், நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ செலவினத் தொகையை திரும்பக்கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் வகையில், மனுக்கள் மற்றும் அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற அரங்கத்தில் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது.
அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது மாவட்ட மருத்துவம் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் இணை இயக்குநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்த கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- வீட்டு வாடகைப்படியை சரியாக கணக்கிட மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்ற சலுகைகளை பற்றிய புரிதல் அவசியமாகிறது.
- வீட்டு வாடகைப்படி அந்த நகரத்தின் வகையைப் பொறுத்தது. நகரங்கள் X, Y, மற்றும் Z என்று பிரிக்கப்படுகின்றன.
புதுடெல்லி:
மத்திய அரசு ஊழியர்க ளின் அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது.
அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது வீட்டு வாடகைப்படியும் அதற்கு ஏற்றார்போல் உயர்த்தப்படும். ஆனால், இதுவரை வீட்டு வாடகைப் படி குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இது குறித்து ருத்ரா மற்றும் ருத்ரா சட்ட அலுவலக நிறுவனர்களில் ஒருவரான சஞ்சீவ் குமார் கூறுகையில்,
"வீட்டு வாடகைப்படியை சரியாக கணக்கிட மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்ற சலுகைகளை பற்றிய புரிதல் அவசியமாகிறது. பொதுவாக வீட்டு வாடகைப்படியானது ஊழியர் எந்த வகை நகரத்தில் வசிக்கிறார் என்பதை பொருத்ததே" என்று கூறினார்.
வீட்டு வாடகைப்படி அந்த நகரத்தின் வகையைப் பொறுத்தது. நகரங்கள் X, Y, மற்றும் Z என்று பிரிக்கப்படுகின்றன. இதில் 7-வது சம்பள கமிஷன் அகவிலைப்படி 25 சதவீதத்தை எட்டிய போது அடிப்படை சம்பளத்தில் X, Y, மற்றும் Z நகரங்களுக்கு முறையே வீட்டு வாடகைப்படியானது 27சதவீதம், 18சதவீதம் மற்றும் 9சதவீதம் என முன்பு கொடுக்கப்பட்டு வந்தது.
பிறகு தற்போது அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டிய பிறகு வீட்டு வாடகைப்படி விகிதங்களை முறையே X, Y மற்றும் Z நகரங்களில் அடிப்படை சம்பளத்தில் 30சதவீதம், 20சதவீதம் மற்றும் 10 சதவீதம் என திருத்தியுள்ளது.
ஆகவே ரூ.35 ஆயிரம் அடிப்படை சம்பளம் பெறக் கூடிய மத்திய அரசு ஊழியர்கள் இனி, X நகரவாசியாக இருக்கும் பட்சத்தில் வீட்டு வாடகைப்படி ரூ.10 ஆயிரத்து 500 வழங்கப்படும். Y நகரவாசிகளுக்கு வீட்டு வாடகைப்படி ரூ.7 ஆயிரம் வழங்கப்படும். Z நகரவாசிகளுக்கு வீட்டு வாடகைப்படி ரூ.3 ஆயிரத்து 500 வழங்கப்படும்.
- ‘எம்மீஸ்’ தளத்தில் பதிவேற்ற கட்டாயப்படுத்துகிறது.
- மாணவர்களுக்கு கற்பிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மாணவர்கள் பற்றிய விவரங்களையும், வருகைப் பதிவேட்டையும் 'எம்மீஸ்' தளத்தில் பதிவேற்ற கட்டாயப்படுத்துகிறது.
இதனால், ஆசிரியர்கள் தினமும் காலை, மாணவர்களின் வருகைப் பதிவேட்டை 'எம்மீஸ்' தளத்தில் பதிவேற்றுதிலேயே நேரம் போத வில்லை என்றும், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் நேரத்தைவிட, தங்களது கைப்பேசி இருக்கும் நேரம் அதிகமாகி விட்டதாக ஆசிரியர்கள் இந்த அரசை குற்றம் சாட்டுகிறார்கள்.
ஒருசில நேரங்களில் 'இன்டர்நெட் இணைப்பு' கிடைக்காமல் 'செல்போனில் எம்மீஸ் தளம் சுற்றிக் கொண்டிருப் பதையே' 'கடவுளைப் பார்ப்பது போல்' பயபக்தியுடன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், மாணவர்களுக்கு கற்பிக்க முடியாத நிலை ஏற்படுவதாக வும் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், காவல் துறையில் பணிபுரியும் காவ லர்களை ஆளும் கட்சி நிர்வாகிகள் மிரட்டுவதும், வருவாய்த்துறை ஊழியர்கள் மீது மணல் திருட்டு கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்துவதும் என்று, அனைத்து அரசுத் துறைகளை சேர்ந்த ஊழியர் களும் ஏதேனும் ஒரு வகையில் இந்த தி.மு.க. ஆட்சியில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
காலிப்பணியிடங்கள் அனைத்துத் துறைகளிலும் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கைத்தறி ஊழியர்கள் சங்கம், போக்குவரத்து ஊழியர் சங்கங்கள், மருத்துவர் பணியாளர் சங்கங்கள், ஆசிரியர் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர் சங்கங்களையும் அழைத்துப் பேசி, அவர்களுடைய குறைகளை உடனடியாக களையவும், தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், தி.மு.க. அரசின் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வெறும் 26 சதவீத ஊழியர்கள் மட்டுமே இதுவரை இந்த உத்தரவை நிறைவேற்றியுள்ளனர்
- உத்தரப் பிரதேசத்தில் சுமார் 17 லட்சத்து 88 ஆயிரத்து 429 அரசு ஊழியர்கள் உள்ளனர்.
உத்தரப் பிரதேச யோகி ஆதித்தநாத் அரசின் உத்தரவால் அம்மாநிலத்தில் சுமார் 13 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை அரசின் மாநவ் சம்பதா [Manav Sampada] இணையத்தில் கட்டாயமாகப் பதிவேற்ற வேண்டும் என்பதே அந்த உத்தரவு.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில் சொத்து விவரங்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி தேதியாகக் கடந்த வருட டிசம்பர் 31 ஆம் தேதியை நிர்ணயித்திருந்தது அரசு. பின் அதை ஜூன் 30 வரையும், அதன்பின் ஜூலை 31 வரையும் நீட்டித்திருந்து. ஆனால் வெறும் 26 சதவீத ஊழியர்கள் மட்டுமே இதுவரை தங்களின் சொத்து விவரங்களை அரசின் இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.
எனவே ஆகஸ்ட் 31 வரை கடைசி தேதியை மீண்டும் அரசு நீட்டித்திருந்தது. இந்நிலையில் இந்த மாதம் முடிய இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத ஊழியர்களுக்கு இந்த மாதத்திற்கான சம்பளம் கிடையாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சுமார் 17 லட்சத்து 88 ஆயிரத்து 429 அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 26 சதவீதம் பேர உத்தரவை நிறைவேற்றியுள்ள நிலையில், மீதம் இருக்கும் 13 லட்சம் பேர் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத பட்சத்தில் தங்களின் சம்பளத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதிய பணியாளர்களை நியமிக்கக்கூடாது என்பன உள்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் (ஜாக்டோ-ஜியோ) கடந்த 22-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும், இல்லையெனில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்தது. இருப்பினும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் பணிக்கு திரும்பாத மதுரை மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று காலை முதலே கலெக்டர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை அருகே திரண்டனர். நேரம் செல்லச் செல்ல எண்ணிக்கை அதிகரித்தது.
போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஏராளமான ஊழியர்கள் திரண்டதும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
அவர்களை போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். இதனால் போலீசாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீஸ் வேன் மற்றும் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்றனர். மொத்தம் 2,200 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #JactoGeo
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ சார்பில் 22-ந்தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டம் நடந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் இன்று 5-வது நாளாக கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை விளக்கி மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் திரளான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மறியலில் ஈடுட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்துக்கு ஆதரவாக காவல்துறை அரசு பணியாளர்கள், நீதித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடம் காலியிடங்களாக அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.
எனினும் பல இடங்களில் ஆசிரியர்கள் இன்றும் பணிக்கு செல்லவில்லை. இதைத்தொடர்ந்து பணிக்கு வராத ஆசிரியர்களின் விவரம் குறித்து பள்ளி வாரியாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுக்கவும் ஏராளமான பட்டதாரிகள் இன்று காலை முதலே கோவையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் திரண்ட வண்ணம் இருந்தனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் 2,680 தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். தகுதிஅடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 4 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போட்டத்தில் ஈடுபட்டனர். மறியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் போராட்டத்தை கைவிடுமாறும் கூறினர். கைவிட மறுத்தவர்களை கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்தநிலையில் இன்று 5 -வது நாளாக கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதே போல நீலகிரி மாவட்டத்திலும் இன்று 5-வது நாளாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். #JactoGeo






