என் மலர்
உத்தரப் பிரதேசம்
- சூறாவளி காரணமாக பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன.
- உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்க மாநில அரசு உத்தரவிட்டது.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சூறாவளிக் காற்றும் வீசியது.
இந்த பலத்த மழை, சூறாவளி காரணமாக பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் சுவர் இடிந்து விழுந்தன. மின்னல், மின்சாரம் தாக்கியதில் கடந்த 2 நாட்களில் மட்டும் 56 பேர் பலியாகியுள்ளனர்.
பதேபூரில் 6 பேர், கஸ்கஞ்ச் 5 பேர், மீரட், கான்பூர் நகர், புலந்தசாகர், எடா மற்றும் அரையா ஆகியவற்றில் தலா 4 பேரும், கவுதம் புத்தா நகர், கன்னோஜில் தலா 3 பேரும் உள்பட பல்வேறு நகரங்களில் உயிரிழந்தனர்.
மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்க முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது.
லக்னோ:
ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, எஸ்ஆர்ஹெச் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.
இஷான் கிஷன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 94 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அபிஷேக் சர்மா 34 ரன்னும், அனிகேட் வர்மா 26 ரன்னும், கிளாசன் 24 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் அரை சதம் கடந்து 62 ரன்னில் அவுட்டானார்.
விராட் கோலி 43 ரன்னும், ஜிதேஷ் சர்மா 24 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், ஆர்சிபி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
ஐதராபாத் அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், இஷான் மலிங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இதற்கு மறுநாள் அந்த கும்பல் மீண்டும் வந்து மணமகளின் வீட்டை கட்டைகளால் தாக்கி, குடும்ப உறுப்பினர்களை அடித்து துன்புறுத்தினர்.
- குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர், ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் தலித் திருமண ஊர்வலத்தில் ஆதிக்க சாதியினர் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, மதுராவின் நௌஜ்ஹீல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூரேகா கிராமத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணான கல்பனா, அலிகரில் உள்ள நாக்லா பதம் கிராமத்தில் வசிக்கும் ஆகாஷ் ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்தது.
அன்று நள்ளிரவு 12:30 மணியளவில், திருமண ஊர்வலம் DJ பாடல் இசையுடன் நடந்துகொண்டிருந்தபோது, அண்டை கிராமத்திலிருந்து ஜாட் சமூகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உட்பட சுமார் 20-25 பேர் அங்கு வந்தனர். அவர்கள் DJ இசையை நிறுத்த சொல்லி மிரட்டியதாக தெரிகிறது. ஆனால் திருமண வீட்டார் அதற்கு மறுக்கவே அந்த நபர்கள் சாதிய ரீதியாக தூஷணம் செய்து வன்முறைத் தாக்குதலைத் தொடங்கினர்.
ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களை தடிகளாலும் இரும்பு கம்பிகளாலும் அந் கும்பல் தாக்கியது. மணமகனை குதிரை வண்டியிலிருந்து அவரது காலரைப் பிடித்து கீழே இழுத்து தரையில் தள்ளி தாக்குதல் நடத்தினர். மேலும் மீண்டும் வண்டியில் ஏறி திருமண ஊர்வலத்தை நடத்தினால் சுட்டுவிடுவோம் என்று மிரட்டினர்.
தகவலறிந்து போலீசார் வந்தபோது, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. திருமணச் சடங்குகள் காவல்துறையினரின் முன்னிலையில் நிறைவடைந்தன. இரவு முழுவதும் எட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு மறுநாள் அந்த கும்பல் மீண்டும் வந்து மணமகளின் வீட்டை கட்டைகளால் தாக்கி, குடும்ப உறுப்பினர்களை அடித்து, வீட்டுப் பொருட்களையும் சேதப்படுத்தினர். பெண்களும் அநாகரீகமாக நடத்தப்பட்டனர். காயமடைந்த குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலித் பாதுகாப்பு 'பீம் ஆர்மி' ஊழியர்கள் வந்ததும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதுதொடர்பான புகாரின் பேரில் ஜாட் சமூக இளைஞர்கள் மூவர் உட்பட 20-25 அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர், ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. புகார் பெறப்பட்டுள்ளதாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் துணைப்பிரிவு காவல் அதிகாரி குஞ்சன் சிங் தெரிவித்தார்.
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா துல்லியமாக தாக்கியது.
- 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்தியா ராணுவம் தெரிவித்தது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் 9 முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லாமல் இந்தியாவின் முப்படைகளும் துல்லியமாக தாக்குதல் நடத்தியதை நாட்டு மக்கள் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்கள் போன்று இந்திய படைகள் ஆபரேஷன் சிந்தூரின்போது செயல்பட்டனர் என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கே.என். நினைவு மருத்துவமனையின் 25ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
நம்முடைய படைகள் நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள் அல்லது அறுவை சிகிச்சையாளர்கள் போன்று செயல்பட்டன. அறுவை சிகிச்சையாளர்கள், நோய் உள்ள பகுதிகளில் துல்லியமாக கருவிகளை பயன்படுத்துவார்கள். இந்த படைகளில் அது போன்று பயன்படுத்தினர். ஈடுசெய்ய முடியாத துல்லியத்தோடு பயங்கரவாதத்தை வோரோடு அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தினர்.
மே 7ஆம் தேதி இந்திய ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பல பயங்கரவாத தளங்கள் தாக்கப்பட்டது. டாக்டர்களும், வீரர்களும் நாட்டிற்கு முக்கியமான வகையில் சேவையாற்றுவார்கள். ஒருவர் சுகாதாரத்தை பாதுகாப்பது. மற்றொருவர் நாட்டின் பாதுகாப்பை பாதுகாப்பது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
- ஷாஜாத் இந்தியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ. முகவர்களுக்கு பணம் மற்றும் சிம்கார்டுகளை வழங்கி வந்தது தெரியவந்தது.
- தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரண நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானா மாநிலத்தை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசம் ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜாத்.
தொழிலதிபரான இவர் பலமுறை பாகிஸ்தானுக்கு பயணம் செய்த நிலையில், அங்கிருந்து சட்ட விரோதமாக அழகு சாதன பொருட்கள், ஜவுளி, மசாலா பொருட்களை கடத்தி வந்துள்ளார்.
இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு உளவுபார்த்து வருவதாக உத்தரபிரதேச காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் உத்தரபிரதேச சிறப்பு படை போலீசார் ஷாஜாத்தை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் அவரை நேற்று மொராதாபாத்தில் வைத்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் ஷாஜாத் இந்தியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ. முகவர்களுக்கு பணம் மற்றும் சிம்கார்டுகளை வழங்கி வந்தது தெரியவந்தது.
மேலும் ராம்பூர் மாவட்டம் மற்றும் உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களை ஐ.எஸ்.ஐ.க்காக உளவு பார்க்க ஆட்களை சேர்க்க முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரண நடத்தி வருகின்றனர்.
- ஒரு வாரத்திற்கு முன்னதாக 3ஆவது திருமணம் செய்துள்ளார்.
- அடிக்கடி தகராறு ஏற்பட புது மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு மனைவிகள் உடனான திருமண பந்தம் முறிந்த நிலையில், 3ஆவது திருமணம் செய்த நபர், ஒருவாரத்திற்குள் புது மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டம் அமாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ பால் (வயது 44). இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் முடிந்து, இரண்டு மனைவிகளையும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி ஜான்பூர் மாவட்டச் சேர்ந்த ஆர்த்தி பால் (வயது 26) என்பவரை 3ஆவது முறையாக திருமணம் செய்துள்ளது.
திருமணமாகி ஒரு வாரம் கூட ஆகவில்லை. இவர்களுக்கு இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இதுபோன்று வாக்குவாதம் ஏற்பட ராஜூ கோபத்தில் மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் ஆர்த்தி பால் படுகாயம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அருகில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஆர்த்தி பாலை அருகில் உள்ள அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஆர்த்தி பாலை பரிசோதித்து ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்பாக போலீசார் ராஜூவை கைது செய்துள்ளனர். திருமணமாகி ஒரு வாரத்திற்குள் மனைவியை அடித்துக் கொலை செய்ய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சலாவுதீன் சகோதரியை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் ஸ்விட்ஸ் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
- சந்தேகத்தின் பேரில் சலாவுதீன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உத்தரபிரதேசத்தின் சிராவஸ்தியில் 31 வயது நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, குற்றத்தை மறைக்க முயன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தம்பதிகளான சைஃபுதீன் மற்றும் அவரது மனைவி சபீனா ஆகியோர் இந்த வார தொடக்கத்தில் லக்னோவுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு சென்றுள்ளனர். ஆனால் அன்றைய தினமே சைஃபுதீன் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்ததை சபீனாவின் சகோதரர் சலாவுதீன் பார்த்துள்ளார். இதையடுத்து சலாவுதீன் சகோதரியை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் ஸ்விட்ஸ் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் சலாவுதீன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை தொடர்ந்து போலீசார் சைஃபுதீனை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சபீனா குறித்து தெரியாது என்று கூறிய சைஃபுதீனை போலீசார் இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரித்தனர். இதனை தொடர்ந்து சைஃபுதீன் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சபீனா கொலை செய்து குற்றத்தை மறைக்க அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி ஷ்ரவஸ்தி பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் வீசியதாகவும், மேலும் சபீனாவின் கையை எரித்து தோட்டத்தில் மறைத்து வைத்ததாகவும் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சைஃபுதீன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, சபீனாவின் பெற்றோர் கூறுகையில், சைஃபுதீனும், அவரது தாயாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், இதன் காரணமாகவே சபீனை கொலை செய்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.
- அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அனுஷ்கா தலைமறைவானார்.
- மருத்துவர் அனுஷ்காவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பலர் முகம் வீங்கி, உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அனுஷ்கா தலைமறைவானார். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், மருத்துவர் அனுஷ்காவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
முடி மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் அனுஷ்கா ஒவ்வொருவரிடம் ரூ.40,000 முதல் ரூ. 1 லட்சம் வரை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
- மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கொலை தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள பகதூர்பூரை சேர்ந்தவர் தேவேந்திரகுமார். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி மாயா தேவி.
சம்பவத்தன்று தேவேந்திர குமார் திடீரென மாயமானார். போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி ஹரித் கிராமத்தில் ஒரு பிளாஸ்டிக் பையில் மனித கைகளும், கால்களும் கிடந்தன. தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு அருகில் உள்ள கிணற்றில் மனித உடல் கண்டு எடுக்கப்பட்டது.
ஆனால் கொலை செய்யப்பட்டவரின் தலை கிடைக்கவில்லை. இதற்கிடையே கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டது தேவேந்திர குமார் என்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அவரது மனைவி மாயாதேவியை போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். தொடர்ந்து நடந்த விசாரணையில் மாயாதேவிக்கு அதே பகுதியை சேர்ந்த அனில்யாதவ் என்பவருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இவர்களது கள்ளக்காதலை அறிந்த தேவேந்திர குமார் மனைவியை கண்டித்ததால் ஆத்திரமடைந்த அவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கை, கால், தலை என உடல் பாகங்களை 6 துண்டுகளாக வெட்டி நள்ளிரவில் எடுத்து சென்று வெவ்வேறு பகுதிகளில் வீசி எறிந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாயாதேவி மற்றும் அவரது கள்ளக்காதலன் அனில் யாதவ், அவரது கூட்டாளிகள் 2 பேர் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் என 140 பேர் கொல்லப்பட்டனர்.
- சமீபத்தில் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு சிலர் இப்பெயரை சூட்ட தொடங்கி உள்ளனர்.
குஷிநகர்:
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கை மூலம் இந்தியா தாக்கியது. இதில் பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் என 140 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் என்றென்றும் நினைவில் இருக்கும் வகையில், சமீபத்தில் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு சிலர் இப்பெயரை சூட்ட தொடங்கி உள்ளனர்.
அந்தவகையில் உத்தரபிரதேசத்தில் குஷிநகர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவர்களது குடும்பத்தினர் 'சிந்தூர்' என்று பெயரிட்டுள்ளனர் என ஆஸ்பத்திரி முதல்வர் ஆர்.கே.ஷாஹி தெரிவித்தார்.
- சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
- ராகுல் காந்தி இந்து விரோதி என்றும், ராமரை அவமதித்ததாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது வாரணாசி நீதிமன்றத்தில் குற்றவியல் புகார் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 அன்று அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில், ராமரை "புராண கதாபாத்திரம்" என்று அழைத்ததற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகார்தாரர் வழக்கறிஞர் ஹரிசங்கர் பாண்டே இதை வெறுக்கத்தக்க பேச்சு என்றும், சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 196 (மதத்தின் அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்), பிரிவு 356 (அவதூறு) உள்ளிட்டவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று புகார்தாரர் கோரினார்.
இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட வாரணாசி நீதிமன்றம், விசாரணை தேதியை மே 19-ஆம் தேதி நிர்ணயித்தது. மேலும் இந்த புகார் தொடர்பாக ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுபப்பட உள்ளது.
ராகுல் காந்தி இந்து விரோதி என்றும், ராமரை அவமதித்ததாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
- சிறுமி காரில் இருந்து தப்பி, காவல் நிலையத்தை அடைந்து நடந்த சம்பவத்தைப் தெரிவித்தார்.
- தப்பிக்க முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் கால்களில் சுட்டுப் பிடித்தனர்
உத்தரப் பிரதேசத்தில் ஓடும் காருக்குள் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரது தோழி கொலை செய்யப்பட்டார்.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சந்தீப், அமித் மற்றும் கௌரவ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் அந்த 17 வயது சிறுமியையும் அவரது 19 வயது தோழியையும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கிரேட்டர் நொய்டாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் ஒரு காரில் கடத்தப்பட்டனர்.
கடத்தப்பட்டதை உணர்ந்து பெண்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஓடும் காரிலிருந்து 19 வயது பெண்ணை குற்றவாளிகள் கீழே தள்ளிவிட்டனர். மேலும் 17 வயது சிறுமியை மூவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி காரில் இருந்து தப்பி, காவல் நிலையத்தை அடைந்து நடந்த சம்பவத்தைப் தெரிவித்தார்.
பின்னர் அலிகார்-புலந்த்ஷர் நெடுஞ்சாலை அருகே குற்றவாளிகள் மூவரும் பயணித்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். தப்பிக்க முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் கால்களில் சுட்டுப் பிடித்தனர். சாலையில் விழுந்து படுகாயமடைந்த 19 வயது பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.






