என் மலர்
உத்தரப் பிரதேசம்
- குப்பைகளை அகற்றும் ஒப்பந்தங்களிலிருந்து கூட கமிஷன் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர்.
- இதுபோன்ற கருத்துக்களைக் கேட்க உத்தரபிரதேசம் முழுவதும் பாக்கியம் பெற்றுள்ளது
"குப்பையில் இருந்து தங்கம் உருவாக்கும் இயந்திரத்தை மீரட்டில் தயாரித்து வருகிறோம். மிக விரைவில் அது பயன்பாட்டுக்கு வந்துவிடும்" என்று உத்தரபிரதேச பால்வளத்துறை அமைச்சர் தரம்பால் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பாஜக அமைச்சர் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். .
அந்த எக்ஸ் பதிவில், "குப்பைகளை தங்கமாக மாற்றும் இயந்திரங்களைப் பற்றி பேசுவதற்கு முன்பு, கன்னோஜில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள ஒரு பால் ஆலையை செயல்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தரம்பால் சிங் கவனம் செலுத்த வேண்டும்.
ஒருவேளை பாஜகவின் ஊழல் தற்போது மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அவர்கள் இப்போது குப்பைகளை அகற்றும் ஒப்பந்தங்களிலிருந்து கூட கமிஷன் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர் .இதுபோன்ற கருத்துக்களைக் கேட்க உத்தரபிரதேசம் முழுவதும் பாக்கியம் பெற்றுள்ளது" என்று கிண்டலாக தெரிவித்தார்.
- அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அனுஷ்கா தலைமறைவானார்.
- தலைமறைவாக இருந்த பல் மருத்துவர் அனுஷ்கா திவாரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல் மருத்துவர் அனுஷ்கா முடி மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளார். இந்த சிகிச்சைக்காக மருத்துவர் அனுஷ்கா ஒவ்வொருவரிடம் ரூ.40,000 முதல் ரூ. 1 லட்சம் வரை பெற்றுள்ளார்.
மேலும், அவரிடம் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பலர் முகம் வீங்கி, உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அனுஷ்கா தலைமறைவானார். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், மருத்துவர் அனுஷ்காவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த பல் மருத்துவர் அனுஷ்கா திவாரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- எனக்கு அமேதியுடன் பழைய தொடர்பு இருக்கிறது. இது ஒரு குடும்ப உறவு. ரத்த உறவு.
- அத்தகைய உறவுகள் ஒருபோதும் பலவீனமாகாது ஒருபோதும் முறிவதில்லை.
மத்திய முன்னாள் அமைச்சரும், அமேதி தொகுதி முன்னாள் எம்.பி.யுமான ஸ்மிருதி இரானி, ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதற்காக அமேதி சென்றிருந்தார்.
அப்போது ஸ்மிருதி இரானி கூறியதாவது:-
எனக்கு அமேதியுடன் பழைய தொடர்பு இருக்கிறது. இது ஒரு குடும்ப உறவு. ரத்த உறவு. அத்தகைய உறவுகள் ஒருபோதும் பலவீனமாகாது ஒருபோதும் முறிவதில்லை. அமேதி என்னை ஒரு சகோதரியாக ஏற்றுக்கொண்டது. ஒரு சகோதரிக்கும் அவளுடைய வீட்டிற்கும் உள்ள பிணைப்பு அவளுடைய இறுதிச் சடங்கோடுதான் முடிவடையும். நீங்கள் அனைவரும் என்னுடன் கட்டியெழுப்பிய உறவு முறிந்து போக அனுமதிக்கப்படாது.
2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு அமைக்கப்பட்டபோது, கிராமப்புற மேம்பாட்டிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தது.
2014-க்கு முன்பு, பஞ்சாயத்து மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் ரூ.70,000 கோடியாக இருந்தது. இது ரூ.2.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் விளைவாக, இந்தியா இன்று வலுவாக இருப்பது மட்டுமல்லாமல், நமது பொருளாதாரம் இப்போது உலகில் நான்காவது இடத்தில் உள்ளது.
இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.
2019 மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தியை தோற்கடித்தார். 2024 தேர்தலில் கிஷோரி லால் சர்மா ஸ்மிருதி இரானி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
- விளக்கம் கேட்டு மாநில கட்சித் தலைமை நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
- வீடியோவில் காணப்படும் பெண் ஒரு பாஜக தொண்டர், அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லை.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவர் ஒருவர் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி. அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த சம்பவம், ஏப்ரல் 12 ஆம் தேதி கோண்டா நகரில் நடந்தது.
சிசிடிவி காட்சிகளின்படி, பாஜக கோண்டா மாவட்டத் தலைவர் அமர் கிஷோர் காஷ்யப், கட்சி தலைமையகத்தின் படிகளில் நின்று கொண்டு ஒரு பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது.
இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு தலைவர் தலைமைக்கு புகார் அளித்துள்ளார். இதையாவது காஷ்யப் இடம் விளக்கம் கேட்டு மாநில கட்சித் தலைமை நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
தனது வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அமர் கிஷோர் காஷ்யப் விளக்கம் அளித்தார். இவை அனைத்தும் தனக்கு எதிராக தனது எதிரிகள் செய்யும் சதி என்று அவர் குற்றம் சாட்டினார்.
"வீடியோவில் காணப்படும் பெண் ஒரு பாஜக தொண்டர், அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் ஓய்வெடுக்கச் சொன்னபோது, கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றேன். அவர் படிக்கட்டுகளில் ஏறும்போது மயக்கம் அடையும் நிலையில் இருந்தபோது, அவருக்கு உதவி செய்தேன்.
சம்பவத்தை தவறாகப் புரிந்துகொண்டு எனக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்ப சிசிடிவி காட்சிகள் பயன்படுத்தப்படுகிறது" என்று காஷ்யப் கூறியுள்ளார்.
முன்னதாக டெல்லி - மும்பை விரைவு சாலையில் பாஜக உறுப்பினர் ஒருவர் நடுரோட்டில் பெண்ணுடன் உடலுறவு கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை
- பிரதான கோபுரத்திலிருந்து 200 மீட்டர் வரம்பிற்குள் திறம்பட இயங்கும்.
- அதிநவீன டிரோன் நியூட்ரலைசேஷன் அமைப்பை நிறுவ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட தாஜ்மஹாலுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து, மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வான்வெளியில் ஏற்படும் ஆபத்துகளை திறம்பட சமாளிக்க அதிநவீன டிரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏசிபி சையத் அரிப் அகமது கூறுகையில், தாஜ்மஹால் வளாகத்தில் டிரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்படும், இது 7 முதல் 8 கிலோமீட்டர் வரம்பிற்குள் செயல்படும்.
இந்த அமைப்பு தற்போது பிரதான கோபுரத்திலிருந்து 200 மீட்டர் வரம்பிற்குள் திறம்பட இயங்கும் என்றும், ஏதேனும் டிரோன் இந்தப் பகுதிக்குள் நுழைந்தால், அது அதன் சிக்னல்களைக் கண்டறிந்து தானாகவே அதை ஜாம் செய்து, அதைச் செயல்படாமல் செய்துவிடும் என்றும் அவர் விளக்கினார்.
இந்த டிரோன் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாடு குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலா தலங்களில் தாஜ்மஹாலும் ஒன்றாகும். இங்கு பாதுகாப்பு தற்போது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) மற்றும் உ.பி. காவல்துறையினரால் கண்காணிக்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் அதிநவீன டிரோன் நியூட்ரலைசேஷன் அமைப்பை நிறுவ அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான தகுந்த ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
- பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
- அதிகாலை 5.30 மணி வரை டெல்லியில் 81.2 மி.மீ. கனமழை பெய்துள்ளது.
டெல்லியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக உத்தரப் பிரதேசத்தில் காசியாபாத்தில் ஒரு காவல் நிலையம் இடிந்து விழுந்தது.
இடிபாடுகளுக்குள் சிக்கி எஸ்.ஐ. இறந்தார். வீரேந்திர மிஸ்ரா (58) ஏசிபி அங்கூர் விஹார் அலுவலகத்தில் எஸ்ஐ . ஆகப் பணிபுரிந்து வந்தார்.
மழை காரணமாக நிலையத்தில் சிக்கித் தவித்த மிஸ்ரா, கூரை இடிந்து விழுந்து உள்ளே சிக்கினார். இடிபாடுகளில் சிக்கியபோது ஏற்பட்ட பலத்த காயங்களால் மிஸ்ரா இறந்ததாக மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, சனிக்கிழமை இரவு 11 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை டெல்லியில் 81.2 மி.மீ. கனமழை பெய்துள்ளது.
- உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
- அனுமர் கோவிலிலும் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான இந்திய வீரர் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி இன்று மனைவி அனுஷ்கா சர்மாவுடன் உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதேபோல அனுமர் கோவிலிலும் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது விராட்கோலி நிருபர்கள் சந்திப்பை தவிர்த்தார்.
- ஊழல் விசாரணை நடத்திய அதிகாரியை பழிவாங்க ரெயில்வே முன்னாள் வீரர் திட்டம்.
- பீகாரில் இருந்து லக்னோ சென்று வில் அம்பால் தாக்குதல் நடத்தியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சிபிஐ அலுவலகம் முன் உதவி துணை-ஆய்வாளரை ரெயில்வே முன்னாள் ஊழியர் வில் அம்பால் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் உதவி துணை ஆய்வாளர் ஏ.எஸ்.ஐ. விரேந்திர சிங் (55) மார்பக்கத்தில் அம்பு பாய்ந்து காயம் அடைந்தார்.
இதன் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த தினேஷ் முர்மு (65) என்பவர் ரெயில்வேயில் கேங்மேனாக பணிபுரிந்தள்ளார். கடந்த 1993-ல் ரெயில்வேயில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்ததில் விரேந்திர சிங் ஒருவராக இருந்துள்ளார்.
ஊழல் தொடர்பான விசாரணை முடிவில் தினேஷ் முர்மு, வேலையை இழந்துள்ளார். இந்த நிலையில்தான் பழிக்குபழி வாங்கும் விதமாக தற்போது லக்னோவில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வெளியில் வில் அம்புகளை கொண்டு தாக்கல் செய்துள்ளார்.
தினேஷ் முர்மு கடந்த 2005ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரியை சந்திக்க டெல்லிக்கு சென்றார். அப்போது போலீசாரை தாக்கியதால் சிறைக்குச் சென்றார். 2015ஆம் அண்டு ஜான்பூர் ரெயில் நிலையத்தில் ஜிஆர்பி வீரரை தாக்கியதால் மூன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் விசாரணை நடத்திய அதிகாரியை தாக்கியுள்ளார்.
- தீப்தி சர்மா சார்பில் அவரது சகோதரர் சுமித் சர்மா போலீசாரிடம் இந்தப் புகாரை அளித்தார்.
- இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக உ.பி. வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் மீது அந்த அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
குடும்ப அவசர நிலை எனக் கூறி ஆருஷியும் அவரது தாயாரும் தன்னிடம் இருந்து இருந்து பணம் வாங்கி ஏமாற்றியதாக தீப்தி சர்மா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆக்ராவில் உள்ள தனது குடியிருப்பில் புகுந்து தங்கம், வெள்ளி, ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தையும் ரொக்கத்தை ஆருஷி கோயல் திருடிச் சென்றதாகவும் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
தீப்தி சர்மா சார்பில் அவரது சகோதரர் சுமித் சர்மா போலீசாரிடம் இந்தப் புகாரை அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இந்திய ராணுவத்தின் முக்கிய ஆயுதங்கள் மற்றும் வீரர்களின் படங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
- பனாராசி புடவை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பயனர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த 7-ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த விஜய் பவசிங் என்ற நெசவாளர், ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு பனாரஸ் சேலையை வடிவமைத்துள்ளார்.
அதில், இந்திய ராணுவத்தை கவுரவிக்கும் வகையில் பிரமோஸ், ரபேல், எஸ்.400, ஐ.என்.எஸ். விக்ராந்த் உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் முக்கிய ஆயுதங்கள் மற்றும் வீரர்களின் படங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
சுமார் 6.5 மீட்டர் நீளம் கொண்ட அந்த புடவையின் ஒரு பகுதியில் 'ஆபரேஷன் சிந்தூர்' என தையல் செய்யப்பட்டிருந்தது. புடவையின் மையப்பகுதியில் ரபேல், பிரமோஸ், எஸ்.400, இந்திய வீரர்கள் படையின் காட்சிகள் மிக நுட்பமான கலை வடிவத்தில் இடம் பெற்றிருந்தன.
இந்த புடவையை கேப்டன் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோருக்கு நேரில் வழங்க உள்ளதாக வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த பனாராசி புடவை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பயனர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது.
இதற்கு முன்னதாக விஜய் பவசிங் அயோத்தியாவில் ஸ்ரீ ராமலாலா விழாவுக்காக ஒரு சிறப்பு பனாரசி புடவையும் வடிவமைத்து பாராட்டு பெற்றுள்ளார். இவர் தயாரித்த சிறப்பு தலை பட்டை ஒன்றை பிரதமருக்கு நேரில் வழங்கி உள்ளார்.
- அந்த ஆட்டோவில் ஓட்டுனருடன் அவரின் 3 நண்பர்களும் இருந்தனர்.
- ஆட்டோவை இருண்ட, வெறிச்சோடிய பாதையில் செலுத்தினர்.
உத்தரப் பிரதேசத்தில் பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க கல்லூரி மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
லக்னோவில் பல்கலைக்கழகம் ஒன்றில் படிக்கும் நர்சிங் மாணவி கடந்த திங்கள்கிழமை மாலை பர்லிங்டன் பகுதியில் உள்ள தனது மாமாவின் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
தகவல்களின்படி, அந்தப் பெண் டெதி புலியாவை அடையும் நோக்கில் பர்லிங்டன் கிராசிங்கிலிருந்து ஒரு ஆட்டோவில் ஏறினார். அந்த ஆட்டோவில் ஓட்டுனருடன் அவரின் 3 நண்பர்களும் இருந்தனர்.
ஆட்டோ தனது சேருமிடத்திற்கு செல்லாமல் குர்சி சாலையை நோக்கி வேகமாகச் சென்றபோது அந்தப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்தப் பெண் ஓட்டுநரிடம் ஆட்டோவை நிறுத்துமாறு பலமுறை கேட்டார். ஆனால் இதன் பின் அவர்கள் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொள்ளத் தொடங்கினர்.
மாணவி எதிர்த்து கத்தியபோது, அவரின் வாயை வலுக்கட்டாயமாக மூடி, ஆட்டோவை இருண்ட, வெறிச்சோடிய பாதையில் செலுத்தினர்.
அப்போது அந்தப் பெண் தனது உயிருக்கு பயந்து, ஓடும் வாகனத்திலிருந்து குதித்தார். இதில் அவரது தலை, கைகள் மற்றும் முழங்கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
பெண் ஒருவர் ஆட்டோவில் இருந்து குதிப்பதைப் பார்த்த ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் காயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், ஆட்டோ செல்லும் வழியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, ஓட்டுநர் சத்யம் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளான அனுஜ் குப்தா என்ற ஆகாஷ், ரஞ்சித் சவுகான் மற்றும் அனில் சின்ஹா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
- 1982 ஆம் ஆண்டில், பிரயாக்ராஜ் பிரிவு நீதிமன்றத்தால் லக்கானும் மேலும் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
- மேல்முறையீட்டு செயல்முறை நடந்து கொண்டிருக்கும்போதே, சக குற்றவாளிகள் மூவர் இறந்துவிட்டனர்.
கொலைக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட 104 வயது முதியவர், 43 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
விடுவிக்கப்பட்டவர் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கவுரே கிராமத்தைச் சேர்ந்த லகான்.
சிறைச்சாலை பதிவுகளின்படி, லகான் 1921 இல் பிறந்தார். 1977 ஆம் ஆண்டு இரு குழுக்கள் இடையே நடந்த மோதலின் போது பிரபு சரோஜ் என்ற நபரைக் கொன்ற வழக்கில் மேலும் மூவருடன் லகான் கைது செய்யப்பட்டார்.
1982 ஆம் ஆண்டில், பிரயாக்ராஜ் பிரிவு நீதிமன்றத்தால் லக்கானும் மேலும் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, நான்கு குற்றவாளிகளும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இருப்பினும், மேல்முறையீட்டு செயல்முறை நடந்து கொண்டிருக்கும்போதே, சக குற்றவாளிகளில் மூவர் இறந்துவிட்டனர்.
நீண்ட சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு, அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணையை முடித்து, மே 2 அன்று லகான் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கி அவரை விடுவித்தது.
குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட லகான், கடந்த செவ்வாய்க்கிழமை சிறையில் இருந்து விடுதலையாகி தனது மகள் வீட்டிற்குச் சென்றார்.






