search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roti"

    • சிவப்பரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
    • சிவப்பரிசியில் புரதம், நார்ச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    சிவப்பரிசி - 1 கப்

    வெங்காயம் - ஒன்று

    பச்சை மிளகாய் - ஒன்று

    சீரகம் - ஒரு டீஸ்பூன்

    கேரட் - ஒன்று

    தேங்காய்த்துருவல் - 5 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    சிவப்பரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் போட்டு அரைத்து சிவப்பரிசி மாவு தயார் செய்துகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு அதனுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றாகப் கலந்து அதில் வெந்நீரைச் சிறிது சிறிதாக விட்டு, சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை அரை மணி நேரம் ஈர துணியால் மூடி வைக்கவும். பின்னர் சிறு சிறு உருண்டையாக்கி வட்டமாகத் தட்டி வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த ரொட்டியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    இப்போது சத்தான சுவையான சிவப்பரிசி ரொட்டி ரெடி.

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி ஓட்ஸை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று ஓட்ஸ், வெஜிடபிள் சேர்த்து ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 250 கிராம்,
    உப்பு - தேவைக்கு,
    ஓட்ஸ் - 100 கிராம்,
    கொத்தமல்லித்தழை - சிறிது,
    துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - 1,
    துருவிய பீட்ரூட் - 1 டேபிள்ஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 3,
    எண்ணெய் - 30 மி.லி.,
    சீரகம் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஓட்ஸை சூடான கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கோதுமை மாவு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு போட்டு கலந்து, கேரட், பீட்ரூட், தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சிறு உருண்டைகளாக பிடித்து லேசாகத் தேய்த்து கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்து மொறுமொறுவென்று வந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த மிளகு ரொட்டியை இரவு நேர உணவாக உட்கொள்ளும்போது எளிதில் ஜீரணமாகும். இன்று இந்த ரொட்டியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
    உப்பு தேவையான அளவு.



    செய்முறை:

    ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

    பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாகப் பிசைந்துகொள்ளவும். 2 மணி நேரத்துக்கு மூடி வைக்கவும்.

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருண்டைகளை இரு கைகளின் நடுவில் வைத்துச் சிறிது அழுத்தம் கொடுத்து வட்டமாகச் செய்துகொள்ளவும். பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும்.

    சூடான தோசைக்கல்லில் ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கங்களிலும் நன்கு உப்பிக்கொண்டு வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

    சூப்பரான மிளகு ரொட்டி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அரிசி மாவில் காய்கறிகளை சேர்த்து செய்யும் ரொட்டி சூப்பராக இருக்கும். ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இன்று இந்த ரொட்டி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    கேரட், கோஸ், தேங்காய், வெள்ளரிக்காய் (அனைத்தும் துருவியது) - 2 கப்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 3
    அரிசி மாவு - 2 கப்
    சீராகத் தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    சீரகம் - 2 டீஸ்பூன்
    பெருங்காயம் - சிட்டிகை
    வெண்ணெய் - 100 கிராம்



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் காய்கறித் துருவல், சீரகம், சீரகப் பொடி, உப்பு, பெருங்காயம், நறுக்கிய வெங்காயம், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்னர் அதில் தேவையான அளவு நீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து அரைமணி நேரம் அப்படியே வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை ஆரஞ்சு பழ அளவுக்கு எடுத்து, தோசைக்கல்லில் வைத்து மெலிதாகத் தட்டுங்கள். சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான வெஜிடபிள் அரிசி ரொட்டி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×